இந்தியாவில் தொடர்ந்து அதிகரிக்கும் தினசரி கொரோனா பாதிப்பு…!

புதுடெல்லி, இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது.  அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 451 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றுயை பாதிப்பை விட அதிகமாகும்.  இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 52 ஆயிரத்து 435 ஆக அதிகரித்துள்ளது.  கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1 … Read more

“ஜோஸ் பட்லரை போல் சதம் அடிக்காதது ஏன் என எனது மகள்கள் கேள்வி எழுப்புகிறார்கள்” – வார்னர்

மும்பை, ஐ.பி.எல். கிரிக்கெட்டில் மும்பை பிராபோர்ன் ஸ்டேடியத்தில் நேற்று முன்தினம் இரவு நடந்த லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்சை 9 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி அணி பந்தாடியது. இந்த ஆட்டத்தில் ஆட்டமிழக்காமல் 60 ரன்கள் குவித்த டெல்லி அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் அளித்த பேட்டியில், ‘பந்து வீச்சாளர்கள் தங்களது பணியை அருமையாக செய்தார்கள்.  இதனால் எங்களது வேலை எளிதாகிவிட்டது. பந்து வீச்சாளர்களுக்கே எல்லா பெருமையும் சாரும். ஜோஸ் பட்லர் (ராஜஸ்தான் அணி) போல் என்னால் … Read more

"ஒரே குத்து" கடுப்பேத்திய விமான பயணி தாக்கிய பிரபல குத்துச்சண்டை வீரர்

சான் பிரான்ஸ்கோ: மைக் டைசன் சான்பிரான்ஸ்கோ விமான நிலையத்தில் இருந்து கிளம்பிய விமானம் ஒன்றில் பயணம் செய்தார். அப்போது அவருக்கு பின் சீட்டில் அமர்ந்திருந்த நபர் ஒருவர் தொடர்ந்து மைக் டைசனை தொந்தரவு செய்வது போல பேசிகொண்டே இருக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த மைக் டைசன் தன் சீட்டில் இருந்து எழுந்து, பின் இருக்கையில் இருந்த பயணியின் முகத்தில் சராமாரியாக தாக்குகிறார். அதன்பின் முகத்தின் ரத்த காயத்துடன் அந்த  பயணி சில முக பாவனைகளை சமூக வலைதளத்தில் … Read more

காந்தி நினைவிடத்தில் போரிஸ் ஜான்சன் அஞ்சலி

புதுடெல்லி, 2 நாள் அரசு முறை பயணமாக இங்கிலாந்து பிரதமர் போரீஸ் ஜான்சன் நேற்று (21ம் தேதி) இந்தியா வந்தார். முதல் நாள் பயணமாக குஜராத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். காந்தி ஆசிரமம் சென்று பார்வையிட்டார். ஆமதாபாதில் உள்ள அதானி குழும அலுவலகத்தில், தொழிலதிபர் கவுதம் அதானியை, பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் சந்தித்துப் பேசினார். அப்போது, சுற்றுச்சூழல், பசுமை எரிசக்தி, விமான தயாரிப்பு, ராணுவ ஆயுத தயாரிப்பு உள்ளிட்டவற்றில், அதானி குழுமம், பிரிட்டன் நிறுவனங்களுடன் இணைந்து … Read more

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இலங்கை இளம் வீரர் சேர்ப்பு

மும்பை,  ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம் பிடித்து இருந்த நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆடம் மில்னே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான முதலாவது லீக் ஆட்டத்தில் தசைப்பிடிப்பு காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகினார். காயம் குணமடையாததால் அவர் எஞ்சிய போட்டிகளில் இருந்தும் ஒதுங்கினார்.  இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆடம் மில்னேவுக்கு பதிலாக இலங்கையை சேர்ந்த 19 வயது வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பதிரானா சேர்க்கப்பட்டு … Read more

