‘விராட் கோலிக்கு ஓய்வு தேவை’ – முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி கருத்து

மும்பை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேன் விராட் கோலி 2019-ம் ஆண்டு நவம்பர் மாதத்திற்கு பிறகு எந்த ஒரு போட்டியிலும் சதம் அடிக்க முடியவில்லை. தற்போது ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடி வரும் கோலி, நேற்று முன்தினம் லக்னோவுக்கு எதிரான ஆட்டத்தில் சந்தித்த முதல் பந்திலேயே ‘டக்-அவுட்’ ஆனார். நடப்பு ஐ.பி.எல். தொடரில் 7 ஆட்டங்களில் 119 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இந்த நிலையில் தொடர்ச்சியாக கிரிக்கெட் ஆடும் 33 வயதான … Read more

பிலிப்பைன்சில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவு

நியூயார்க், பிலிப்பைன்சின் மானாய் நகரில் நேற்று இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவானதாக அமெரிக்க புவியியல் மையம் தெரிவித்துள்ளது. மானாய் நகரின் கிழக்கு தென்கிழக்கு திசையில் 51 கிலோமீட்டர் தூரத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு 09.57 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தின் மையம் பூமியின் தரைப்பகுதியில் இருந்து 51.33 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை.

பள்ளி பஸ்சின் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த 3 ஆம் வகுப்பு மாணவன் தலையில் மின்கம்பம் மோதி உயிரிழப்பு!

லக்னோ, உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்திலுள்ள மோடி நகரில் தனியார் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 3 ஆம் வகுப்பு படிக்கும் மாணவன், பள்ளி பஸ்சில் பள்ளிக்கு சென்றுகொண்டிருந்தான். அப்போது, ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருந்த அந்த மாணவன், ஜன்னலின் வெளியே எட்டிப்பார்த்துள்ளான். அப்போது எதிர்பாராத வகையில், மின்கம்பம் ஒன்று சிறுவனின் தலையில் பயங்கரமாக மோதியது. இதனால், தலையில் பலத்த காயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டான். அங்கு மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.  இந்த சம்பவத்தில், பள்ளி … Read more

ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப்: இந்தியாவிற்கு 5 வெண்கலப் பதக்கங்கள்

உலான்பாடர் (மங்கோலியா), ஆசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டிகள் மங்கோலியாவில் நடைபெற்று வருகின்றன. ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற ரவி தஹியா, பஜ்ரங் புனியா உள்ளிட்ட 30 இந்திய மல்யுத்த வீரர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். ப்ரீஸ்டைல் மற்றும் கிரேக்க-ரோமன் பிரிவுகளில் ஆண்கள் அணியிலிருந்து 20 மல்யுத்த வீரர்கள், மகளிர் அணியைச் சேர்ந்த 10 மல்யுத்த வீராங்கனைகள் இதில் பங்கேற்றுள்ளனர். இந்திய மல்யுத்த வீரர்கள் பங்கேற்க இந்திய விளையாட்டு ஆணையம் 1.28 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இதில் நேற்று நடந்த கிரிகோ … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 45.88 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 226 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 கோடியே 67 லட்சத்து 91 ஆயிரத்து 436 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 4 கோடியே … Read more

இந்தியாவில் தொடர்ந்து 2-வது நாளாக தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிப்பு…!

புதுடெல்லி, இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது.  அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 380 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்று முன் தின பாதிப்பான 1 ஆயிரத்து 247 மற்றும் நேற்று முன் தின பாதிப்பான 2 ஆயிரத்து 67-ஐ விட அதிகமாகும்.  இதனால், நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து … Read more

கேஎல் ராகுலுக்கு விரைவில் திருமணம் ? – வெளிவந்த தகவல்..!!

மும்பை, இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரராக திகழ்பவர் கேஎல் ராகுல். நடப்பு ஐபிஎல் தொடரில் இவர் லக்னோ அணியை வழிநடத்தி வருகிறார். இவரும் பாலிவுட் நடிகை அதியா ஷெட்டியும் பல நாட்களாக காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே. அதியா ஷெட்டி, பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகரான சுனில் ஷெட்டியின் மகளாவார். கிரிக்கெட் போட்டியில் அதிக ஆர்வம் கொண்ட இவர் நடப்பு தொடரில் ராகுல் விளையாடும் லக்னோ அணியின் போட்டிகளை ஒன்று விடாமல் மைதானத்திற்கு வந்து பார்த்து … Read more

அதிகரிக்கும் கொரோனா பரவலுக்கு மத்தியில் கட்டுப்பாடுகளை மேலும் தளர்த்திய ஷாங்காய்

பீஜிங், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா பாதிப்பின் தீவிரம் குறைந்துள்ளது.  ஆனால், சீனாவில் இதற்கு நேர்எதிராக  ஒமைக்ரான் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து கானப்படுகிறது. சீனாவின் பொருளாதார மையம் ஆக திகழ கூடிய, வணிக மற்றும் நிதி தலைநகராக விளங்கும் ஷாங்காய் மாநகரில், கடந்த 3 வாரங்களாக பொதுமுடக்கம் அமலில் உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் வாகனத் தொழில் கடும் இழப்பை சந்தித்துள்ளது. இது சர்வதேச நிறுவங்களுக்கு பெரும் அடியை ஏற்படுத்தியுள்ளன. இந்த நிலையில், ஷாங்காயில் அதிகரித்துவரும் கொரோனா … Read more

ரூ.50 கோடிக்கு மேல் உள்ள டெண்டர்களை சரிபார்க்க உயர்மட்ட கமிஷன்: கர்நாடக முதல் மந்திரி அறிவிப்பு

பெங்களூரு, கர்நாடகத்தின் பெலகாவி மாவட்டத்தைச் சேர்ந்த ஒப்பந்ததாரர் சந்தோஷ் கே.பாட்டீல். இவர், கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை மந்திரியான ஈஸ்வரப்பா வளர்ச்சி பணிகளை செய்த ஒப்பந்த தொகையில் 40 சதவீதம் கமிஷன கேட்பதாக குற்றம் சாட்டிய நிலையில், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த வழக்கு தொடர்பாக ஈஸ்வரப்பா தனது மந்திரி பதவியை ராஜினமா செய்தார். இந்த நிலையில், கர்நாடகா முதல் மந்திரி பசவராஜ் பொம்மை, 50 கோடி ரூபாய்க்கு மேல் உள்ள … Read more

ஐபிஎல் கிரிக்கெட் : 20 ஓவர் போட்டிகளில் 2 ஆயிரம் ரன்களை கடந்து பிரித்வி ஷா புதிய சாதனை..!!

மும்பை, ஐ.பி.எல். 20 ஒவர் கிரிக்கெட் போட்டி கடந்த மாதம் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் டெல்லி – பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டியில்  டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த்  பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த  பஞ்சாப் அணி 20-வது ஓவரின் கடைசி பந்தில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 115 ரன்கள் மட்டுமே எடுத்தது. டெல்லி அணி தரப்பில் அக்சர் … Read more