புதுச்சேரி சட்டசபை செயலகத்துக்கு நிதி அதிகாரம்- சபாநாயகர் செல்வம்

புதுவை சபாநாயகர் செல்வம் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- சட்டசபை செயலாளர் புதுவை சட்டசபை செயலாளருக்கு கடந்த 1981-ம் ஆண்டு மத்திய உள்துறை அமைச்சகம் துறை தலைவருக்கான நிதி அதிகாரங்களை பயன்படுத்துவதற்கான ஆணையை வழங்கி இருந்தது. இதுநாள் வரை புதுவை சட்டசபை செயலகத்தால் அந்த ஆணை நடைமுறைப் படுத்தப்படவில்லை. இது எனது கவனத்துக்கு கொண்டுவரப்பட்டது. இதுகுறித்து எனது தலைமையில் கடந்த பிப்ரவரி மாதம் தலைமை செயலாளர், நிதித்துறை செயலாளர், சட்டத்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுடன் … Read more

ஐபிஎல்: தொடரும் மும்பையின் தோல்வி…! – பெங்களூரு அபார வெற்றி

புனே, ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் புனேவில் இன்று நடந்த 18-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக கேப்டன் ரோகித் சர்மா, இஷான் கிஷன் களமிறங்கினர்.  இருவரும் தலா 26 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தனர். அடுத்துவந்த பெர்விஸ் 8 ரன்னிலு … Read more

பாகிஸ்தான் பிரதமர் பதவியில் இருந்து இம்ரான்கான் நீக்கம்…!

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். அந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது.  நள்ளிரவு 1.30 மணியளவில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான்கானுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. 342 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்ற அவையில் 174 உறுப்பினர்கள் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதன் மூலம் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றது. எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றதால் … Read more

மேற்கு வங்காளத்தில் பயணிகள் ரெயிலில் குதிரையை கொண்டு சென்ற உரிமையாளர் கைது

கொல்கத்தா,  மேற்கு வங்காளத்தின் தெற்கு 24 பர்கானாக்கள் மாவட்டத்தை சேர்ந்தவர் கபூர் அலி முல்லா. இவர் சொந்தமாக குதிரை ஒன்றை வளர்த்து வருகிறார். இதை கடந்த 6-ந்தேதி பந்தயம் ஒன்றுக்காக கொண்டு சென்றார். இரவில் பந்தயம் முடிந்ததும் குதிரையை வீட்டுக்கு கொண்டு செல்வது எப்படி? என யோசித்தார். அப்போது அவருக்கு விபரீத எண்ணம் தோன்றியது. அதாவது பயணிகள் ரெயிலில் தனது குதிரையையும் அழைத்து சென்றால் எப்படி? என எண்ணினார். அதை அப்படியே செயல்படுத்தவும் செய்தார். இதற்காக தக்‌ஷின் … Read more

இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக கிறிஸ் சில்வர்வுட் நியமனம்

கொழும்பு, இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைமைப் பயிற்சியாளர் கிறிஸ் சில்வர்வுட் இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக  பொறுப்பேற்க உள்ளதாக இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அவர் இலங்கை அணியின் தலைமை பயிற்சியாளராக இரண்டு வருட காலத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.  “தேசிய அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக கிறிஸை நியமிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். அவர் மிகவும் அனுபவம் வாய்ந்த பயிற்சியாளர். இலங்கை அணியை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு நாங்கள் எதிர்பார்க்கும் தகுதிகள் அவரிடம் உள்ளது. ,” என்று இலங்கை … Read more

ரஷிய படைகளின் போர் குற்றங்களுக்கு ஆதாரம் இருக்கிறது: உக்ரைன் அதிபர்

ரெயில் நிலைய தாக்குதல் பலி 52 ஆனது உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர், அவ்விருநாடுகளையும் தாண்டி உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. என்றைக்குத்தான் இந்தப்போர் முடிவுக்கு வரப்போகிறதோ என்று ஒவ்வொருவரும் எண்ணத்தலைப்பட்டுள்ளனர். எதிர்பார்த்த அளவுக்கு ரஷியாவால் வெற்றி பெற முடியவில்லை. அந்த நாடு, உக்ரைனில் ராணுவ கட்டமைப்புகளை தாண்டி தாக்குதல்களை நடத்தி அப்பாவி மக்களை கொன்று குவிப்பதுதான் பதைபதைப்பை ஏற்படுத்தி வருகிறது. நேற்று முன்தினம் கிழக்கு உக்ரைனில் கிராமடோர்ஸ்க் நகர ரெயில் நிலையத்தின்மீது ராக்கெட் … Read more

24 பினாகா ஏவுகணைகள் வெற்றிகரமாக பரிசோதனை

புதுடெல்லி,  பினாகா ஏவுகணை அமைப்பை புனேயில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தின் (டி.ஆர்.டி.ஓ.) ஆயுத ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் உருவாக்கியிருக்கிறது. புனேயில் உள்ள டி.ஆர்.டி.ஓ.வின் மற்றொரு ஆய்வகமான அதிசக்தி பொருட்கள் ஆய்வகத்தின் உதவியுடன் இது உருவாக்கப்பட்டிருக்கிறது. பினாகா ஏவுகணையின் மேம்படுத்தப்பட்ட வடிவமாக பினாகா எம்கே-1 உள்ளது. புதிய தேவைகளுக்கு ஏற்ப, அதிக தொலைவு சென்று தாக்கும் வகையில் நவீன தொழில்நுட்பங்களின் அடிப்படையில் இது மேம்படுத்தப்பட்டிருக்கிறது. இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பொக்ரான் சோதனை … Read more

ஐபிஎல்: பெங்களூரு அணிக்கு 152 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மும்பை

புனே, ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 18-வது லீக் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும்  பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதி வருகின்றன.  புனேவில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற பாப் டு பிளிஸ்சிஸ்  முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித் சர்மாவும், இஷான் கிஷனும் களமிறங்கினர். இருவரும் தலா … Read more

எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி – பாகிஸ்தானில் இம்ரான்கான் அரசு கவிழ்ந்தது…!

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். அந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று நடைபெற்றது. வாக்கெடுப்பு நடைபெறுவதை தடுக்கும் வகையில் நாடாளுமன்றத்தை அதிபர் கலைத்தார்.  ஆனால், நாடாளுமன்றத்தை அதிபர் கலைத்தது செல்லாது எனவும் இம்ரான்கான் அரசு மீது கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும் என பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது. கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து நள்ளிரவு 1.30 மணியளவில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான்கானுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா … Read more

ராம நவமி; நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து

புதுடெல்லி, இந்தியாவில் இன்றைய தினம் ராம நவமி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தசரத மன்னரின் மகனாக ஸ்ரீராமர் பிறந்த தினம் ராம நவமியாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதனை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், ராம நவமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்திருப்பதாவது;- “ராம நவமி புனித நாளில், சக மக்கள் அனைவருக்கும் எனது அன்பான நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ராம நவமி என்பது ராமரின் கொள்கைகளை நினைவுகூரவும், … Read more