இலங்கை துப்பாக்கிச்சூடு சம்பவம் – உலக நாடுகள் கண்டனம்

கொழும்பு, அண்டை நாடான இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால் பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் ஆகியவற்றை வாங்க முடியவில்லை. அதனால் அந்த பொருட்கள் கிடைக்காமல் மக்கள் திண்டாடுகிறார்கள்.  பல மணி நேரம் வரிசையில் நிற்க வேண்டி இருக்கிறது. மின்சார தட்டுப்பாடு காரணமாக நீண்ட நேரம் மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது. உணவு, மருந்துகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.  அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக்கோரி, அவரது அலுவலகம் … Read more

பிரதமரின் தீவிர நடவடிக்கையால் மகாத்மா காந்தியின் தூய்மை இந்தியா கனவு நனவாகும் – பாஜக மூத்த தலைவர் நம்பிக்கை

புதுடெல்லி, பாஜக மூத்த தலைவர் கவுரவ் பாட்டியா டெல்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- கடந்த 2014-ம் ஆண்டு மகாத்மா காந்தியின் பிறந்த நாளான அக்டோபர் 2-ம் தேதி தூய்மை இந்தியா திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்துக்காக 2021-2026-ம் ஆண்டுகளில் கிராமங்களுக்காக ரூ.7,192 கோடியும் நகரங்களுக்காக ரூ.1,41,678 கோடியும் செலவிடப்பட உள்ளது. இதன்மூலம் நாடு முழுவதும் கழிப்பறைகள் கட்டப்பட்டு வருகின்றன. இதுவரை 58,000 கிராமங்கள், 3,300 நகரங்கள் பயன் பெற்றுள்ளன. தூய்மை இந்தியா திட்டத்தின் மூலம் … Read more

“தினேஷ் கார்த்திக் சிறப்பாக செயல்படுகிறார்” – கவாஸ்கர் பாராட்டு

பெங்களூரு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கவாஸ்கர் டெலிவிஷனுக்கு அளித்த ஒரு பேட்டியில், “ஐ.பி.எல். போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள தினேஷ் கார்த்திக் தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டு அந்த அணிக்காக ஆட்டத்தை வெற்றிகரமாக முடிக்கிறார்.  அவர் தனது அதிரடியான பேட்டிங்கால் ஆட்டத்தின் போக்கை மாற்றுகிறார். இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற தினேஷ் கார்த்திக் விரும்புகிறார். அவரது வயதை பார்க்காமல், அவர் … Read more

உக்ரைனுக்கு பாதுகாப்பு உடைகள், டிரோன்களை வழங்கும் ஜப்பான்..!!

டோக்கியோ,  உக்ரைன் மீதான ரஷிய போர் 2-வது மாதமாக நடந்து வருகிறது. இந்த வேளையில், உக்ரைனுக்கு ரசாயன ஆயுதங்களுக்கு எதிரான சிறப்பு உடைகள், முககவசங்கள் மற்றும் டிரோன்களை வழங்க ஜப்பான் அரசு தீர்மானித்துள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.  இதுபற்றி ஜப்பான் ராணுவ அமைச்சகம் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், “உக்ரைன் அரசுக்கு ஜப்பான் ராணுவ அமைச்சகம் என்.பி.சி. சூட்டுகள் (அணு, உயிரி, ரசாயன ஆயுத தாக்குதலுக்கு எதிரானவை), முககவசங்கள், டிரோன்களை வழங்க முடிவு செய்துள்ளது. தங்கள் நாட்டை … Read more

டெல்லி: வன்முறை நடந்த ஜஹாங்கீர்பூரி பகுதியில் ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இன்று இடிப்பு