நேட்டோவில் இணையும் ஸ்வீடன், பின்லாந்துக்கு கனடா ஆதரவளிக்கும்: ஜஸ்டின் ட்ரூடோ

ஒட்டாவா, நேட்டோ இராணுவக் கூட்டணியில் ஸ்வீடன் மற்றும் பின்லாந்து நாடுகள் சேருவதற்கு ஆயத்தமாகி வருகின்றன. இதற்கு ரஷியா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், கனடா தனது ஆதரவினை தெரிவித்துள்ளது. பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இதுகுறித்த கேள்விக்கு பதிலளித்து கூறும்போது, நேட்டோவில் சேர ஸ்வீடன் மற்றும் ஃபின்லாந்தைச் சுற்றி உரையாடல்கள் நடைபெற்று வருவதாக கூறிய அவர், கனடா நிச்சயமாக இரு நாடுகளுக்கும் ஆதவினை அளிக்கும் என்றும் அவர் கூறினார்.

ஜம்மு- பாதுகாப்புப்படையினர் நடத்திய என்கவுண்ட்டரில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை: ஒரு பாதுகாப்புப்படை வீரர் வீரமரணம் !

ஸ்ரீநகர், ஜம்மு நகரத்தில் உள்ள சுஞ்ச்வான் கன்டோன்மென்ட் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக கிடைத்த தகவலின் பேரில் பாதுகாப்புப் படையினர் அதிகாலையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப்படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர்.  இந்த துப்பாக்கிச் சூட்டில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். ஒரு பாதுகாப்புப்படை வீரர் வீர மரணம் அடைந்தார். மேலும் நான்கு வீரர்கள் படுகாயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். ஜம்முவில் பிரதமர் நரேந்திர மோடி வரும் ஞாயிற்றுக்கிழமை சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். மாநிலத்தின் … Read more

தோனி அதிரடியால் சென்னை அணி திரில் வெற்றி : மும்பைக்கு 7-வது தோல்வி..!!

மும்பை, ஐ.பி.எல். 20 ஒவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற  போட்டியில் மும்பை -சென்னை அணிகள் மோதின. டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் ரவீந்திர ஜடேஜா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி அணி மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்களாக ரோகித் சர்மா – இஷான் கிஷன் களமிறங்கினர். முதல் ஓவரை வீசிய முகேஷ் சவுத்ரி  2-வது பந்திலே ரோகித் … Read more

96ஆவது பிறந்த நாளை கொண்டாடிய ராணி எலிசபெத்

லண்டன், பிரிட்டன் அரசியாக 1952இல் பதவியேற்ற எலிசபத் ராணி, பிரிட்டனின் மிக நீண்ட காலம் பதவி வகுக்கும் அரசியாக தொடர்கிறார். அவரின் 96ஆவது பிறந்த தினத்தை, நேற்று  சான்டிர்ங்ஹாம் பண்ணை வீட்டில் குடும்பத்தினருடன் கொண்டாடினார்.  முன்னதாக, இரண்டு குதிரை குட்டிகளுடன் அவர் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டது. வின்டஸர் மாளிகையில் அரசியின் மெய்காவலர்கள், பேண்ட் வாத்தியம் வாசித்து, அவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தனர்.  லண்டன் ஹைட் பூங்காவில் பிரட்டன் ராணுவத்தின் மன்னர் பிரிவு படையினர், பீரங்கிகளை … Read more

2 நாள் பயணமாக இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இந்தியா வருகை…!

அலகாபாத், இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் 2 நாள் பயணமாக இன்று இந்தியா வந்துள்ளார். இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்ற பின்னர் போரிஸ் ஜான்சன் இந்தியா வருவது இதுவே முதல்முறையாகும். இதற்கு முன்னதாக, கடந்த ஆண்டு இரு முறை போரிஸ் ஜான்சன் இந்தியா வர திட்டமிட்டிருந்தார். ஆனால், அந்த இருமுறையும் கொரோனா காரணமாக அவரது இந்திய பயணம் ரத்து செய்யப்பட்டது. அதேபோல், இந்த ஆண்டு இந்திய குடியரசு தின விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கவும் போரிஸ் ஜான்சன் திட்டமிட்டிருந்தார். … Read more