இலங்கை தலைநகர் கொழும்புவில் அதிபர் அலுவலகம் முன்பு போராட்டக்காரர்கள் புத்தாண்டு கொண்டாட்டம்..!

கொழும்பு, அண்டை நாடான இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித்தவிக்கிறது. அன்னியச்செலாவணி கையிருப்பு கரைந்து போனது. அடுத்த 5 ஆண்டுகளில் 25 பில்லியன் டாலர் (சுமார் ரூ.1 லட்சத்து 87 ஆயிரத்து 500 கோடி) வெளிநாட்டு கடன்களை திருப்பிச்செலுத்த வேண்டிய நெருக்கடியும் உள்ளது. இந்த ஆண்டு மட்டுமே 7 பில்லியன் டாலர் கடனை (சுமார் ரூ.52 ஆயிரத்து 500 கோடி) திருப்பிச்செலுத்த வேண்டிய நெருக்கடி உள்ளது. ஆனால் சர்வதேச நிதியத்துடனான கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை முடிக்கிறவரையில், … Read more

அமெரிக்காவில் ‘கோவேக்சின்’ தடுப்பூசி மருத்துவ பரிசோதனை நிறுத்திவைப்பு

ஐதராபாத்,  இந்தியாவில் ஐதராபாத்தில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனத்தார், கொரோனாவுக்கு எதிராக கோவேக்சின் என்ற தடுப்பூசியை கண்டுபிடித்து தயாரித்து வினியோகித்து வருகின்றனர். இந்த தடுப்பூசி, இந்தியாவின் கொரோனா தடுப்பூசி திட்டத்திலும் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசியின் உற்பத்தி ஆலைகளில் உற்பத்தி நடைமுறைகள் குறைபாடு கண்டுபிடிக்கப்பட்டு, தடுப்பூசி வினியோகத்தை உலக சுகாதார அமைப்பு நிறுத்தி வைத்துள்ளது. இந்த நிலையில் இந்த தடுப்பூசியின் 2/3-வது கட்ட மருத்துவ பரிசோதனைகளை அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்துப்பொருள் நிர்வாகம் (எப்டிஏ) நிறுத்தி வைத்துள்ளது. இதுபற்றி … Read more

ஐபிஎல் : ஹார்திக் பாண்டியா அதிரடி : குஜராத் அணி 192 ரன்கள் குவிப்பு ..!

மும்பை,! 15-வது சீசன் ஐபிஎல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 23 லீக் போட்டிகள் நடந்து முடிந்துள்ள நிலையில், இன்று 24-வது லீக் போட்டி மும்பையில் உள்ள டி.ஒய் பட்டேல் மைதானத்தில்நடைபெறுகிறது. இன்று நடைபெறும் போட்டியில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும், சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன.  இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .அதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது .அதன்படி குஜராத் … Read more

கொரோனா விதி மீறிய விவகாரம் சூடு பிடிக்கிறது – இங்கிலாந்து நீதித்துறை மந்திரி திடீர் ராஜினாமா

லண்டன், இங்கிலாந்து நாட்டில் கடந்த 2020-ம் ஆண்டில் கொரோனா கட்டுப்பாட்டு விதிகள் அமலில் இருந்தன. பொதுஇடங்களில் மக்கள் கூடவும், விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்கவும் தடை போடப்பட்டிருந்தது. ஆனால் அந்த ஆண்டின் ஜூன் மாதத்தில் பிரதமர் போரிஸ் ஜான்சனின் பிறந்த நாள் விருந்து, பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லமான லண்டன், எண், 10, டவுனிங் வீதியில் நடைபெற்றது. பல பிரபலங்கள் கலந்துகொண்டுள்ளனர். இது வெளியே அம்பலத்துக்கு வந்தது. இதை ஊடகங்கள் கடுமையாக விமர்சித்தன. ‘பார்ட்டி கேட்’ (விருந்து ஊழல்) … Read more

விலைவாசி உயர்வுக்கு உலக நிலவரமே காரணம் மத்திய மந்திரி பியூஸ் கோயல் பேட்டி

புதுடெல்லி,  மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை மந்திரி பியூஸ் கோயல் நேற்று டெல்லியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- கச்சா எண்ணெய் விலை உயர்வு, ரஷியா-உக்ரைன் போர், கொரோனா உள்ளிட்ட உலக நிலவரம்தான் விலைவாசி உயர்வுக்கு காரணம். விலைவாசியை கட்டுப்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பருப்பு போன்ற அத்தியாவசிய பொருட்களின் இறக்குமதிக்கான வரியை நீக்கி இருக்கிறோம். நம்மிடம் போதுமான உணவு தானியம் இருக்கிறது. அதனால்தான், நமது உணவு கையிருப்பை உலக நாடுகளுக்கு வழங்க … Read more

