#லைவ் அப்டேட்ஸ்: கிழக்கு உக்ரைன் மீது தீவிர தாக்குதல் நடத்த 13 கி.மீ. தொலைவுக்கு ரஷிய போர் வாகனங்கள் அணிவகுப்பு

கீவ்,  உக்ரைன் மீது ரஷிய ராணுவம் 47-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைன் ராணுவமும் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. மார்ச் 11, 3.00 A.M மிகப்பெரிய போருக்கு தயார் – உக்ரைன்  ரஷியாவுக்கு எதிராக மிகப்பெரிய போருக்கு உக்ரைன் தயாராக இருப்பதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் ஆலோசகர் மைக்கெலோ பொடொல்யாக் தேசிய தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். மேலூம், இரு பிரிவினைவாத பகுதிகளை உள்ளடக்கிய கிழக்கு டோன்பாஸ் பிரதேசத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ரஷியப் படைகளை … Read more

விலைவாசி உயர்வு குறித்து விமானத்தில் ஸ்மிரிதி இரானியுடன் காங். பெண் தலைவர் வாக்குவாதம்

புதுடெல்லி, மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை மந்திரி ஸ்மிரிதி இரானி, நேற்று டெல்லியில் இருந்து அசாம் தலைநகர் கவுகாத்திக்கு ஒரு தனியார் விமானத்தில் பயணம் செய்தார்.கவுகாத்தியை அடைந்தவுடன், பயணிகள் கீழே இறங்க தொடங்கினர். அப்போது, முதல் வரிசையில் அமர்ந்திருந்த ஸ்மிரிதி இரானியிடம் அதே விமானத்தில் பயணித்த, அகில இந்திய மகளிர் காங்கிரஸ் செயல் தலைவர் நேட்டா டிசவுசா வந்தார். பெட்ரோல், டீசல், சமையல் கியாஸ் விலை உயர்வு குறித்து இரானியிடம் கேள்வி எழுப்பினார். அதற்கு ஸ்மிரிதி … Read more

ஐபிஎல் : லக்னோ அணியை வீழ்த்தி ராஜஸ்தான் அணி 'திரில்' வெற்றி..!

மும்பை , 15-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 20 -வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின  இதில் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .அதில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது . அதன்படி  ராஜஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது  தொடக்கத்தில் பட்லர் 13 ரன்களில் ஆட்டமிழந்தார் .பின்னர் படிக்கல்  சாம்சன் ,ராசி வான்டெர் டுசன் என , சீரான இடைவெளியில் ஆட்டமிழந்ததால்  அந்த அணி … Read more

தென் கொரியாவில் கொரோனா ஆதிக்கம் சரிவு

சியோல்,  ஆசிய நாடுகளில் ஒன்றான தென்கொரியாவில் ஒமைக்ரான் வைரசால் தூண்டப்பட்ட கொரோனா, ஆதிக்கம் செலுத்தி வந்தது. தினமும் 4 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது உண்டு. இந்த நிலை இப்போது மாறி வருகிறது. நேற்று முன்தினம் 1 லட்சத்து 85 ஆயிரத்து 566 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. நேற்று இந்த எண்ணிக்கை 1 லட்சத்து 64 ஆயிரத்து 481 ஆக சரிவை சந்தித்தது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியே 53 லட்சத்து 33 … Read more

திருப்பதியில் இலவச தரிசன டிக்கெட் வழங்கும் பணி தற்காலிக நிறுத்தம்

திருப்பதி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இலவச தரிசனம் செய்வதற்காக திருப்பதி பஸ் நிலையம் எதிரே உள்ள ஸ்ரீனிவாசம் பக்தர்கள் ஓய்வறை, ரெயில் நிலையம் பின்புறம் உள்ள கோவிந்தராஜர் சத்திரம், அலிபிரியில் உள்ள பூதேவி காம்ப்ளக்ஸ் ஆகிய 3 இடங்களில் இலவச தரிசன டோக்கன் வழங்கப்படுகிறது. தரிசனத்திற்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வருகிற 12-ந்தேதி தரிசனம் செய்வதற்கான டிக்கெட்டுகள் நேற்று முன்தினம் மதியம் வரை மட்டும் வழங்கப்பட்டது. அதன்பிறகு இலவச தரிசன டிக்கெட் … Read more

