உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தில் ஜவுளித்துறையில் ரூ.19 ஆயிரம் கோடி முதலீட்டுக்கு ஒப்புதல்..!

புதுடெல்லி, மத்திய அரசின் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், ஜவுளித்துறையில் முதலீடு செய்வதற்காக பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து 67 பரிந்துரை கடிதங்கள் மத்திய அரசுக்கு வந்தன. இதில் கின்னி பிலமென்ட்ஸ், கிம்பர்லி கிலார்க் இந்தியா லிட்., அர்விந்த் லிட். உள்ளிட்ட கம்பெனிகளின் 61 பரிந்துரைகளுக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து உள்ளது. மத்திய அரசு அங்கீகரித்த இந்த 61 பரிந்துரைகளில், விண்ணப்பதாரர்களிடமிருந்து எதிர்பார்க்கப்படும் உத்தேச மொத்த முதலீடு ரூ.19,077 கோடி என மத்திய ஜவுளித்துறை செயலாளர் … Read more

ஐபிஎல் 2022 : புள்ளி பட்டியலில் குஜராத் அணி முதல் இடத்திற்கு முன்னேற்றம் ..!

15-வது சீசன் ஐபிஎல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இன்று நடைபெற்ற போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின. இந்த ஆட்டத்தில் 37 ரன்கள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றி பெற்றது .இந்த வெற்றியால் குஜராத் அணி 4 வெற்றிகளுடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில்  உள்ளது . கொல்கத்தா அணி  2வது இடத்திலும் ,ராஜஸ்தான் அணி 3 வது இடத்திலும் ,பஞ்சாப் அணி 4வது இடத்திலும் … Read more

அகிம்சை, உண்மை மற்றும் இரக்கம் ஆகிய மகாவீரரின் வழிகளை மக்கள் பின்பற்ற வேண்டும்; பைடன் மகாவீர் ஜெயந்தி வாழ்த்து

வாஷிங்டன், அமெரிக்க ஜனாதிபதி பைடன் மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு ஜெயின் சமூகத்தினருக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்து கொண்டார்.  இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில், ஜெயின் மத நம்பிக்கைகளை கடைப்பிடிக்கும் மக்களுக்கு மகாவீர் ஜெயந்தியை முன்னிட்டு நானும், ஜில்லும் (பைடனின் மனைவி) வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறோம். நாம் அனைவரும் உண்மையை தேடியும், வன்முறையில் இருந்து விலகியும், ஒருவருக்கொருவர் நல்லிணக்கத்துடன் வாழும் மகாவீர் சுவாமி காட்டிய வழிமுறையை பின்பற்றுவோம் என்று தெரிவித்து உள்ளார். ஜெயின் மதத்தில் கடைசி தீர்த்தங்கரராக … Read more

2021-22-ம் நிதியாண்டில் சேவை ஏற்றுமதி ரூ.18.75 லட்சம் கோடியாக உயர்வு மத்திய மந்திரி பெருமிதம்

புதுடெல்லி,  நாட்டில் கொரோனா காரணமாக பயணம், சுற்றுலா, விமான போக்குவரத்து உள்ளிட்ட துறைகள் பெருமளவில் பாதிக்கப்பட்டிருந்தபோதும், சரக்கு மற்றும் சேவை ஏற்றுமதியில் இந்தியா மைல்கல் சாதனை படைத்திருப்பதாக மத்திய வர்த்தக மந்திரி பியூஸ்கோயல் பெருமிதத்துடன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறுகையில், கடந்த 31-ந்தேதியுடன் நிறைவடைந்த 2021-22-ம் நிதியாண்டில் நாட்டின் சேவை ஏற்றுமதி முன்னெப்போதும் இல்லாத அளவாக 250 பில்லியன் டாலராக (சுமார் ரூ.18.75 லட்சம் கோடி) அதிகரித்து இருப்பதாக தெரிவித்தார். இதைப்போல சரக்கு ஏற்றுமதியும் 400 … Read more

புரோ ஹாக்கி லீக் : ஜெர்மனியை வீழ்த்தி இந்திய அணி வெற்றி

புவனேஸ்வர், 9 அணிகள் பங்கேற்றுள்ள புரோ ஹாக்கி லீக் தொடர் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும்.   இந்நிலையில்  இந்தியா-ஜெர்மனி அணிகள் இடையிலான முதலாவது லீக் ஆட்டம் இன்று நடைபெற்றது . இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது 

