போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்யப்பட்ட ரூ.36 லட்சம் மதிப்பிலான நிலம் மீட்பு

நெல்லை: பணகுடி, லெவிஞ்சிபுரத்தை சேர்ந்த சாரதா என்பவருக்கு சொந்தமான 2 ஏக்கர் 40 சென்ட் நிலம் லெவஞ்சிபுரம் பகுதியில் உள்ளது. அந்த இடம் போலி ஆவணம் மூலம்‌ வேறு ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இதேபோல் மானூர் அருகே உள்ள தென்கலத்தை சேர்ந்த செல்வமணி என்பவருக்கு சொந்தமான 70 சென்ட் நிலம் தென்கலம் பகுதியில் உள்ளது. அந்த இடமும் போலி ஆவணம் மூலம் வேறு ஒருவருக்கு விற்பனை செய்யப்பட்டது தெரியவந்தது. இவர்கள் நெல்லை மாவட்ட நில அபகரிப்பு … Read more

உ.பி. முதல்-மந்திரியின் டுவிட்டர் கணக்கு 'ஹேக்’ செய்யப்பட்டது…!

லக்னோ, நாட்டின் பல்வேறு மாநில அரசுகள் அந்தந்த மாநில முதல்-மந்திரிகளுக்கென்று அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்குகள் உள்ளன. அந்த வகையில் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்திற்கு அதிகாரப்பூர்வ டுவிட்ட கணக்கு உள்ளது. சிஎம்ஆபிஸ்உபி (CMOfficeUP) என்ற அந்த டுவிட்டர் கணக்கை 4 லட்சம் பேர் பின்பற்றுகின்றனர். இந்நிலையில், உத்தரபிரதேச முதல்-மந்திரியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. கடந்த 1 மணி நேரத்திற்கு டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது. முதல்-மந்திரியின் டுவிட்டர் கணக்கில் இருந்து கடந்த ஒரு மணி … Read more

ஐபிஎல் கிரிக்கெட் : சுப்மன் கில் அதிரடி அரைசதம் – குஜராத் அணி சிறப்பான தொடக்கம்

மும்பை, ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று  வரும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி அணி முதலில் பேட்டிங் செய்ய பஞ்சாப் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால் – ஷிகர் தவான் களமிறங்கினர். கேப்டன் மயங்க் அகர்வால் 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் எதிரணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் … Read more

#லைவ் அப்டேட்: எங்களுக்கு எதிராக வாக்களிக்க நட்பு நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது – ரஷியா

மாஸ்கோ, உக்ரைன் மீது ரஷியா 45-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர பல நாடுகள் முயற்சித்த போதும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவ், மரியப்போல், கார்கீவ், கார்சன் உள்பட பல்வேறு நகங்களில் ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. ரஷிய படைகளின் தாக்குதலுக்கு உக்ரைன் ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. மேலும், ரஷியாவின் கட்டுப்பாட்டில் இருந்த சில பகுதிகளை உக்ரைன் படைகள் மீண்டும் தங்கள் … Read more

ஆந்திராவில் தொழிற்சாலைகளுக்கு 50% மின்வெட்டு அறிவிப்பு

ஐதராபாத், கோடைக்கால மின்சார தேவை அதிகரித்து வரும் நிலையில், ஆந்திர பிரதேச மாநிலத்தில் தினமும் 4 முதல் 5 கோடி யூனிட்கள் வரை மின்சார பற்றாக்குறை நிலவுகிறது. இதன் காரணமாக ஆந்திர பிரதேசத்தில் தொடர்ந்து இயங்கும் தொழிற்சாலைகளுக்கு 50 சதவீத மின்வெட்டும், இதர தொழிற்சாலைகளுக்கு வாரத்தில் ஒரு நாள் மின்வெட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.  மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்திடம் தற்போது 6.1 கோடி டன் நிலக்கரி கையிருப்பு உள்ளது. நிலக்கரியை சுத்தப்படுத்தும் மையங்கள் மற்றும் மின் உற்பத்தி … Read more

ஐபிஎல் கிரிக்கெட் : குஜராத் அணிக்கு 190 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது பஞ்சாப் அணி

மும்பை, ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற்று  வரும் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி அணி முதலில் பேட்டிங் செய்ய பஞ்சாப் அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக மயங்க் அகர்வால் – ஷிகர் தவான் களமிறங்கினர். கேப்டன் மயங்க் அகர்வால் 5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் எதிரணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் … Read more

வீதிகளில் இறங்கி போராடுங்கள் – நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்த இம்ரான்கான்

லாகூர், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு மீது நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்தன.  இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு கடந்த 3-ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால், வாக்கெடுப்பிற்கு முன்னதாக நாடாளுமன்றத்தை கலைக்க பிரதமர் இம்ரான்கான் அதிபருக்கு பரிந்துரைத்தார்.  அந்த பரிந்துரையை ஏற்று பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இதனால், இம்ரான்கான் மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடைபெறவில்லை. மேலும், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதையடுத்து 60 நாட்களில் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. … Read more

கொரோனா பாதிப்பு உயர்வு; கடுமையாக கண்காணிக்க 5 மாநிலங்களுக்கு அரசு உத்தரவு

புதுடெல்லி,  இந்தியாவில் கடந்த சில நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு ஆயிரத்திற்கும் குறைவாக பதிவாகி வருகிறது.  எனினும், டெல்லி, அரியானா, கேரளா, மராட்டியம் மற்றும் மிசோராம் ஆகிய 5 மாநிலங்களில் கடந்த வாரம் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து, மத்திய அரசு இந்த 5 மாநிலங்களும் கடுமையாக கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ளவும், தேவைப்பட்டால் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும் அறிவுறுத்தி கடிதம் எழுதியுள்ளது. மத்திய சுகாதார செயலர் ராஜேஷ் பூஷண் எழுதிய அந்த கடிதத்தில், தொற்று பரவலை … Read more

"என்னை கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கினார்"- சாஹலை தொடர்ந்து மும்பை வீரர் மீது உத்தப்பா குற்றச்சாட்டு

மும்பை, நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வரும் யுஸ்வேந்திர சாஹல்  சமீபத்தில் மும்பை அணியின் வீரர் மீது பரப்பரப்பு குற்றசாட்டை முன்வைத்து இருந்தார். மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அவர் விளையாடிய போது, ஒரு சீனியர் வீரர் 15வது மாடியில் இருந்து அவரை தள்ளிவிட முயன்றதாகவும், நூலிழையில் தப்பியதாகவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தற்போது அவரை தொடர்ந்து சென்னை அணியின்  முன்னணி வீரரான ராபின் உத்தப்பாவும் மும்பை அணி மீது குற்றம்சாட்டியுள்ளார். ராபின் உத்தப்பா … Read more

இலங்கையில் வலுக்கும் போராட்டம்: கொழும்புவில் திரளும் லட்சக்கணக்கான மக்கள்

கொழும்பு, இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி நிலவி வரும் நிலையில், மக்கள் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்த நிலையில், நளை பத்து லட்சம் மக்கள் ஒன்றுதிரண்டு மாபெரும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். தலைநகர் கொழும்புவில் உள்ள பிரதமரின் இல்லம் அருகே நளை காலை 9 மணி அளவில் இந்த போராட்டம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.