பிலிப்பைன்சை புரட்டிப்போட்ட 'மெகி புயல்' – பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு

மணிலா, பிலிப்பைன்ஸ் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது 20 புயல்கள் தாக்குகின்றன. இவை அங்கு கடுமையான சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன. இந்நிலையில் கடந்த 10-ந் தேதி பிலிப்பைன்சின் மத்திய மற்றும் தெற்கு பகுதிகளை ‘மெகி’ என்கிற சக்தி வாய்ந்த புயல் கடுமையாக தாக்கியது. இந்த புயல் பிலிப்பைன்சின் பல மாகாணங்களை புரட்டி போட்டு விட்டது. குறிப்பாக மத்திய மாகாணமான லெய்டே கடுமையான பாதிப்பை எதிர்க்கொண்டுள்ளது. புயலை தொடர்ந்து கொட்டித்தீர்த்த கனமழையால் லெய்டே மாகாணம் முழுவதும் வெள்ளகாடாகி உள்ளது. … Read more

கோவில் ஊர்வலத்தை முன்னிட்டு நாளை திருவனந்தபுரத்தில் விமான நிலைய ஓடுபாதை மூடல்..!

திருவனந்தபுரம், பங்குனி திருவிழாவின் ஒரு பகுதியான ஸ்ரீ பத்மநாபசுவாமி கோவிலின் ஆராட்டு ஊர்வலத்தை முன்னிட்டு கேரளாவில் உள்ள திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் நாளை (ஏப்ரல் 15) மாலை 4 மணி முதல் இரவு 9 மணி வரை ஓடுபாதை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து விமான நிலையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அந்த நேரத்தில் உள்ள உள்நாட்டு மற்றும் சர்வதேச சேவைகள் மாற்றியமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, நேற்று மற்றும் இன்று … Read more

ஐபிஎல் : மும்பை அணியை வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி

மும்பை, ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் சுவாரசியமாக சென்று கொண்டு இருக்கிறது. இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை -பஞ்சாப் அணிகள்  மோதின   . இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .அதில் டாஸ் வென்ற மும்பை அணி பந்துவீச்சை  தேர்வு செய்தது .அதன்படி பஞ்சாப் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீரர்களாக தவான் ,மயங்க் அகர்வால் களமிறங்கினார் .தொடக்கம் முதல் மும்பை அணியின் பந்துவீச்சை துவம்சம் செய்தனர் பந்துகளை பவுண்டரி ,சிக்சருக்கு பறக்க விட்டனர். அதிரடியாக விளையாடிய … Read more

கிரீஸ் அதிபருக்கு கொரோனா

ஏதென்ஸ்,  கிரீஸ் நாட்டின் அதிபர் கேத்ரினா சகெல்லரோபவுலோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 65 வயதான கேட்டரினாவுக்கு லேசான அறிகுறிகள் இருப்பதாகவும், அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதிபர் கேட்டரினா, பூஸ்டர் உள்பட 3 தவணை கொரோனா தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டபோதும் அவரை வைரஸ் தாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக கடந்த மாதம் கிரீஸ் பிரதமர் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் கொரோனா தொற்றுக்கு ஆளாகி, பின்னர் அதிலிருந்து மீண்டு வந்தது நினைவுகூரத்தக்கது.

இந்தியாவில் தயாரான டோர்னியர்-228 ரக விமானத்தின் வணிக பயன்பாடு துவக்கம்

திஸ்பூர், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட டோர்னியர்-228 ரக விமானம் முதல் முறையாக மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்தியாவில் முழுமையாக தயாரிக்கப்பட்ட இந்த விமானத்தை அசாமின் திப்ருகர் மற்றும் அருணாச்சல பிரதேசத்தின் பாசிகட் இடையே அலையன்ஸ் ஏர் நிறுவனம் இயக்குகிறது.  இது 17 இருக்கைகள் கொண்ட சிறிய ரக விமானம் ஆகும். இந்த ரக விமானங்களை பாதுகாப்பு படையினர் ஏற்கனவே பயன்படுத்தி வருகின்றனர். இந்த விமான சேவையின் துவக்க விழாவில் விமான போக்குவரத்துத்துறை மந்திரி ஜோதிராதித்ய சிந்தியா, அருணாச்சல பிரதேச … Read more

ஐபிஎல் : 200வது போட்டியில் வெற்றி பெற்ற சென்னை அணி..!

