சீன நகரில் கொரோனா எழுச்சியால் 3-வது விமானம் தாங்கி கப்பல் கட்டுமானம் பாதிப்பு

பீஜிங்,  சீனாவின் பொருளாதார தலைநகரம் என்ற பெருமைக்குரிய ஷாங்காய் நகரில், 2 கோடியே 60 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். இங்கு கடந்த 15 நாட்களுக்கு மேலாக ஒமைக்ரான் வைரசால் தூண்டப்பட்ட கொரோனா அலை எழுச்சி பெற்றுள்ளது. கண்டிப்புடன்கூடிய ஊரடங்கு அந்த நகரில் பிறப்பிக்கப்பட்டுள்ளது. சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. வீடுகளுக்குள் மக்கள் முடங்கி உள்ளனர். ஆனாலும் அங்கு உள்ளூர் தொற்றாக நேற்று முன்தினம் மட்டும் 3,590 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. 21 ஆயிரத்து 500 உள்ளூர்வாசிகளுக்கு … Read more

குஜராத் அணியின் சவாலை சமாளிக்குமா சென்னை?

அறிமுக அணியான குஜராத் டைட்டன்ஸ் 4 வெற்றி (லக்னோ, டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான் அணிகளுக்கு எதிராக), ஒரு தோல்வியுடன் (ஐதராபாத் அணியிடம்) 8 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா (5 ஆட்டங்களில் 228 ரன்கள்), சுப்மான் கில் (200 ரன்கள்), டேவிட் மில்லர் ஆகியோர் பேட்டிங்கில் ஜொலித்து வருகிறார்கள். வேகப்பந்து வீச்சில் லோக்கி பெர்குசன் (8 விக்கெட்), முகமது ஷமி (7 விக்கெட்) ஆகியோர் அசத்துகின்றனர். சுழற்பந்து வீச்சில் ரஷித் … Read more

பாகிஸ்தானில் பஞ்சாப் புதிய முதல்-மந்திரியாக பிரதமரின் மகன் தேர்வு

லாகூர், பாகிஸ்தானில் பிரதமராக இருந்த இம்ரான்கான் தலைமையிலான அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது.  இதனை தொடர்ந்து, கான் பதவி நீக்கம் செய்யப்பட்டார். இந்த சூழலில், பஞ்சாப் மாகாண முதல்-மந்திரி உஸ்மான் புஸ்தார் தனது ராஜினாமாவை மாகாண கவர்னர் சவுத்ரி முகமது சர்வாரிடம் வழங்கினார்.  அவரும் அதனை ஏற்று கொண்டார்.  இதனையடுத்து, பஞ்சாப் அமைச்சரவை கலைக்கப்பட்டது.  பஞ்சாப் மாகாணத்தின் புதிய முதல்-மந்திரியை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு கடந்த 2ந்தேதி காலை 11 … Read more

மொரீஷியஸ் பிரதமர் 8 நாள் சுற்றுப்பயணமாக இன்று இந்தியா வருகை

புதுடெல்லி, மொரீஷியஸ் நாட்டின் பிரதமர் பிரவிந்த் குமார் ஜுக்நாத் இந்தியாவில் 8 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். இதற்கான 17-ந்தேதி(இன்று) அவர் இந்தியாவிற்கு வருகை தருகிறார். அவருடன் அவரது மனைவி கோபிதா ஜுக்நாத் உடன் வருகிறார்.  இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியா-மொரீஷியஸ் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்தும் விதமாக அந்நாட்டின் பிரதமர் இந்தியாவிற்கு வருகை தர உள்ளதாகவும், அவர் டெல்லி, குஜராத், வாரணாசி உள்ளிட்ட இடங்களிலுக்குச் செல்ல இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

ஐபிஎல்; டெல்லி அணியை வீழ்த்தி பெங்களூரு அபார வெற்றி

மும்பை, ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் சுவாரசியமாக சென்று கொண்டு இருக்கிறது.இன்று நடைபெற்ற   27 வது லீக்  ஆட்டத்தில் பெங்களூரு -டெல்லி அணிகள் மோதின.  இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .அதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது .அதன்படி  பெங்களூரு முதலில் பேட்டிங் செய்தது . தொடக்க வீரர்களாக டு பிளெஸ்சிஸ் ,அனுஜ் ராவத் களமிறங்கினர் . தொடக்கத்தில் இருவரும் ஆட்டமிழந்தனர் ,ராவத் ரன் எடுக்காமலும் ,டு பிளெஸ்சிஸ் 8 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். … Read more

