இலங்கையில் நீடிக்கும் பொருளாதார நெருக்கடி: ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.338க்கு விற்பனை..!

கொழும்பு, இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வும், தட்டுப்பாடும் மக்களின் வாழும் சூழலை வெகுவாக புரட்டிப்போட்டு உள்ளது.  எரிபொருள் பற்றாக்குறை, பலமணி நேர மின்வெட்டு, தொழிற்சாலைகள் மூடல், ஊழியர்கள் வேலை நிறுத்தம் என தீவு முழுவதும் இயல்புநிலை முடங்கி இருக்கிறது. இதனால், நாடு முழுவதும் அரசுக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்த நிலையில், மக்களை மேலும் அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.84 … Read more

வருகிற 29-ந் தேதி கேரளா வரும் அமித்ஷா..!!

திருவனந்தபுரம்,  மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, கேரள மாநிலத்திற்கு வருகிற 29-ந் தேதி வர உள்ளார். இந்த தகவலை, கேரள பா.ஜனதா தலைவர் கே.சுரேந்திரன் நேற்று தெரிவித்தார். கேரளாவில் பா.ஜ.க. மற்றும் ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் கொலை செய்யப்பட்ட விவகாரங்கள் குறித்து அறிந்து கொள்ளவும், கட்சி பிரமுகர்கள் கூட்டத்தில் பங்கேற்கவும் அவர் வருகை தர இருப்பதாக சுரேந்திரன் கூறி உள்ளார்.

மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் டென்னிஸ்: கிரீஸ் வீரர் சிட்சிபாஸ் சாம்பியன்..!

மான்ட்கார்லோ, மான்ட்கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டி மொனாக்கோவில் நடந்து வந்தது. இதில் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனும், தரவரிசையில் 5-வது இடம் வகிப்பவருமான சிட்சிபாஸ் (கிரீஸ்), 46-ம் நிலை வீரர் டேவிடோவிச் போகினாவை (ஸ்பெயின்) சந்தித்தார்.  1 மணி 36 நிமிடங்கள் நீடித்த இந்தமோதலில் சிட்சிபாஸ் 6-3, 7-6 (7-3) என்ற நேர் செட்டில் போகினாவை தோற்கடித்து மீண்டும் மகுடம் சூடினார். ‘ஓபன் எரா’ வரலாற்றில் (1968-ம் ஆண்டுக்கு பிறகு) … Read more

லைவ் அப்டேட்ஸ்: கிழக்கு உக்ரைனில் தாக்குதலை தொடங்கிய ரஷிய ராணுவம்…!!

கீவ்,  உக்ரைன் நகரங்களை உருக்குலைத்து வரும் ரஷிய படைகளின் தாக்குதல்கள் 2-வது மாதத்தை எட்டி வருகிறது. இந்த போர் தொடர்பாக இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள் பின்வறுமாறு:- ஏப்ரல் 19,  03.05 a.m டான்பாசில் கவனம் செலுத்துவதாக ரஷியா கடந்த மாதம் அறிவித்ததை அடுத்து இந்த நடவடிக்கை எதிர்பார்க்கப்பட்டது கிழக்கு உக்ரைனில் ரஷியாவின் தாக்குதலின் தொடக்கத்தை அந்நாட்டு அதிபர் ஜெலெனஸ்கி அறிவித்துள்ளதாக ஏ.எப்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.  ஏப்ரல் 19,  02.46 a.m கிழக்கு உக்ரைனில் … Read more

“இந்துக்கள் தலா 4 குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும்” – பிரபல பெண் சாமியார் பரபரப்பு பேச்சு

கான்பூர்,  விசுவ இந்து பரிஷத் அமைப்பின் பெண்கள் பிரிவான ‘துர்கா வாகினி’யை நிறுவியவர் பெண் சாமியாரான சாத்வி ரிதம்பரா. இவர் சர்ச்சைக்குரிய பேச்சுகளால் பிரபலமானவர். உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் நடந்த ராம் மகோத்சவ் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:- இந்து பெண்கள், ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ என்ற கொள்கையை பின்பற்றி வருகிறார்கள். ஆனால், இந்து தம்பதியர் அனைவரும் தலா 4 குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். அவற்றில், 2 குழந்தைகளை தங்களுக்கென வைத்துக்கொண்டு, மீதி … Read more