மும்பை, நேற்று நடைபெற்ற  ஐ.பி.எல் 2022 தொடரின் 22வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணிகள் மோதின. இந்த போட்டியில் சென்னை அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது    ஐபிஎல் தொடரில் இந்த போட்டி  சென்னை அணி விளையாடிய 200- வது போட்டியாகும் .இந்த சீசனில் முதல் வெற்றியையும் ,200வது போட்டியில் வெற்றியும் பெற்றதால் சென்னை அணி ரசிகர்கள் உறுற்சாகமடைந்துள்ளனர்.

நைஜீரியாவில் பயங்கரம் கிராமங்களுக்குள் புகுந்து கொள்ளை கும்பல் துப்பாக்கிச்சூடு 70 பேர் கொன்று குவிப்பு

அபுஜா,  ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் போகோஹரம் பயங்கரவாதிகள் அந்த நாட்டு படைகளுடன் சண்டையிட்டு வருகின்றனர். இது ஒருபுறமிருக்க அங்கு பல்வேறு ஆயுதமேந்திய கொள்ளை கும்பல்கள் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. ‘பண்டிட்ஸ்’ என்று அழைக்கப்படும் இந்த கொள்ளை கும்பல்கள் பள்ளி மாணவ-மாணவிகளை கடத்தி மிரட்டி பணம் பறிப்பது, கிராமங்களுக்குள் புகுந்து அப்பாவி மக்களை கொன்று பணம் மற்றும் கால்நடைகளை திருடி செல்வது போன்ற நாச வேலைகளில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், நைஜீரியாவின் மத்திய மாகாணமான பிளாடீயூவின் தலைநகர் … Read more

மகாவீர் ஜெயந்தியையொட்டி நாமக்கலில் நாளை மதுபான கடைகள் மூடல்

நாமக்கல், நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயாசிங் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- “மகாவீர் ஜெயந்தியையொட்டி நாளை (வியாழக்கிழமை) இந்திய தயாரிப்பு அயல் நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்கள் மற்றும் உரிம வளாகங்களை மூட வேண்டும் என அரசு உத்தரவிட்டு உள்ளது.  அதன்படி நாளை நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து இந்திய தயாரிப்பு அயல் நாட்டு மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்களை மூட வேண்டும். இந்த உத்தரவை மீறி மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுக்கூடங்களை … Read more

ஐபிஎல் : பெங்களூரு அணியை வீழ்த்தி, முதல் வெற்றியை பதிவு செய்தது சென்னை அணி

மும்பை, இன்று  நடைபெற்ற  ஐ.பி.எல் 2022 தொடரின் 22வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணிகள் மோதின  இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.அதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது .அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது . தொடக்கத்தில் சென்னை அணியின் ருதுராஜ் கெய்க்வாட் ,மொயீன் அலி ஆகியோர்ஆட்டமிழந்தனர் .இதன் பின்னர் உத்தப்பா ,ஷிவம்  துபே இருவரும்  நிலைத்து நின்று ஆடினர்.ஒரு புறம் உத்தப்பா ,மறுபுறம் … Read more

#லைவ் அப்டேட்ஸ்: இலக்குகள் நிறைவேறும் வரை உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கை தொடரும் – புதின்

கீவ், உக்ரைன் மீது ரஷியா 49-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. ஏப்ரல் 13 – 03.30 A.M ரஷியா ‘இனப்படுகொலை’ செய்கிறது –  ஜோ பைடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் முதன் முறையாக உக்ரைனில் ரஷியாவின் படையெடுப்பை “இனப்படுகொலை” என்று குறிப்பிட்டார். அயோவாவில் நடந்த போரின் காரணமாக அதிகரித்து வரும் எரிபொருள் விலையை நிலைநிறுத்த தனது நிர்வாகம் எடுத்து வரும் நடவடிக்கைகள் பற்றி ஒரு நிகழ்வில் பேசிய பைடன், உக்ரைனிய குடிமக்களுக்கு எதிராக ரஷியா அட்டூழியங்களை … Read more