டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் தனிமைப்படுத்தப்பட்டார்

மும்பை, ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியில் வீரர்கள் மிட்செல் மார்ஷ், டிம்செய்பெர்ட் மற்றும் 4 உதவியாளர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங்குடன் அணியின் ஓட்டல் அறையில் தங்கி இருந்த அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் கொரோனா தொற்றில் சிக்கி இருப்பது பரிசோதனையில் தெரிய வந்துள்ளது.  இதையடுத்து ரிக்கி பாண்டிங்கின் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். பாண்டிங்குக்கு இரண்டு முறை நடத்தப்பட்ட … Read more

இந்தியா-அமெரிக்க உறவு நாளுக்கு நாள் மேம்பட்டு வருகிறது – நிர்மலா சீதாராமன்

வாஷிங்டன், மத்திய நிதித்துறை மந்திரி நிர்மலா சீதாராமன்,  சர்வதேச நாணய அமைப்பின் வருடாந்திர மாநாடு மற்றும் உலக வங்கி வருடாந்திர கூட்டம் உள்பட பல கூட்டங்களில் கலந்துகொள்ள அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணமாக சென்றுள்ளார்.  அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில் நடந்த கூட்டங்களை முடித்துக் கொண்டு கிளம்பும் முன், செய்தியாளர்கள் சந்திப்பு நடைபெற்றது.   இந்திய செய்தியாளர்கள் குழுவுடனான உரையாடலின் போது, இந்தியா – அமெரிக்கா இடையேயான இருதரப்பு உறவு குறித்த கேள்விகள் எழுப்பப்பட்டன. அப்போது நிர்மலா சீதாராமன் பேசியதாவது: இந்தியா-அமெரிக்கா … Read more

உலகின் மிகப்பெரிய மருந்தகம் மற்றும் தடுப்பூசி உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா திகழ்கிறது – மன்சுக் மாண்டவியா

புதுடெல்லி, இந்திய மருந்து மற்றும் மருத்துவ சாதனங்கள் மாநாட்டின் 7வது பதிப்பு ஏப்ரல் 25 முதல் 27 வரை திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கு முன்னதாக நடைபெற்ற ஊடக மாநாட்டில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி டாக்டர் மன்சுக் மாண்டவியா உரையாற்றினார். இந்திய மருந்து மற்றும் மருத்துவ சாதனங்கள் மாநாட்டில்  பேசிய அவர் கூறியதாவது:- “இன்று, நாம் உலகின் மருந்தகமாக இருக்கிறோம், மேலும் இந்தியா மிகப்பெரிய தடுப்பூசி உற்பத்தி செய்யும் நாடாகவும் உள்ளது. 100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு 17 கோடிக்கும் அதிகமான … Read more

“டோனி களத்தில் இருந்ததால் வெற்றி கிடைக்கும் என்பது தெரியும்” – சென்னை கேப்டன் ஜடேஜா

மும்பை, ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் மும்பை டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்தபரபரப்பான லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்சை வீழ்த்தி -வது வெற்றியை பெற்றது.  இதில் மும்பை நிர்ணயித்த 156 ரன் இலக்கை நோக்கி ஆடிய சென்னை அணிக்கு கடைசி 4 பந்துகளில் 16 ரன்கள் தேவை என்ற நிலையில் டோனி 6,4,2,4 என ரன்கள் விளாசி வெற்றி பெற்ற வைத்தார். 40 வயதானாலும் ஆட்டத்தை வெற்றிகரமாக … Read more

தீவிரமடையும் போராட்டம்…இலங்கையில் தற்போதைய நிலவரம் என்ன?

கொழும்பு,  இலங்கையில் இப்போது மிக மோசமான பொருளாதார நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலை கூட விண்ணை மூட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது.  கொரோனா காரணமாகப் பாதிக்கப்பட்ட இலங்கையின் பொருளாதாரம் இன்னும் மேம்படவில்லை. இதனால் இலங்கையில் உணவு பற்றாக்குறை எரிபொருள் தட்டுப்பாடு ஆகியவையும் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக அங்குள்ள மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்திவருகின்றனர். தலைநகர் கொழும்புவில் அதிபர், பிரதமர் மற்றும் பிரதமர் தலைமையிலான அமைச்சரவை பதவி … Read more

டெல்லி: பைக் மீது கார் மோதிய விபத்தில் அந்தரத்தில் பறந்த நபர் !