ஷாங்காய் நகரில் தினசரி கொரோனா பாதிப்பு அதிகரிப்பு

பீஜிங்: சீனாவின் ஷாங்காய் நகரில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 27 ஆயிரத்துக்கும் மேற்பட்டவா்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது அந்த நகரின் அதிகபட்ச தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கையாகும். முக்கிய வா்த்தக நகரான ஷாங்காயில் தினசரி கொரோனா பாதிப்பு புதிய உச்சங்களைத் தொட்டு வருவதையடுத்து, அங்கு 2 வாரங்களுக்கு மேல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

ம.பி: பெண்கள் மட்டும் வெளியே செல்ல அனுமதி

போபால், கார்கோன்- மத்திய பிரதேசத்தில், வன்முறையால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள கார்கோன் நகரில், பெண்கள் மட்டும் வெளியே செல்ல, இரண்டு மணி நேரத்திற்கு கட்டுப்பாடுகள்தளர்த்தப்பட்டன. மத்திய பிரதேசத்தில், முதல்-மந்திரி  சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையில், பாஜக ஆட்சி நடக்கிறது. இங்கு, கார்கோனில் 10ம் தேதி ராமநவமி விழாவை முன்னிட்டு, ராம பக்தர்கள் ஊர்வலம் சென்றனர்.அப்போது, சில மர்ம நபர்கள், ஊர்வலம் சென்றவர்கள் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால், இருதரப்பிற்கும் இடையே பயங்கர மோதல் வெடித்தது.சம்பவ இடத்திற்கு … Read more

ஐபிஎல் : ராஜஸ்தான் அணியை வீழ்த்தி குஜராத் அபார வெற்றி

மும்பை, 15-வது சீசன் ஐபிஎல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 23 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று 24-வது லீக் போட்டி மும்பையில் உள்ள டி.ஒய் பட்டேல் மைதானத்தில் நடைபெற்றது  இன்று நடைபெற்ற போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின   டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது .அதன்படி குஜராத் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்கத்தில் மேத்யூ … Read more

டுவிட்டர் நிறுவனத்தை மொத்தமாக வாங்க தயார் – எலான் மஸ்க்

நியூயாா்க், டுவிட்டா் நிறுவனத்தின் மொத்த பங்குகளையும் 41 பில்லியன் டாலருக்கு (சுமாா் ரூ.3.12 லட்சம் கோடி) வாங்குவதற்குத் தயாராக இருப்பதாக டெஸ்லா நிறுவனத்தின் தலைவா் எலான் மஸ்க் தெரிவித்துள்ளாா். டுவிட்டா் நிறுவனத்தில் சுமாா் 9 சதவீத பங்குகளை வைத்துள்ள அவா், அதன் இயக்குநா்கள் குழுவில் இடம்பெற மாட்டேன் எனக் கூறிய அடுத்த இரு தினங்களிலேயே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளாா். இதுதொடா்பாக டுவிட்டா் நிறுவனத்தின் தலைவா் பிரெட் டெய்லருக்கு அவா் புதன்கிழமை எழுதிய கடித விவரம் வியாழக்கிழமை வெளியானது. … Read more

இயற்கை எரிவாயு விலை உயர்வு: மத்திய அரசுக்கு காங்கிரஸ் கண்டனம்

புதுடெல்லி,  பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கியாஸ் சிலிண்டர்களைப்போல இயற்கை எரிவாயுவின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்தவகையில் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயுவின் (சி.என்.ஜி.) விலை நேற்றும் கிலோ ஒன்றுக்கு ரூ.2.50 அதிகரித்தது. இதற்கு மத்திய அரசை காங்கிரஸ் கட்சி கடுமையாக சாடியுள்ளது. இது எரிபொருள் கொள்ளை என வர்ணித்து உள்ளது. இது குறித்து கட்சியின் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலா தனது டுவிட்டர் தளத்தில், ‘மோடி அரசின் எரிபொருள் கொள்ளை திட்டத்தால் பணவீக்கம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. … Read more