பிரான்ஸ் அதிபர் தேர்தலில் இம்மானுவேல் மேக்ரான் மீண்டும் வெற்றி! உலக தலைவர்களிடம் இருந்து குவியும் வாழ்த்து!!

பாரிஸ், பிரான்ஸ் அதிபர் தேர்தலில் மீண்டும் இம்மானுவேல் மேக்ரான் வெற்றி பெற்றதற்கு மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். நேற்று வெளியிடப்பட்ட பிரான்ஸ் தேர்தல் முடிவுகளின்படி, தற்போதைய அதிபர் இம்மானுவேல்  மேக்ரான் 58.8 சதவீதம் வாக்குகள் பெற்று மீண்டும் அதிபராக பதவியேற்க உள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட மரைன் லு பென் 42 சதவீதம் வாக்குகள் பெற்றார்.  இரண்டாவது முறையாக அதிபராக பதவியேற்றுள்ள மேக்ரானுக்கு உலக தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஸ்பெயின், சுவீடன், ருமேனியா, லிதுவேனியா, பின்லாந்து, … Read more

'ஹிஜாப்' சர்ச்சையைத் தொடர்ந்து கர்நாடக பள்ளிக் கூடத்தில் 'பைபிள்' சர்ச்சை

பெங்களூரு கர்நாடகாவில் கடந்த ஜனவரி மாதம் முதலே ஹிஜாப் சர்ச்சை இருந்து வந்தது. முதலில் அங்குள்ள சில கல்லூரிகளில் ஹிஜாப் அணியத் தடை விதிக்கப்பட்டது. அப்படியே அந்தத் தடை வேறு சில அண்டை மாவட்டங்களுக்கும் பரவியது. கல்லூரி நிர்வாகங்களின் இந்த உத்தரவை எதிர்த்து முஸ்லீம் மாணவிகள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து முஸ்லீம் மாணவிகள் சார்பில் கர்நாடக ஐகோர்ட்டில்  வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரணை செய்த ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ரித்து ராஜ் அமர்வு, கல்வி நிறுவனங்களில் … Read more

கேலலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டு பெங்களூருவில் தொடங்கியது

பெங்களூரு, இளையோருக்கான 2-வது கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டு போட்டிகள் பெங்களூருவில் உள்ள கான்டீரவா ஸ்டேடியத்தில் நேற்று கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாகதொடங்கியது.  போட்டியை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு தொடங்கி வைத்தார். விளையாட்டை ஊக்குவிக்கும் பிரதமர் மோடியின் வீடியோ பேச்சு விழாவில் ஒளிபரப்பப்பட்டது.  வருகிற 3-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டியில் 200 பல்கலைக்கழகங்களை சேர்ந்த 3, 879 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் 20 வகையான விளையாட்டுகளில் பங்கேற்கிறார்கள்.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 46.20 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 226 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.  கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 கோடியே 94 லட்சத்து 68 ஆயிரத்து 263 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 4 கோடியே … Read more

பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீர் பயணம்; ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்!

புதுடெல்லி, தேசிய பஞ்சாயத்து ராஜ் தின கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்கு இன்று பிரதமர் மோடி ஜம்மு காஷ்மீர் செல்ல இருக்கிறார். இன்று காலை 11:30 மணிக்கு நாட்டில் உள்ள அனைத்து கிராம சபைகளுடன் அவர் உரையாற்றுவார். அங்கு ரூ. 20 ஆயிரம் கோடி மதிப்பிலான பல்வகை வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் தொடங்கிவைக்கவும் அடிக்கல் நாட்டவும் உள்ளார். தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீர் பிராந்தியங்களை நெருக்கமாகக் கொண்டுவர உதவுகின்ற பனிஹால் க்வாசிகண்ட் சாலையில் சுரங்கப்பாதையை பிரதமர் திறந்துவைப்பார். மேலும், தில்லி – அமிர்தசரஸ் – … Read more

சதங்களின் நாயகன்.. யுகத்தின் தலைவன் – கிரிக்கெட்டின் கடவுளுக்கு பிறந்தநாள் இன்று..!

