தினசரி கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரிப்பு: ஒரு நாளில் 2,593 பேருக்கு பாதிப்பு

புதுடெல்லி, நாட்டில் தற்போது கொரோனா வைரஸ் பெருந்தொற்று பாதிப்பு தினமும் ஏறுமுகம் கண்டு வருகிறது.  நேற்று முன் தினம் 2,451 நேற்று 2,527 ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 2,593 ஆக உயர்ந்தது.  இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4,30,54,952 லிருந்து 4,30,57,545 ஆக உயர்ந்துள்ளது.   ஒரே நாளில் கொரோனாவுக்கு 44 பேர் பலியாகினர். இதுவரை 5,22,193 பேர் உயிரிழந்தனர் இந்தியாவில் ஒரே நாளில் 1,755 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.  இதுவரை … Read more

ஐ.பி.எல். பிளே-ஆப் சுற்று ஆட்டங்கள் கொல்கத்தா, ஆமதாபாத்தில் நடக்கும்- கங்குலி

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் தற்போது லீக் சுற்று ஆட்டங்கள் மும்பை மற்றும் புனேயில் நடந்து வருகிறது. லீக் முடிந்து பிளே-ஆப் சுற்று ஆட்டங்களை கொல்கத்தா மற்றும் ஆமதாபாத்தில் நடத்துவது என்று ஐ.பி.எல். உயர்மட்ட குழு கூட்டத்தில் நேற்று முடிவு செய்யப்பட்டது. இதன்படி இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதி சுற்று (மே 24-ந்தேதி), வெளியேற்றுதல் சுற்று (மே 26-ந்தேதி) கொல்கத்தா ஈடன் கார்டனிலும், இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதி சுற்று (மே 27-ந்தேதி), இறுதிப்போட்டி (மே 29-ந்தேதி) ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி … Read more

இலங்கையில் பொருளாதார நெருக்கடியை கண்டித்து பொதுமக்கள் தொடர் போராட்டம்

கொழும்பு, இலங்கையில் நிலவரும் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வருகிறது.  இந்நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் இருந்து கண்டன ஆர்ப்பாட்டம் தொடங்கியது. இதில், நூற்றுக்கணக்கானோர் பங்கேற்று, அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினர். அப்போது, போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஆட்டோ ஓட்டுநர்களும் பங்கேற்று ஊர்வலமாக சென்றனர்.  அத்தியாவசியப் பொருட்களின் விலையேற்றத்திற்கு எதிராகவும், காணாமல் ஆக்கப்பட்டோருக்கு பதில் சொல் என்றும் அவர்கள் பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினர். … Read more

டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை அதிகரிப்பு: பிரதமர் மோடி பெருமிதம்

புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று நாட்புதுடெல்லி, பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை அன்று நாட்டு மக்களிடையே அகில இந்திய வானொலி மூலம் ‘மனதின் குரல்‘ (மன்கிபாத்) என்ற நிகழ்ச்சி வழியாக உரையாற்றி வருகிறார். அந்தவகையில் இந்த மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று நரேந்திர மோடி நாட்டு மக்களிடையே உரையாற்றும் நிகழ்ச்சி தொடங்கி நடைபெற்றது. அப்போது பேசிய பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர்களுக்கான அருங்காட்சியகத்தின் சிறப்பம்சம் குறித்து … Read more

ஐ.பி.எல். கிரிக்கெட்: பெங்களுரு அணியை பந்தாடிய ஐதராபாத்..!! 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி

மும்பை, ஐ.பி.எல். கிரிக்கெட்டின் இன்றைய 36-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.  இதனை தொடர்ந்து பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் டு பிளிஸ்சிஸ் மற்றும் அனுஜ் ராவத் களமிறங்கினர். 7 பந்துகளை சந்தித்த கேப்டன் டு பிளிஸ்சிஸ் 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மார்கொ ஜன்சன் பந்து வீச்சில் போல்ட் முறையில் அவுட் ஆனார். அடுத்துவந்த … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 46.14 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 226 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 கோடியே 91 லட்சத்து 79 ஆயிரத்து 352 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 4 கோடியே … Read more

