“போலீஸ் நிலையம் மீது தாக்குதல் நடத்தியவர்களை அப்பாவிகள் என்று கூற முடியுமா?” – எடியூரப்பா கேள்வி

பெங்களூரு, முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா உப்பள்ளியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:- “உப்பள்ளியில் கலவரம் நடந்துள்ளது. இதன் பின்னணியில் அதன் பின்னணியில் ஒரு முஸ்லிம் அமைப்பின் தலைவர் தான் இருந்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும். போலீஸ் நிலையம் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். வாகனங்களை சேதப்படுத்தியுள்ளனர். 12 போலீசார் காயம் அடைந்துள்ளனர். இத்தகையவர்களை அப்பாவிகள் என்று கூற முடியுமா? ஆனால் தவறு செய்தவர்களை போலீசார் கைது செய்கிறார்கள். ஆனால் காங்கிரஸ் தலைவர்கள், அப்பாவிகளை கைது செய்ய … Read more

'அரபிக் குத்து' பாடலுக்கு நடனமாடிய பி.வி சிந்து – வைரலாகும் வீடியோ..!

சென்னை, இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கும் திரைப்படம் ‘பீஸ்ட்’. இதில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்துள்ளார். இந்த திரைப்படத்தில் இயக்குனர் செல்வராகவன், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார். View this post on Instagram A post shared by Sindhu Pv (@pvsindhu1)

லாவோஸ் நாட்டில் புத்தாண்டு கொண்டாட்ட சாலை விபத்துகளில் 35 பேர் பலி..!!

வியன்டியேன்,  தென்கிழக்கு ஆசிய நாடான லாவோசில் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14-ந் தேதி தொடங்கி 16-ந் தேதி வரை புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. புத்தாண்டையொட்டி அங்கு ஒரு வாரத்துக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.  இந்நிலையில், இந்த புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது ஏற்பட்ட சாலை விபத்துகளில் சிக்கி 35 பேர் உயிரிழந்தாக, அந்த நாட்டின் பொது பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. கடந்த 11-ந் தேதி முதல் 17-ந் தேதி வரையிலான 7 நாட்களில் 312 விபத்துகள் ஏற்பட்டதாகவும், இதில் 35 பேர் பலியானதோடு, … Read more

காஷ்மீரில் பாதுகாப்பு படை தேடுதல் வேட்டை; ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகள் பறிமுதல்

ஜம்மு, ஜம்மு மற்றும் காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் இணைந்து அதிரடி தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.  இதில் தட் கர்ணா பகுதியில் ஹஜம் மொகல்லா என்ற இடத்தில் அதிக அளவில் ஆயுதங்கள் மற்றும் வெடிகுண்டுகள் இருந்தது கண்டறியப்பட்டது. இதனை போலீசார் மற்றும் படையினர் கைப்பற்றினர்.  அவற்றில் 10 பிஸ்டல்கள், 17 மேகசின்கள் (தோட்டாக்களை வைக்கும் உபகரணம்), 54 தோட்டாக்கள் மற்றும் 5 எறிகுண்டுகள் ஆகியவை இருந்தன. இதனை பயங்கரவாதிகள் யாரேனும் விட்டு சென்றார்களா? … Read more

இது தான் என் திட்டம்.. ஆனால்.. தோல்வி குறித்து கொல்கத்தா கேப்டன் ஷ்ரேயாஸ் அய்யர் கருத்து

மும்பை, ஐபிஎல் தொடரில் நேற்று  நடைபெற்ற 30-வது லீக் போட்டியில் ராஜஸ்தான்-கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டி மும்பையில் உள்ள பிராபோர்ன் மைதானத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது.  20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் குவித்தது. ராஜஸ்தான் அணியில்  அதிகபட்சமாக பட்லர்  சதம் அடித்தார்   218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற … Read more

கொரோனா பரவல் அதிகரிப்பு: உ.பி.யில் 6 மாவட்டங்களில் முக கவசம் கட்டாயம்..!!