புதுடெல்லி, டெல்லி அருகே காசியாபாத் வேவ் சிட்டியில் உள்ள ஒரு நெடுஞ்சாலையில் பைக்கில் வந்த நபர் ஒருவர் சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக பைக்கின் பக்கவாட்டில் பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் பைக்கில் வந்த நபர் தூக்கி வீசப்பட்டார். அவர் காரில் மோதி சுழன்றபடி தூக்கிவீசப்பட்டார். அதே நேரத்தில் அவரது பைக் காரால், சில மீட்டர்கள் இழுத்துச்செல்லப்பட்டது. இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் … Read more

உபேர் கோப்பை பேட்மிண்டனில் இருந்து சிக்கி ரெட்டி-அஸ்வினி ஜோடி விலகல்

புதுடெல்லி,  தாமஸ் மற்றும் உபேர் கோப்பைக்கான பேட்மிண்டன் போட்டி பாங்காக்கில் மே 8-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை நடக்கிறது. இதில் பெண்களுக்கான உபேர் கோப்பை போட்டிக்குரிய இந்திய அணியில் இரட்டையர் இணையான சிக்கி ரெட்டி, அஸ்வினி ஆகியோர் இடம் பிடித்து இருந்தனர்.  இந்த நிலையில் சிக்கி ரெட்டிக்கு வயிற்று பகுதியில் தசை நார் கிழிவு ஏற்பட்டு இருப்பது ஸ்கேன் பரிசோதனையில் தெரியவந்தது. எனவே அவரை 4-6 வாரங்கள் ஓய்வு எடுக்கும்படி டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். … Read more

ஆப்கானிஸ்தானில் நடைபெற்று வரும் பயங்கரவாத தாக்குதல்களுக்கு ஐநா கண்டனம்

நியூயார்க், ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதிகள் தாக்குதலில் பலர் கொல்லப்பட்டனர்.  மசார்-இ-ஷரீப்பில் உள்ள சே டோகன் மசூதிக்கு எதிரான தாக்குதல் மற்றும் இஸ்லாமிய அரசு உரிமை கோரும் குண்டூஸில் தனி தாக்குதல்களினால், பொதுமக்கள் மிகுந்த பாதிப்பை சந்தித்துள்ளனர். இந்த நிலையில், ஐநா பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்கள் ஆப்கானிஸ்தானில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களுக்கு கண்டனத்தை தெரிவித்தனர். அவர்கள் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த அனுதாபத்தையும் இரங்கலையும் தெரிவித்தனர், பயங்கரவாதம் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு கடுமையான அச்சுறுத்தல்களை ஏற்படுத்துகிறது என்றும், இந்த கண்டிக்கத்தக்க … Read more

கர்நாடகா: 11 அடி ராஜநாகத்தை பிடித்த பாம்பு பிடி வீரர்..!

கர்நாடகா: கர்நாடக மாநிலம், சிக்கமகளூரு அருகே செட்டிகொப்பா கிராமத்தில் 10க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில் சுமார் 11 அடி நீளம் உள்ள ராஜநாகம் ஒன்று புகுந்துள்ளது.  இதைகண்டு பதற்றமடைந்த கிராமத்தினர் உடனடியாக பாம்பு பிடி வீரர் ஹரீந்தீரா என்பவருக்கு தகவல் கொடுத்தனர்.  தகவல் அறிந்து வந்த பாம்பு பிடி வீரர் ஹரீந்தீரா சர்வ சாதரணமாக 11 அடி நீளமுள்ள ராஜநாகத்தை பிடித்து வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டார். மேலும் இது அவர் பிடித்த 365 வது … Read more

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி: வெள்ளிப்பதக்கம் வென்றார் அன்ஷூ மாலிக்

உலான்பாடர் (மங்கோலியா), ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி மங்கோலியாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்களுக்கான 57 கிலோ உடல் எடைப்பிரிவின் இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை அன்ஷூ மாலிக் ஜப்பானின் சுகுமி சகுராயிடம் தோல்வி அடைந்து வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி கண்டார். அரியானாவை சேர்ந்த 20 வயதான அன்ஷூ ஆசிய போட்டியில் கைப்பற்றிய 3-வது பதக்கம் இதுவாகும். அவர் 2020-ம் ஆண்டு வெண்கலப்பதக்கமும், கடந்த ஆண்டு தங்கப்பதக்கமும் வென்று இருந்தார். மேலும் 65 கிலோ எடைப்பிரிவில் இந்திய … Read more