ஐபிஎல் : லக்னோ அணிக்கு 166 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது ராஜஸ்தான் அணி

மும்பை , 15-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 20 -வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன  இதில் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .அதில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது . அதன்படி  ராஜஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது . தொடக்கத்தில் பட்லர் 13 ரன்களில் ஆட்டமிழந்தார் .பின்னர் படிக்கல்  சாம்சன் ,ராசி வான்டெர் டுசன் என , சீரான இடைவெளியில் ஆட்டமிழந்ததால்  … Read more

இலங்கையில் அதிபர் மாளிகை முன்பு திரண்டு ஆயிரக்கணக்கான மக்கள் போராட்டம்

கொழும்பு, இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் மக்களுக்கு ஏற்பட்டுள்ள துன்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடும் விலைவாசி உயர்வு, உணவு பொருட்கள், பெட்ரோல், டீசல் பற்றாக்குறை, பல மணி நேரம் மின்சார வினியோகம் தடை ஆகியவற்றால் தவித்து வரும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அதிபர் கோத்தபய ராஜபக்சே பதவி விலக வேண்டும் என்று போராட்டங்கள் நடந்து வருகிறது. சமீபத்தில் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. மக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் போராட்டம் நீடித்து … Read more

உக்ரைன் போர் குருத்தோலை ஞாயிறு பிரார்த்தனையில் போப் பிரான்சிஸ் வேதனை

வாடிகன் சிட்டி,  ஈஸ்டர் பண்டிகையின் முக்கிய நிகழ்வான குருத்தோலை ஞாயிறு நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. இதையொட்டி வாடிகன் நகரில் உள்ள செயின்ட் பீட்டர் பேராலயத்தில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் நேற்று சிறப்பு பிரார்த்தனை நடத்தினார். கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக மக்கள் கூட்டமின்றி இந்த பிரார்த்தனை நடந்தது. பிரார்த்தனைக்கு பிறகு தேவாலயத்தில் உரையாற்றிய போப் ஆண்டவர் பிரான்சிஸ் உக்ரைன் போர் குறித்து வேதனையுடன் பேசினார். இது குறித்து அவர் கூறியதாவது:- நாம் வன்முறையை நாடும்போது. நாம் ஏன் … Read more

ஐபிஎல் : லக்னோ அணிக்கு எதிரான ஆட்டத்தில் ராஜஸ்தான் அணி தடுமாற்றம்

மும்பை , 15-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 20 -வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதுகின்றன  இதில் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது .அதில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது . அதன்படி  ராஜஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது . தொடக்கத்தில் பட்லர் 13 ரன்களில் ஆட்டமிழந்தார் .பின்னர் படிக்கல் , சாம்சன் ,ராசி வான்டெர் டுசன் என , சீரான இடைவெளியில் … Read more

கடும் கொரோனா கட்டுப்பாடு: பசி கொடுமை – பால்கனி வழியாக உதவியை எதிர்நோக்கும் சீனர்கள்

பீஜிங், சீனாவில் கொரோனா வைரஸ் தொடர்ந்து கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் அங்கு ஊரடங்கு கடுமையாக்கப்பட்டு வருகிறது.  அதிலும், சுமார் 26 மில்லியன் மக்கள் வசிக்கும் ஷங்காய் என்ற பகுதியில் கொரோனா பரவல் அதிகமிருப்பதால், அங்கு மிகக்கடுமையாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இதனால் அப்பகுதி மக்கள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றனர். அப்பகுதியில் சாப்பாடு, தண்ணீர், மருத்துவம் உள்ளிட்ட சில அடிப்படை தேவைகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு வருகின்றது. வீட்டை விட்டே வெளியே வரக்கூடாது என கட்டுப்பாடுகள் … Read more