பெண்கள் ஜூனியர் உலக கோப்பை கால்பந்து: இந்தியாவில் 3 நகரங்களில் நடக்கிறது

மும்பை,  பெண்களுக்கான 7-வது ஜூனியர் உலக கோப்பை கால்பந்து போட்டி (17 வயதுக்குட்பட்டோர்) இந்தியாவில் புவனேஸ்வர், கோவா, நவி மும்பை ஆகிய நகரங்களில் அக்டோபர் 11-ந்தேதி முதல் 30-ந்தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அணிகள் யார்-யாருடன் மோதுவது என்பது ஜூன் 24-ந்தேதி ஷூரிச்சில் நடைபெறும் குலுக்கலில் (டிரா நிகழ்ச்சி) முடிவு செய்யப்படும் என்று சர்வதேச கால்பந்து சம்மேளனம் நேற்று அறிவித்தது. இந்த போட்டியில் இந்தியா, பிரேசில், சீனா, சிலி உள்பட 16 அணிகள் பங்கேற்கின்றன.

ரஷியாவில் இன்போசிஸ் நிறுவனத்தை மூட முடிவு..!

மாஸ்கோ, முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் நிறுவனம், ரஷியாவில் தனது அலுவலகத்தை மூட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் நாட்டின் மீது ரஷியா படையெடுத்து போர் நடத்தி வருகிறது. ரஷியாவின் ராணுவ நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பிலும் கண்டனம் எழுந்துள்ள நிலையில், ரஷியாவில் தங்களது வணிகம் சார்ந்த செயல்பாடுகளை உலகின் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் நிறுத்திக் கொண்டுள்ளன. இந்த நிலையில் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனமான இன்போசிஸ் நிறுவனம் தனது ரஷிய அலுவலகத்தை மூட முடிவு … Read more

"ஓட்டல்களில் தங்கக்கூடாது; உறவினர்களை உதவியாளராக நியமிக்கக்கூடாது" – உ.பி. மந்திரிகளுக்கு யோகி ஆதித்யநாத் கிடுக்கிப்பிடி

லக்னோ, உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தலைமையில் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது, மந்திரிகளுக்கும், அதிகாரிகளுக்கும் அவர் கிடுக்கிப்பிடி உத்தரவுகளை பிறப்பித்தார். அவர் கூறியதாவது:- உத்தரபிரதேச மந்திரிகள், அரசுமுறை பயணமாக வெளியூர் செல்லும்போது, ஓட்டல்களில் தங்கக்கூடாது. விருந்தினர் விடுதிகளில்தான் தங்க வேண்டும். அதிகாரிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். மந்திரிகள், தங்கள் உறவினர்களை தனி உதவியாளர்களாக நியமிக்கக்கூடாது.  அரசு அதிகாரிகளும், ஊழியர்களும் சரியான நேரத்துக்கு பணிக்கு வர வேண்டும். தாமதமாக வருபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை … Read more

பெண்கள் கைப்பந்து போட்டி சென்னையில் இன்று தொடக்கம்..!

சென்னை, எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரி, ஜி.கே.எம். கைப்பந்து பவுண்டேசன், லேடி சிவசாமி அய்யர் பள்ளி ஆகியவை இணைந்து மாநில அளவிலான பெண்கள் மற்றும் பள்ளி மாணவிகளுக்கான கைப்பந்து போட்டியை நடத்துகிறது.  இந்த போட்டி சென்னை மயிலாப்பூரில் உள்ள லேடி சிவசாமி பள்ளியில் இன்று (வியாழக்கிழமை) முதல் 16-ந் தேதி வரை நடக்கிறது. பெண்கள் பிரிவில் எஸ்.ஆர்.எம்., பி.கே.ஆர்., எஸ்.டி.ஏ.டி., ஐ.சி.எப்., தமிழ்நாடு போலீஸ், டாக்டர் சிவந்தி கிளப், ஜி.கே.எம்., பாரதியார் ஆகிய 8 அணிகளும், பள்ளிகள் பிரிவில் … Read more

பா.ஜனதாவிற்கு எதிரான கட்சிகளை ஒருங்கிணைக்கும்போது காங்கிரசை புறக்கணிப்பது சரியல்ல – சரத்பவார் கருத்து

மும்பை,  மேற்கு வங்க முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, பா.ஜனதாவிற்கு எதிராக காங்கிரஸ் அல்லாத எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்தநிலையில் கடந்த மாதம் 27-ந் தேதி அவர், எதிக்கட்சிகள் ஆளும் முதல்-மந்திரிகள் மற்றும் எதிர்க்கட்சிகளின் தலைவர்களுக்கு கடிதம் ஒன்றை எழுதினார். அதில், “நாட்டின் அடிப்படை ஜனநாயகத்திற்கு எதிரான பா.ஜனதாவின் நடவடிக்கைகள் குறித்து, வேதனையுடன் இக்கடிதத்தை எழுதுகிறேன். பா.ஜனதாவை எதிர்த்து போராடவும், நாட்டில் தகுதியான அரசு அமையவும் நாம் ஒருங்கிணைந்து போராட வேண்டும். … Read more