லக்னோ,  கொரோனா பரவல் அதிகரித்து வருவதால், டெல்லியை ஒட்டிய 6 மாவட்டங்கள் மற்றும் லக்னோவில் பொது இடங்களில் முக கவசம் அணிவது கட்டாயம் என்று உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார். இந்தியாவில் கொரோனா 3-வது அலை கட்டுப்பாட்டுக்குள் இருந்த நிலையில், கடந்த சில நாட்களாக தொற்று பரவல் திடீரென அதிகரித்து வருகிறது. டெல்லி, அரியானா அவற்றை ஒட்டி உத்தரபிரதேச எல்லைக்குள் அடங்கிய தேசிய தலைநகர் பிராந்தியம் ஆகியவற்றில் கொேரானா பரவல் உயர்ந்து வருகிறது. தேசிய தலைநகர் … Read more

சென்னை அணி வீரரின் திருமண கொண்டாட்டம் : வேஷ்டி சட்டையில் அசத்தும் தோனி- வைரலாகும் புகைப்படம்

மும்பை, ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் விறுவிறுப்பாக சென்று கொண்டு இருக்கிறது. இந்த தொடரில் நடப்பு சாம்பியனான சென்னை அணி 6 போட்டிகளில் விளையாடி 1 போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. இந்த நிலையில் சென்னை அணி வீரர்கள் தற்போது கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்கு காரணம் சென்னை அணியின் நியூசிலாந்து வீரர் டெவன் கான்வெ. அவருக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளது. இதற்காக இன்று சென்னை அணி வீரர்கள் பாரம்பரியமாக … Read more

ஜோ பைடனுக்கு உக்ரைன் செல்வதற்கான எந்த திட்டமும் இல்லை: வெள்ளை மாளிகை தகவல்

வாஷிங்டன், உக்ரைனுக்கு செல்வதற்கான எந்த திட்டமும் ஜோ பைடனுக்கு இல்லை என்று வெள்ளை மாளிகை செய்தியாளர் செயலாளர் ஜென் சாகி செய்தியாளர்களிடம் கூறினார். இருப்பினும், பைடனின் இந்த பயணம் மிகவும் சிக்கலான பாதுகாப்பு சவாலை முன்வைக்கும் என்று கூறிய அவர், பிடன் நிர்வாகம் அதற்கு பதிலாக ஒரு உயர் பதவியில் இருக்கும் அதிகாரியை அனுப்ப விரும்புவதாகவும் கூறினார்.  “யாராவது சென்றால்… யார், எப்போது செல்வார்கள் என்பதை பாதுகாப்புக் காரணங்களுக்காக யாரை, எப்போது, ​​எப்பொழுது என்று அரசாங்கத்திடம் இருந்து … Read more

கொரோனா தகவல்களை தினந்தோறும் அளியுங்கள் – கேரள அரசுக்கு மத்திய அரசு கண்டிப்பு

புதுடெல்லி,  கேரளாவில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில், கொரோனாவுக்கு 213 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டது. 24 மணி நேரத்தில் ஒருவர் மட்டுமே பலியாகி உள்ளார். மற்றவர்கள், சில நாட்களுக்கு முன்பே இறந்தும், கணக்கில் சேர்க்கப்படாதவர்கள் ஆவர். விடுபட்ட அந்த மரணங்களையும், கேரள அரசு ஒரு நாள் மரண கணக்கில் சேர்த்துள்ளது. இந்த நிலையில், கேரள சுகாதார முதன்மை செயலாளர் ராஜன் என்.கோப்ரகாடேவுக்கு மத்திய சுகாதார அமைச்சக இணை செயலாளர் லாவ் அகர்வால் … Read more

டென்னிஸ் தரவரிசையில் ஜோகோவிச் முதலிடத்தில் நீடிப்பு

நியூயார்க்,  சர்வதேச டென்னிஸ் சம்மேளனம் வீரர், வீராங்கனைகளின் புதிய தரவரிசை பட்டியலை நேற்று வெளியிட்டது. இதில் வீரர்கள் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் முதலிடத்தில் நீடிக்கிறார்.  மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் போட்டியில் 2-வது சுற்றுடன் வெளியேறிய போதிலும் அவரது ‘நம்பர் ஒன்’ இடத்துக்கு ஆபத்து இல்லை. ஜோகோவிச் இதுவரை 366 வாரங்கள் முதலிடத்தில் இருந்துள்ளார்.  2-வது இடத்தில் டேனில் மெட்விடேவும் (ரஷியா), 3-வது இடத்தில் அலெக்சாண்டர் ஸ்வெரேவும் (ஜெர்மனி), 4-வது இடத்தில் ரபெல் நடாலும் (ஸ்பெயின்), 5-வது இடத்தில் … Read more