சென்னையில் இருந்து புதுச்சேரி புறப்பட்டார் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா

சென்னை, அரசு முறை பயணமாக மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா இன்று (ஞாயிற்றுக்கிழமை) புதுச்சேரி வருகிறார். இதற்காக சென்னை வந்த அவர், சென்னையில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் காலை 9.55 மணிக்கு லாஸ்பேட்டை விமான நிலையத்துக்கு செல்கிறார். அங்கு கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், அரசியல் கட்சியினர் வரவேற்கின்றனர். அதைத்தொடர்ந்து கார் மூலம் காலை 10.20 மணிக்கு ஈஸ்வரன்கோவில் வீதியில் உள்ள பாரதியார் நினைவு இல்லத்துக்கு வருகிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள … Read more

ஐபிஎல் 2022 :அகமதாபாத்-ல் நடைபெறுகிறது இறுதிப்போட்டி..!

மும்பை, ஐபிஎல் தொடரின் 15-வது சீசன்  கடந்த 26ம் தேதி தொடங்கி சுவாரசியமாக சென்று கொண்டு இருக்கிறது.கொரோனா பரவல் காரணமாக ஐபிஎல் போட்டிகள் மும்பை .புனே நகரங்களில் நடைபெற்று வருகிறது ஐபிஎல்  தொடரின் லீக் ஆட்டங்கள் மட்டும் அங்கு நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது இந்நிலையில் ஐபிஎல் பிளே ஆப் சுற்று மற்றும் இறுதிபோட்டி நடைபெறும் இடங்கள் ,பிசிசிஐ தலைவர் கங்குலி அறிவித்துள்ளார் . முதல் பிளே-ஆப் சுற்று மற்றும் எலிமினேட்டர் சுற்று போட்டிகள் மே 24 … Read more

#லைவ் அப்டேட்ஸ்: அமெரிக்க வெளியுறவுத்துறை மந்திரி மற்றும் பாதுகாப்புத்துறை மந்திரி இன்று உக்ரைன் பயணம்..!

கீவ்,  உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் போர் 50வது நாளை தாண்டி தொடர்ந்து நீடித்து வருகிறது. உக்ரைன் – ரஷியா இடையே நீடித்து வரும் போர் குறித்த முக்கிய செய்திகள் பின்வருமாறு:- ஏப்ரல் 24,  12.00 P.M ஐ.நா. பொதுச்செயலாளர் ரஷியா செல்வது நியாயம் கிடையாது – உக்ரைன் அதிபர்  உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 2 மாதங்கள் நிறைவடைகிறது. இந்நிலையில், போரை முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் ஐ.நா. சபை இறங்கி உள்ளது.அந்த … Read more

ரெயிலில் விநியோகிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய ‘செய்தித்தாள்’, உரிமதாரருக்கு எச்சரிக்கை

பெங்களூரு நேற்று பெங்களூருவில் இருந்து சென்னைக்கு வந்த சதாப்தி எக்ஸ்பிரஸ் ரெயில்  சர்ச்சைக்குரிய கட்டுரைகள் அடங்கிய அங்கீகரிக்கப்படாத பத்திரிகை விநியோகிக்கபட்டு உள்ளது. இந்திய ரெயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) அதன் உள் சேவைகள் உரிமதாரருக்கு இது தொடர்பாக எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது. ரெயில் பயணிகளுக்கு பெங்களூரில் இருந்து வெளிவரும் ஆர்யவர்த் எக்ஸ்பிரஸ் என்ற பத்திரிகை விநியோகிக்கபட்டு உள்ளது. அதில் “இஸ்லாமிய ஆட்சியின் கீழ் இந்துக்கள், சீக்கியர்கள், பவுத்தர்களின் இனப்படுகொலை செயயப்பட்டது அங்கீகரிக்கப்பட வேண்டும்” மற்றும் … Read more