5 முறை சாம்பியனான மும்பைக்கு வந்த சோதனை…விடாது துரத்தும் தொடர் தோல்விகள் – தகரும் பிளே-ஆப் கனவு?

மும்பை, ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற மும்பை இந்தியன்ஸ் அணி, நடப்பு சீசனில் விளையாடிய அனைத்து போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது.  2008 ஆம் ஆண்டு தொடங்கி 14 ஆண்டுகள் நடைபெற்ற தொடர்களில் மும்பை அணி ஐந்து முறை சாம்பியன் ஆகியுள்ளது. ஆனால், இந்த ஆண்டு நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் மும்பை அணி விளையாடிய எட்டு போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.  இந்த சீசனின் மும்பை விளையாடிய முதல் போட்டியில் டெல்லியிடம் 4 … Read more

பிரான்சில் போலீசார் மீது வெடிபொருட்களை வீசிய மக்கள் – இரு தரப்பு மோதலால் பரபரப்பு

பாரிஸ், பிரான்ஸ் அதிபர் தேர்தலில் மீண்டும் இம்மானுவேல் மேக்ரான் வெற்றி பெற்றுள்ளார். நேற்று வெளியிடப்பட்ட பிரான்ஸ் தேர்தல் முடிவுகளின்படி, தற்போதைய அதிபர் இம்மானுவேல்  மேக்ரான் 58.8 சதவீதம் வாக்குகள் பெற்று மீண்டும் அதிபராக பதவியேற்க உள்ளார்.  அவரை எதிர்த்து போட்டியிட்ட மரைன் லு பென் 42 சதவீதம் வாக்குகள் பெற்றார். இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்றுள்ள மேக்ரானுக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், பிரான்ஸ் அதிபராக மீண்டும் இம்மானுவேல் மேக்ரான் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு பிரான்சில் ஆங்காங்கே … Read more

குஜராத் கடற்கரை அருகே ரூ.280 கோடி மதிப்புள்ள போதைப் பொருளுடன் பிடிபட்ட பாகிஸ்தான் படகு

அகமதாபாத், இந்தியகடலோரக் காவல்படையினர் குஜராத் கடற்கரை அருகே பாதுகாப்புப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக பாகிஸ்தானை சேர்ந்த படகு ஒன்று இந்திய கடல் எல்லைக்குள் வந்துள்ளது. இதையடுத்து அந்த படகை பிடித்து அதில் இருந்தவர்களிடம் விசாரித்தபோது, அதில் ரூ.280 கோடி மதிப்புள்ள ஹெரோயின் போதைப்பொருள் இருப்பது தெரிய வந்தது.  இதையடுத்து படகில் இருந்த ரூ.280 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்த அதிகாரிகள், படகுடன் சேர்த்து அதில் இருந்த 9 பேரையும் விசாரணைக்காக குஜராத்தின் கட்ச் … Read more

ஐ.பி.எல். கிரிக்கெட்: சென்னை- பஞ்சாப் அணிகள் இன்று மீண்டும் மோதல்

மும்பை, 10 அணிகள் இடையிலான 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் மராட்டிய மாநிலம் மும்பைமற்றும் புனேயில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் 5 அணிகளுடன் தலா 2 முறை, 4 அணிகளுடன் தலா ஒரு முறை என்று மொத்தம் 14 லீக் ஆட்டங்களில் விளையாட வேண்டும்.  லீக் சுற்று முடிவில் டாப்-4 இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப்போட்டிக்கு முந்தைய பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். அடுத்த சுற்றை எட்ட குறைந்தது 8 வெற்றிகள் தேவைப் படும். … Read more

இந்தியாவின் உணவு ஏற்றுமதி சிரமங்களுக்கு விரைவில் தீர்வு – உலக வர்த்தக அமைப்பு உறுதி!

வாஷிங்டன், இந்தியாவிலிருந்து உலக நாடுகளுக்கு உணவு தானியங்களை ஏற்றுமதி செய்வதில் உள்ள பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என்று உலக வர்த்தக நிறுவன (டபிள்யூ.டி.ஓ) பொது இயக்குநர்  நகோஸி ஒகோன்ஜோ இவேலா தெரிவித்தார். இந்தியா தற்போது 20 நாடுகளுக்கு கோதுமையை ஏற்றுமதி செய்கிறது. இந்த ஆண்டு 1.5 கோடி டன் கோதுமையை ஏற்றுமதி செய்ய இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த ஆண்டு 11.10 கோடி டன் அளவுக்கு உற்பத்தி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் நடப்பாண்டில் இந்தியாவின் தானிய … Read more