ஹாட்ரிக் விக்கெட்களை வீழ்த்திய சஹால்- கொல்கத்தா அணியை வீழ்த்தி ராஜஸ்தான் திரில் வெற்றி

மும்பை, ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற 30-வது லீக் போட்டியில் ராஜஸ்தான்-கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டி மும்பையில் உள்ள பிராபோர்ன் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி ராஜஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்களாக ஜாஸ் பட்லர் – தேவ்தத் படிக்கல் களமிறங்கினர். ஏற்கனவே இந்த தொடரில் அதிக ரன் அடித்தவர்கள் பட்டியலில் முன்னணி வகிக்கும் … Read more

ரஷிய அதிபருடனான உரையாடல் நிறுத்தப்பட்டது: பிரான்ஸ் அதிபர்

பாரிஸ், உக்ரைனில் நடந்த “பாரிய படுகொலைகள்” தொடர்பாக புதினுடனான உரையாடல் நிறுத்தப்பட்டதாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தெரிவித்தார்.  “புச்சா மற்றும் பிற நகரங்களில் ரஷியாவின் கண்மூடித்தனமான தாக்குதல்களுக்கு பிறகு நான் அவரிடம் நேரடியாகப் பேசவில்லை”. தான் எதிர்காலத்திலும் இதே நிலைப்பாட்டில் இருப்பேன் என்று அவர் கூறினார்.   உக்ரேனிய தலைநகர் கியேவுக்கு ஏன் பயணம் செய்யவில்லை என்று கேட்டதற்கு, ரஷியா உக்ரைன் மீது படையெடுத்த பிறகு தனக்குத்தானே ஆதரவு காட்ட வேண்டிய அவசியமில்லை என்று கூறிய … Read more

கார் விபத்தில் தமிழக வீர‌ர் உயிரிழப்பு – தேசிய டேபிள் டென்னிஸ் தொடரில் பங்கேற்க சென்ற போது நேர்ந்த சோகம்

ஷிலாங்க், 83-வது தேசிய டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் மேகாலயாவில் இன்று தொடங்குகிறது. இதில், தமிழ்நாடு சார்பில் இளம் வீரரான தீனதயாளன் விஷ்வா உள்பட 4 வீரர்கள் நேற்று கார் மூலம் அசாமில் இருந்து மேகாலயாவுக்கு புறப்பட்டு சென்றனர். அசாம் தலைநகர் கவுகாத்தில் இருந்து மேகாலயாவின் ஷிலாங்க் நோக்கி கார் சென்றுகொண்டிருந்தது. மேகாலயாவின் ஷாங்க்பங்க்லா என்ற பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது சாலையின் எதிரே வந்த லாரி வீரர்கள் பயணித்த கார் மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர … Read more

உக்ரைனிய படையில் 470 ஆளில்லா விமானங்கள் அழிப்பு; ரஷியா அறிவிப்பு

மாஸ்கோ, நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாடு மீது ரஷியா நடத்தி வரும் போர் 54வது நாளாக நீடித்து வருகிறது.  இந்த போரில் இரு நாட்டு வீரர்களும் உயிரிழந்து உள்ளனர்.  பொதுமக்களில் பலர் கொல்லப்பட்டு உள்ளனர்.  உக்ரைன் படை வீரர்களில் 23 ஆயிரத்து 300 பேர் இதுவரை கொன்று குவிக்கப்பட்டுள்ளனர் என ரஷிய ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது. ரஷிய ராணுவ அமைச்சக செய்தி தொடர்பு அதிகாரி இகோர் கொனாஷெங்கோவ் போர் தாக்குதல் பற்றி கூறும்போது, உக்ரைன் … Read more

8 நாட்கள் சுற்றுப்பயணம் மொரீஷியஸ் பிரதமர் இந்தியா வருகை

மும்பை, இந்தியாவுடன் உறவுகளை மேம்படுத்தும் விதமாக மொரீஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜுக்நாத் இந்தியாவில் நேற்று முதல் 24-ந் தேதி வரை 8 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு இருந்தார்.  இந்த திட்டத்தின்படி நேற்று அவர் விமானம் மூலம் மும்பை வந்தார். அதிகாலை 1.20 மணி அளவில் சத்ரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தடைந்த அவரை வெளியுறவு துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் வரவேற்றனர்.  பயணத்தின் ஒரு பகுதியாக அவர் வருகிற 19-ந் தேதி குஜராத் … Read more