புதுடெல்லி, இந்து மத கடவுளான அனுமனின் பிறந்தநாள் தினம் ’அனுமன் ஜெயந்தி’ என கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு அனுமன் ஜெயந்தி தினம் கடந்த சனிக்கிழமை கொண்டாடப்பட்டது. வடமாநிலங்களில் பல்வேறு பகுதிகளில் அனுமன் ஜெயந்தியையொட்டி மத பேரணிகளும் நடைபெற்றது. இந்த பேரணியின் போது சில பகுதிகளில் வன்முறை, மோதல் சம்பவங்களும் அரங்கேறியது.   இதற்கிடையில், தலைநகர் டெல்லியில் உள்ள ஜஹாங்கீர்பூரி பகுதியில் அனுமன் ஜெயந்தியையொட்டி இந்து மதத்தினர் பேரணியாக சென்றனர். ஜஹாங்கீர்பூரி சி-பிளாக் பகுதியில் இஸ்லாமிய மதத்தினர் … Read more

ஆசிய கோப்பை கால்பந்து; இறுதி தகுதி சுற்றுக்கான இந்திய உத்தேச அணி அறிவிப்பு

பெங்களூரு, ஆசிய கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி தகுதி சுற்றுக்கான இந்திய உத்தேச அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அணியில் மொத்தம் 41 வீரர்கள் இடம் பிடித்துள்ளனர். இந்திய கால்பந்து அணியின் பயிற்சி முகாம் கர்நாடக மாநிலம் பெல்லாரியில் நடக்கிறது. இந்த பயிற்சி முகாம் வருகின்ற ஏப்ரல் 24-ந் தேதி தொடங்கி மே 8-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இதனையடுத்து 2-வது கட்ட பயிற்சி முகாம் கொல்கத்தாவில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 45.78 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 226 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 கோடியே 58 லட்சத்து 57 ஆயிரத்து 193 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 4 கோடியே … Read more

நாடு முழுவதும் 700 இடங்களில் நாளை தொழில் பயிற்சி விழா…!

புதுடெல்லி, பிரதமர் கடந்த 2015-ம் ஆண்டு அறிமுகப்படுத்திய திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவுக்கான தேசியக்கொள்கை, போதுமான ஊதியத்துடன் கூடிய வேலைவாய்ப்புக்கு தொழில் பயிற்சியை அங்கீகரிக்கிறது. இதன் மூலம், நாட்டில் உள்ள நிறுவனங்களில் பணியமர்த்தப்படும் பயிற்சியாளர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன. இதன்படி, நாளை (வியாழக்கிழமை) நாடு முழுவதும் 700-க்கு மேற்பட்ட இடங்களில் தொழில் பயிற்சி விழா நடத்தப்படுகிறது. இந்த பயிற்சியை பயிற்சி இயக்குனரகத்துடன் இணைந்து திறன் இந்தியா நடத்துகிறது. இதில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட … Read more

ஐபிஎல் கிரிக்கெட் : லக்னோ அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி

மும்பை, ஐ.பி.எல். 20 ஒவர் கிரிக்கெட் போட்டி மும்பை மற்றும் புனேயில் நடைபெற்றது. 25-வது நாளான இன்று நடைபெறும் 31-வது லீக் ஆட்டத்தில் லோகேஷ் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்-டுபெலிசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் லோகேஷ் ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பெங்களூரூ அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்களாக அனுஜ் ராவத் டு  பிளேசிஸ் … Read more

பாகிஸ்தான்: கடும் விமர்சனத்துள்ளான புதிய சுகாதார அமைச்சர் அப்துல் காதர் படேலின் நியமனம்..!!

இஸ்லாமாபாத்,  பாகிஸ்தானில் 2018-ம் ஆண்டு முதல் பிரதமராக இருந்து வந்த இம்ரான்கான் அரசுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இம்ரான் அரசு கவிழ்ந்தது. அதைத்தொடர்ந்து, முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் தம்பியும், பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (நவாஸ்) கட்சியின் தலைவருமான ஷபாஸ் ஷெரீப் புதிய பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.  இந்நிலையில், பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமையில் 34 பேரை கொண்ட புதிய மந்திரி சபை நேற்று பதவியேற்றது. மந்திரிகளின் பதவியேற்பு விழா நேற்று முன்தினமே … Read more