விலைவாசி, வேலையின்மை என்ற மக்கள் பிரச்சினைகள் மீது புல்டோசர் ஏற்றுங்கள் மத்திய அரசுக்கு ராகுல்காந்தி வலியுறுத்தல்

புதுடெல்லி,  மத்தியபிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டத்தில் நடந்த ராமநவமி ஊர்வலத்தில், கல் வீசியதாக 80 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் சட்டவிரோதமாக கட்டி இருந்த 50 கட்டுமானங்களை மாவட்ட நிர்வாகம் புல்டோசர் ஏற்றி அழித்தது. இதை சுட்டிக்காட்டி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- விலைவாசி உயர்வு, வேலையின்மை ஆகியவை மக்களை திணறடித்து வருகின்றன. அந்த பிரச்சினைகள் மீது மத்திய அரசு புல்டோசரை ஏற்ற … Read more

ஐபிஎல் : பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் உத்தப்பா ,ஷிவம் துபே அரைசதம்

மும்பை, இன்று நடைபெறும் ஐ.பி.எல் 2022 தொடரின் 22வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணிகள் மோதுகின்றன . இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.அதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது .அதன்படி சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது . தொடக்கத்தில் சென்னை அணியின் ருதுராஜ் கெய்க்வாட் ,மொயீன் அலி ஆகியோர்ஆட்டமிழந்தனர் .இதன் பின்னர் உத்தப்பா ,ஷிவம்  துபே இருவரும்  நிலைத்து நின்று ஆடினர்.ஒரு புறம் … Read more

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப் நாடு திரும்ப உள்ளதாக தகவல்

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் பார்லிமென்டில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதால், பிரதமர் பதவியிலிருந்து இம்ரான் கான் விலகினார். இதையடுத்து பாகிஸ்தானின் புதிய பிரதமராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் சகோதரரும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் ( என்) கட்சியின் தலைவருமான ஷெபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டார். பாக். புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டதையடுத்து அவருக்கு பிரதமர் மோடி கடந்த சில தினங்களுக்கு முன் வாழ்த்து தெரிவித்தார். இதற்கு ஷெபாஸ் ஷெரீப் பிரதமர் … Read more

தடுப்பூசி செலுத்தும் பணியில் வேகம் தேவை – மத்திய சுகாதாரத்துறை மந்திரி அறிவுறுத்தல்

புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா பரவல் வெகுவாக குறைந்துள்ள நிலையில், உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் எக்ஸ்.இ., வகை வைரஸ் பாதிப்பு சில இடங்களில் கண்டறியப்பட்டு உள்ளது. இது தொடர்பாக, டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தலைமையில் நிபுணர் குழுவின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், நிடி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால், மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன், எய்ம்ஸ் இயக்குனர் ரன்தீப் குலேரியா உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவலை தீவிரமாக … Read more

சென்னை அணிக்கு எதிராக விளையாடுவது எனது சகோதரர்களுக்கு எதிராக விளையாடுவது போன்றது : டு பிளெஸ்சிஸ் நெகிழ்ச்சி

மும்பை , இன்று நடைபெறும் ஐ.பி.எல் 2022 தொடரின் 22வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணிகள் மோதுகின்றன  கடந்த ஆண்டு வரை  ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக விளையாடிய டு பிளெஸ்சிஸ் அணியின்  முக்கிய பேட்ஸ்மேனாக திகழ்ந்தார் . இந்த ஆண்டு நடந்த ஐபிஎல் மெகா ஏலத்தில் சென்னை அணி  அவரை ஏலத்தில் எடுக்கவில்லை . பெங்களூரு அணி அவரை ரூ 7 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது . தற்போது … Read more

ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் அமெரிக்கா ஆதரவு

வாஷிங்டன்,  ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர் பதவியை பெறுவது இந்தியாவின் நீண்ட கால கனவு ஆகும். இதற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்துள்ளது. வாஷிங்டனில் மத்திய மந்திரிகள் ராஜ்நாத் சிங், ஜெய்சங்கர் ஆகியோர் அமெரிக்க மந்திரிகள் ஆண்டனி பிளிங்கனையும், லாயிட் ஆஸ்டினையும் ேநற்று முன்தினம் சந்தித்து பேசிய பின்னர் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் இது இடம் பெற்றுள்ளது. அந்த அறிக்கையில், “ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்பினர் ஆவதற்கும், அணுசக்தி வினியோக குழுவில் இந்தியா இடம் பெறுவதற்கும் அமெரிக்கா … Read more