மும்பை சச்சின் தெண்டுல்கர் பெயர் அனைத்தையும் சொல்கிறது. கிரிக்கெட்டின் கடவுள், மாஸ்டர் பிளாஸ்டர், கிரிக்கெட் லிஜண்ட்  கிரிக்கெட் உலகில் அவரது அசாதாரண செயல்திறனுக்காக வழங்கப்பட்ட தலைப்புகளில் சில மட்டுமே. சச்சின் 2013 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அனைத்து வகையான சர்வதேச கிரிக்கெட்டிலும் ஓய்வு பெற்றார். கிரிக்கெட்டின் கடவுளுக்கு இன்று 49 வயதாகிறது. சச்சின் தெண்டுல்கர் பிறந்த நாளை  முன்னிட்டு அவருக்கு  வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. உலகம் முழுவதும் உள்ள  அவரது ரசிகர்கள் விளையாட்டு வீரர்கள் முக்கிய … Read more

ஷாங்காய் மாநகரில் ஏப்ரல்-26 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு – சீன அரசு அதிரடி உத்தரவு!

பீஜிங், சீனாவின் வணிக மற்றும் நிதி தலைநகராக விளங்கும் ஷாங்காய் மாநகரில், கடந்த 3 வாரங்களுக்கும் மேலாக பொதுமுடக்கம் அமலில் உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் வாகனத் தொழில் கடும் இழப்பை சந்தித்துள்ளது. இது சர்வதேச நிறுவனங்களுக்கு பெரும் அடியை ஏற்படுத்தியுள்ளது. ஜீரோ கொரோனாகொள்கையை சீன அரசு கடைபிடித்து வருவதால், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு போன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஷாங்காய், சாங்சுன் உள்ளிட்ட நகரங்களில், கொரோனா பரவல் தற்போது கோரத் தாண்டவமாடி வருகிறது. … Read more

இந்தியாவின் புவிசார் அரசியல் மற்றும் பொருளாதார மாநாட்டில் பங்கேற்க ஐரோப்பிய ஆணைய தலைவர் டெல்லி வருகை

புதுடெல்லி, ஐரோப்பிய ஆணைய தலைவர் ஏப்ரல் 24 மற்றும் 25ம் தேதிகளில் இந்தியா வருகிறார் என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஐரோப்பிய ஆணைய தலைவர் உர்சுலா வொன் டெர் லியென் இன்று அதிகாலை தலைநகர் டெல்லி வந்தடைந்தார். அவருக்கு அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.  இந்தியா வந்துள்ள உர்சுலா வொன் டெர் லியென், ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேச உள்ளார். அப்போது இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை … Read more

ஆசிய மல்யுத்த போட்டி: இந்திய வீரர் ரவிகுமார் தங்கம் வென்று சாதனை

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி மங்கோலியாவில் நடந்து வருகிறது. இதில் 57 கிலோ உடல் எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில், டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய வீரரான ரவிகுமார் தாஹியா 12-2 என்ற புள்ளி கணக்கில் கஜகஸ்தானின் ரஹாத் கால்ஜானை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை தனதாக்கினார். இதன் மூலம் அரியானாவை சேர்ந்த 24 வயதான ரவிகுமார் ஆசிய சாம்பியன்ஷிப்பில் தொடர்ச்சியாக 3 தங்கப்பதக்கம் வென்ற முதல் இந்திய வீரர் என்ற பெருமையை சொந்தமாக்கினார். அவர் ஏற்கனவே 2020, 2021-ம் ஆண்டுகளிலும் … Read more

நைஜீரியாவில் எண்ணெய் ஆலையில் பயங்கர தீ விபத்து: பலி எண்ணிக்கை 100 ஆக உயர்வு

நைஜீரியாவில் பெரும்பாலான மக்கள் வறுமையில் வாழும் நிலையில், பல இடங்களில் எண்ணெய் சுரங்கங்கள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டு செயல்படுகின்றன. இந்நிலையில்,ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நைஜீரியாவின் தெற்கு மாநிலமான இமோவில் உள்ள சட்டவிரோத எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 100-க்கும் மேற்பட்டோர் அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்து உயிரிழந்த நிலையில் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். குறிப்பாக,அடையாளம் தெரியாத எரிந்த உடல்கள் அப்பகுதியில் சிதறிக் கிடக்கின்றன.இந்த பெரும் விபத்துக்கு பிறகு சட்டவிரோத … Read more