அமெரிக்காவில் வணிக வளாகத்தில் துப்பாக்கி சூடு; 12 பேர் காயம்

வாஷிங்டன், அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தில் கொலம்பியா நகரில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் மக்கள் அதிகம் கூடியிருந்தபோது, மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். இதுபற்றி தலைமை காவல் அதிகாரி ஹோல்புரூக் கூறும்போது, துப்பாக்கி சூட்டில் ஒருவரும் உயிரிழக்கவில்லை.  இந்த சம்பவத்தில் 10 பேருக்கு காயம் ஏற்பட்டு உள்ளது.  2 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்து உள்ளனர் என கூறியுள்ளார்.  இதனால், மொத்தம் 12 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். … Read more

சீன மொழியை கற்கும் இந்திய ராணுவ வீரர்கள்

புதுடெல்லி, எல்லை பிரச்சினை காரணமாக, நம் அண்டை நாடான சீனாவுடன், 2020ம் ஆண்டு முதல் மோதல் போக்கு நிலவி வருகிறது. இப்பிரச்னைக்கு தீர்வு காண, இரு நாட்டு ராணுவ உயர் அதிகாரிகள் இடையே, தொடர்ந்து பேச்சு நடந்து வருகிறது. இதன் விளைவாக, லடாக்கின் பாங்கோங் சோ ஏரியின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் குவிக்கப்பட்டிருந்த சீன ராணுவ வீரர்கள் திரும்பப் பெறப்பட்டனர்.  எனினும், இதர பகுதிகளில் இருந்து வீரர்கள் வாபஸ் பெறப்படவில்லை. இந்நிலையில், சீன வீரர்களின் உத்திகளையும், … Read more

ஐபிஎல் 2022: உத்வேகத்தை தொடரும் முனைப்பில் ஐதராபாத்

பஞ்சாப் கிங்ஸ் அணி 3 வெற்றி (பெங்களூரு, சென்னை, மும்பை அணிகளுக்கு எதிராக), 2 தோல்வியுடன் (கொல்கத்தா, குஜராத் அணிகளிடம்) 6 புள்ளிகள் பெற்றுள்ளது. முந்தைய லீக் ஆட்டத்தில் பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் 5 முறை சாம்பியனான மும்பை அணிக்கு அதிர்ச்சி அளித்தது. அந்த ஆட்டத்தில் கேப்டன் மயங்க் அகர்வால், ஷிகர் தவான் ஆகியோர் அரைசதம் அடித்து அணிக்கு நல்ல அடித்தளம் அமைத்தனர். முந்தைய 3 ஆட்டங்களில் ஒற்றை இலக்க ரன்னில் நடையை கட்டிய … Read more

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 45.50 கோடியாக உயர்வு

வாஷிங்டன், சீனாவின் வுகான் நகரில் 2019 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது கொரோனா வைரஸ் 226 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.  கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் வைரஸ் உருமாற்றமடைந்து பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 கோடியே 43 லட்சத்து 37 ஆயிரத்து 880 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 4 கோடியே … Read more

வடஇந்தியர்கள் மராட்டிய கலாசாரத்திற்கு மாறிவிட்டனர்- தேவேந்திர பட்னாவிஸ்

மராட்டிய கலாச்சாரம் முன்னாள் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் நேற்று முன்தினம் பாந்திராவில் நடந்த உத்தர் பாரதிய சங் பவன் கட்டிட திறப்பு விழாவில் கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:- மும்பையில் 3, 4 தலைமுறையாக வசித்து வரும் வட இந்தியர்கள் மராட்டிய கலாச்சாரத்திற்கு மாறிவிட்டனர். மும்பையில் உள்ள டாடா புற்று நோய் ஆஸ்பத்திரிக்கு நாடு முழுவதும் இருந்து மக்கள் வருகின்றனர். அப்போது அவர்கள் தங்கும் இடம் போன்ற வசதிகள் கிடைக்காமல் அவதி அடைகின்றனர். இந்த பவன் … Read more