பயங்கரவாதம் இல்லாத பிராந்தியத்தை இந்தியா விரும்புகிறது – பாக். புதிய பிரதமருக்கு இந்திய பிரதமர் வாழ்த்து

புதுடெல்லி, பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான்கான் அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றது. இதனால், இம்ரான்கானின் அரசு கவிழ்ந்தது. மேலும், பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து இம்ரான்கான் நீக்கப்பட்டார். இதனை தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவரான ஷபாஷ் ஷெரீப் பாகிஸ்தானின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிய பிரதமராக தேர்தெடுக்கப்பட்ட ஷபாஷ் ஷெரீப் நேற்று பதவியேற்றுக்கொண்டார்.    இந்நிலையில், பாகிஸ்தானின் புதிய பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஷபாஷ் ஷெரீப்பிற்கு இந்திய பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக … Read more

ஈஞ்சம்பள்ளி இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் பெண்களுக்கான மாநில அளவிலான கிளித்தட்டு விளையாட்டு போட்டி- சிவகங்கை மாவட்ட அணிக்கு …

மொடக்குறிச்சி ஈஞ்சம்பள்ளி இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் மாநில அளவில் நடந்த பெண்களுக்கான கிளித்தட்டு விளையாட்டு போட்டியில் சிவகங்கை மாவட்ட அணி முதல் பரிசை பெற்றது.  கிளித்தட்டு போட்டி இலங்கையில் பெண்கள் மட்டுமே கலந்து கொண்டு விளையாடும் புகழ்பெற்ற விளையாட்டான கிளித்தட்டு விளையாட்டு போட்டி ஈரோடு அருகே உள்ள ஈஞ்சம்பள்ளி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் நடைபெற்றது. இதில் ஈரோடு, கரூர், திண்டுக்கல், மதுரை, கோவை, மேட்டுப்பாளையம் தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 14 … Read more

#லைவ் அப்டேட்: கிழக்கு நகரங்கள் மீது ரஷியா விரைவில் மீண்டும் தாக்குதலை தொடங்கலாம் – உக்ரைன் எச்சரிக்கை

கீவ், உக்ரைன் மீது ரஷியா 48-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரில் இன்று நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள் பின்வருமாறு:- ஏப்ரல் 12, 2.05am உக்ரைனை தொடர்ந்து நேட்டோவில் இணைய ஆர்வம் காட்டும் பின்லாந்து – ரஷியா கடும் எதிர்ப்பு    ஏப்ரல்12, 2.00 am உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்துள்ள நிலையில் போரை முடிவுக்கு கொண்டு வர பல நாடுகள் முயற்சித்த போதும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன. உக்ரைன் தலைநகர் … Read more

ரோப் கார்கள் விபத்து: ஹெலிகாப்டர் மூலம் மீட்கும் பணி தீவிரம்..!

ராஞ்சி, சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்க கோவில்களில் ஒன்று பாபா வைத்யநாத் கோவில். இது ஜார்கண்ட் மாநிலம் தியோகர் மாவட்டத்தில் உள்ளது. திரிகுட் மலை மீது சென்று இந்த கோவிலுக்கு தரிசனம் செய்ய சுற்றுலா பயணிகள், பக்தர்களுக்கு வசதியாக மாநில சுற்றுலாத்துறை சார்பில் ரோப் கார் வசதி செய்யப்பட்டு இருக்கிறது. இந்தியாவின் மிக உயரமான செங்குத்தாக அமைக்கப்பட்டுள்ள ரோப் கார் இதுவாகும். 1,500 அடி உயரம் கொண்ட திரிகுட் மலையில் அமைந்துள்ள இந்த ரோப் கார் 766 மீட்டர் … Read more