ஐபிஎல் கிரிக்கெட்: மும்பை அணிக்கு எதிராக டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்து வீச்சு தேர்வு

புனே: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 18-வது லீக் ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணியும்  பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகின்றன. புனேவில் நடைபெறும் இப்போட்டியில் டாஸ் வென்ற பாப் டு பிளிஸ்சிஸ்  முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி, மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது.  5 முறை சாம்பியனான ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி தனது முதல் … Read more

“பழைய பாகிஸ்தானை மீண்டும் வரவேற்கிறோம்” – நாடாளுமன்றத்தில் பிலாவல் பூட்டோ பேச்சு

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். அந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு இன்று நள்ளிரவில் நடைபெற்றது. 342 உறுப்பினர்களை கொண்ட நாடாளுமன்ற அவையில் 174 உறுப்பினர்கள் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.  இதன் மூலம் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றது. எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றிபெற்றதால் பாகிஸ்தானில் இம்ரான்கானின் அரசு கவிழ்ந்தது. இதனையடுத்து இம்ரான் கானை பிரதமர் பதவியில் இருந்து நீக்கி நாடாளுமன்றம் … Read more

சரத்பவார் வீட்டின் முன் நடந்தது, கொலை முயற்சி சம்பவம்- சிவசேனா பெண் தலைவர்

போராட்டம் மராட்டியத்தில் மாநில போக்குவரத்து கழகத்தை, அரசுடன் இணைக்க வலியுறுத்தி கடந்த அக்டோபர் மாதம் முதல் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் மும்பையில் உள்ள சரத்பவார் வீட்டின் முன் நேற்று முன்தினம் திடீரென போக்குவரத்து கழக ஊழியர்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது சிலர் செருப்பு, கற்களை சரத்பவாரின் வீட்டை நோக்கி வீசினர். இந்த சம்பவத்திற்கு முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே உள்ளிட்ட பலர் கண்டனம் தெரிவித்து உள்ளனர். கொலை முயற்சி சம்பவம் … Read more

ஐபிஎல்: தொடரும் சென்னை அணியின் தோல்வி..! முதல் வெற்றியை பதிவு செய்தது ஐதராபாத்

மும்பை, ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இன்றைய 17-வது லீக் ஆட்டத்தில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும்  கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற கேன் வில்லியம்சன் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். இதன்படி, சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.  தொடக்க ஆட்டக்காரர்களாக ராபின் உத்தப்பாவும், ருதுராஜ் கெய்க்வாட்டும் களமிறங்கினர். உத்தப்பா 15 ரன்களிலும், ருதுராஜ் கெய்க்வாட் 16 ரன்னிலும் வெளியேறினர்.  சென்னை அணியில் அதிகபட்சமாக … Read more

பாக். நாடாளுமன்ற சபாநாயகர், துணை சபாநாயகர் ராஜினாமா

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். அந்த தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெறுவதை தடுக்க நாடாளுமன்றத்தை கலைக்க அதிபருக்கு பிரதமர் இம்ரான்கான் பரிந்துரைத்தார். இதனையடுத்து, நாடாளுமன்றத்தை பாகிஸ்தான் அதிபர் கலைத்தார். நாடாளுமன்றத்தை கலைத்து அதிபர் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தாமாக முன்வந்து வழக்குப்பதிந்தது. இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நாடாளுமன்றம் கலைக்கபப்ட்டது செல்லாது என்று அதிரடி உத்தரவு பிறப்பித்து, நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என … Read more

தாம்பத்ய உறவில் ஈடுபட பரோல் கோரி மனைவி மனு – ஆயுள் தண்டனை கைதிக்கு பரோல் வழங்கிய ஐகோர்ட்டு

ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரை சேர்ந்த நந்தலால் கொலை குற்றவழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் கடந்த சில ஆண்டுகளாக சிறையில் உள்ளார். நந்தலாலுக்கு திருமணமாகி ரேகா என்ற மனைவி உள்ளார். இதற்கிடையில், கணவருடன் தாம்பத்ய உறவில் ஈடுபடவும், குழந்தை பெற்றுக்கொள்ளவும் அவரை பரோலில் விடுதலை செய்ய வேண்டும் நந்தலாலின் மனைவி ராஜஸ்தான் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த ராஜஸ்தான் ஐகோர்ட்டு, சிறையில் உள்ள ஆயுள் … Read more

2 பந்தில் 12 ரன் தேவை: அடுத்தடுத்து சிக்சர் விளாசிய திவேதியா – குஜராத் திரில் வெற்றி

மும்பை, ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி அணி முதலில் பேட்டிங் செய்ய பஞ்சாப் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால் – ஷிகர் தவான் களமிறங்கினர். கேப்டன் மயங்க் அகர்வால் 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் எதிரணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சில் ரஷீத் கானிடம் … Read more

இந்தியர்கள் மிகவும் சுயமரியாதை கொண்டவர்கள் – பாக். பிரதமர் இம்ரான்கான் புகழாரம்

லாகூர், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு மீது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன.  இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு கடந்த 3-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால், வாக்கெடுப்பிற்கு முன்னதாக பிரதமர் இம்ரான்கானின் பரிந்துரையை ஏற்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை அதிபர் கலைத்தார். இதனால், இம்ரான்கான் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடைபெறவில்லை. மேலும், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதையடுத்து 60 நாட்களில் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதற்கிடையில், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை எதிர்த்து … Read more

ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் இல்லை – ரிசர்வ் வங்கி கவர்னர் அறிவிப்பு

புதுடெல்லி, வங்கிகளுக்கு வழங்கப்படும் குறுகிய கால கடனுக்கான வட்டியான ரெப்போ விகிதத்தில் மாற்றம் இல்லை என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதுகுறித்து ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், குறுகியகால கடனுக்கான வட்டி விகிதம் எந்த மாற்றமும் இன்றி 4 சதவீதமாகவே நீடிக்கும் என்றும் வங்கிகளின் கடன்களுக்காக வட்டி விகிதங்களில் மாற்றமில்லை என்றும் தெரிவித்துள்ளார். வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் இருந்து குறுகிய கால மற்றும் நீண்டகால கடன்களை பெறுகின்றன. குறுகிய கால கடன்களுக்கு ரிசர்வ் வங்கி விதிக்கும் … Read more

வங்காளதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி : முதல் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்கா 278/5

கெபெர்ஹா, வங்காளதேச அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இரு அணிகளும்  மோதிய முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது . இந்நிலையில் இரு அணிகளும் மோதும் 2வது டெஸ்ட் போட்டி தென் ஆப்பிரிக்கா ,கெபெர்ஹாவில் இன்று தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் டீன் எல்கர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார் .அதன்படி தென் ஆபிரிக்க அணி முதலில் … Read more