புல்டோசரை கொண்டு வந்து ஏ.டி.எம் இயந்திரத்தை தூக்கி சென்ற திருடர்கள்..! வைரலாகும் வீடியோ

மும்பை, சமூகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் திருட்டு, கொள்ளை போன்ற பல குற்ற சம்பவங்கள் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளன. அதற்கு அதிகரித்து வரும் விலைவாசியும், வேலையில்லா திண்டாட்டமும் காரணமாக கருதப்படுகிறது.  ஏ.டி.எம் மையத்தில் பணம் கொள்ளை போனது என்ற செய்தியை பலமுறை நாம் கேள்விபட்டிருக்கிறோம். ஆனால், ஏடிஎம் இயந்திரத்தை அப்படியே பெயர்த்து எடுத்துக் கொண்டு போன சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. புல்டோசர் கொண்டு ஏ.டி.எம் இயந்திரம் அபேஸ்  மராட்டிய மநிலம் சாங்க்லீ பகுதியில் உள்ள ஒரு ஏ.டி.எம் … Read more

இந்தியா வருகிறது தென்ஆப்பிரிக்க அணி

மும்பை, ஐ.பி.எல். முடிந்ததும் தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி ஜூன் மாதம் இந்தியாவுக்கு வந்து 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது. இந்தியா- தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி ஜூன் 9-ந்தேதி டெல்லியில் நடக்கிறது.  அதைத் தொடர்ந்து 2 முதல் 5-வது ஆட்டங்கள் முறையே கட்டாக் (ஜூன்.12), விசாகப்பட்டிணம் (ஜூன்.14), ராஜ்கோட் (ஜூன்.17), பெங்களூரு (ஜூன்.19) ஆகிய நகரங்களில் நடக்கிறது.  அக்டோபர்-நவம்பர் மாதம் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி … Read more

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இஸ்ரேலின் உண்மையான நண்பர் – பிரதமர் நாப்தலி பென்னட்

டெல் அவிவ், இஸ்ரேலுக்கு வருகை தருமாறு அந்நாட்டின் பிரதமர் நாப்தலி பென்னட் விடுத்த அழைப்பை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஏற்றுக்கொண்டார். இது குறித்து இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், “வரும் மாதங்கலில் இஸ்ரேலுக்கு வர விரும்புவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார். பிரதமர் நாப்தலி பென்னட் விடுத்த அழைப்பை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஏற்றுக்கொண்டார்” என்று தெரிவிக்கப்பட்டது. அமெரிக்க பயங்கரவாதப் பட்டியலில் இருந்து  ‘ஈரானின் இஸ்லாமியப் புரட்சிக் காவலர் படையை (ஐ … Read more

பிரதமர் இல்லத்தின் முன் தொழுகை நடத்த அனுமதி வேண்டும்; மந்திரி அமித்ஷாவுக்கு கடிதம் அனுப்பிய தேசியவாத காங்கிரஸ் தலைவர்

மும்பை, மராட்டிய முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேவின் மாதோஸ்ரீ இல்லம் முன் அனுமன் பஜனை பாட இருக்கிறோம் என அமராவதி எம்.பி. நவ்னீத் ரானா மற்றும் எம்.எல்.ஏ.வான அவரது கணவர் ரவி ரானா ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு  கூறினர்.  இந்த விவகாரம் சர்ச்சையானது.  இந்த நிலையில், இந்த சர்ச்சை விவகாரத்துக்கு பதிலடி தரும் விதமாக, மத்திய உள்துறை மந்திரி அமித் ஷாவுக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான பஹ்மிதா ஹாசன் கான் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.  … Read more

விராட் கோலி வலுவாக மீண்டு வருவார் – பெங்களூரு பயிற்சியாளர் சஞ்சய் பங்கர் பேட்டி

மும்பை, ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வரும் 33 வயதான விராட் கோலி ரன் எடுக்க முடியாமல் தடுமாறுவது விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது. நடப்புதொடரில் ஒரு அரைசதம் கூட அடிக்காத அவர் 8 ஆட்டங்களில் 119 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். அதுவும் கடைசி இரு ஆட்டங்களில் சந்தித்த முதல் பந்திலேயே ஆட்டமிழந்து கோல்டன் டக்-அவுட் ஆகியிருக்கிறார். அவரது பார்ம் குறித்து பெங்களூரு அணியின் தலைமை பயிற்சியாளர் சஞ்சய் பங்கரிடம் நிருபர்கள் கேட்ட போது, ‘கோலி, … Read more