2+2 பேச்சுவார்த்தையில் பங்கேற்க மத்திய மந்திரிகள் அமெரிக்கா பயணம்

புதுடெல்லி, இந்தியா-அமெரிக்கா இடையே வருகின்ற ஏப்ரல் 11 ஆம் தேதி 2+2 பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்வதற்காக மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங், வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் ஆகியோர் அமெரிக்கா செல்ல உள்ளனர். அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில், ஏப்ரல் 11 ஆம் தேதி அமெரிக்க பாதுகாப்புத்துறை மந்திரி லாய்ட் ஆஸ்டின், வெளியுறவுத்துறை மந்திரி ஆண்டனி பிளிங்கன் ஆகியோருடன் இருவரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளனர். இதில் இந்தியா-அமெரிக்கா இடையிலான வெளியுறவு, பாதுகாப்பு உள்பட பல்வேறி … Read more

தேசிய கூடைப்பந்து போட்டி: தமிழக அணிகள் கால்இறுதிக்கு தகுதி

சென்னை, 71-வது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. இதில் 5-வது நாளான நேற்று நடந்த பெண்களுக்கான 2-வது கட்ட லீக் சுற்று ஆட்டம் ஒன்றில் தமிழக அணி 87-63 என்ற புள்ளி கணக்கில் மத்தியபிரதேசத்தை தோற்கடித்தது.  லீக் சுற்று முடிவில் இந்தியன் ரெயில்வே, அசாம், கேரளா, கர்நாடகா, மத்தியபிரதேசம், தெலுங்கானா, தமிழ்நாடு, பஞ்சாப் அணிகள் கால்இறுதிக்கு தகுதி பெற்றன. இன்று நடைபெறும் கால்இறுதி ஆட்டத்தில் தமிழக அணி, … Read more

இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் கவர்னர் நாட்டை விட்டு வெளியேற தடை – கோர்ட்டு உத்தரவு

கொழும்பு,  இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து அந்த நாட்டு மத்திய வங்கியின் கவர்னராக இருந்த அஜித் நிவ்ராத் கப்ரால் கடந்த வாரம் ராஜினாமா செய்தார். நாடு மிகப்பெரும் இடரில் சிக்கியிருக்கும் வேளையில் அவரது பதவி விலகல் மேலும் பின்விளைவுகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், இலங்கை மத்திய வங்கியின் கவர்னராக கடந்த 2006 முதல் 2015-ம் ஆண்டு வரையிலான இவரது முதல் பதவிக்காலத்தின்போது நிர்வாகத்தில் இவர் செய்த தவறுகள் தொடர்பாக கொழும்பு தலைமை மாஜிஸ்திரேட்டு … Read more

காஷ்மீரின் வரலாற்று சிறப்பு மிக்க முகலாய சாலை – விரைவில் திறக்க முடிவு

ஸ்ரீநகர், காஷ்மீரில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க முகலாய சாலை, ரஜோரி மற்றும் பூஞ்ச் ​​மாவட்டங்களை காஷ்மீர் பள்ளத்தாக்குடன் இணைக்கிறது. இந்த சாலை கடும் பனிப்பொழிவு காரணமாக கடந்த ஜனவரி மாதம் மூடப்பட்டது. இதையடுத்து, பொதுப்பணித்துறை சார்பில் முகலாய சாலை பிரிவின் கீழ், கடந்த மார்ச் மாதம் முதல் கனரக இயந்திரங்களுடன் பனி அகற்றும் நடவடிக்கை மிகப்பெரிய அளவில் தொடங்கப்பட்டது. தற்போது, பனி அகற்றும் பணி முடிவடைந்துள்ள நிலையில் முகலாய சாலையை விரைவில் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஐபிஎல் கிரிக்கெட் : டெல்லி அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ அணி வெற்றி

மும்பை, ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் டெல்லி அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் – பிரித்வி ஷா களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடி காட்டிய பிரித்வி ஷா பவர்பிளே ஓவர்களை சிறப்பாக பயன்படுத்தி ரன்களை குவித்தார். … Read more

அமெரிக்காவில் இதுவரை 1.28 கோடி குழந்தைகளுக்கு கொரோனா…!!

லாஸ் ஏஞ்சல்ஸ்,  உலகளவில் கொரோனாவின் மோசமான பாதிப்புக்கு ஆளான நாடாக அமெரிக்கா உள்ளது. அந்த நாட்டில் தொற்று தொடங்கியது முதல் இதுவரையில், 1 கோடியே 28 லட்சத்துக்கும் அதிகமாக குழந்தைகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை அமெரிக்க குழந்தைகள் மருத்துவ அகாடமியும், அமெரிக்க குழந்தைகள் ஆஸ்பத்திரி சங்கமும் தெரிவித்துள்ளன. கடந்த 4 வாரங்களில் 1 லட்சத்து 30 ஆயிரம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த கொரோனா பாதிப்பில் குழந்தைகளின் பங்கு அங்கு 19 சதவீதமாக உள்ளது. இதையொட்டி … Read more

கோவா விரைவில் முகக்கவசம் இல்லாத மாநிலமாக மாறும் – பிரமோத் சாவந்த்

பனாஜி,  கொரோனா போிடர் தொடங்கியதில் இருந்து மக்கள் முககவசம் அணிவது உள்ளிட்ட கட்டுப்பாடுகளை அனுபவித்து வருகிறார்கள். சமீப நாட்களாக கொரோனா தொற்று வெகுவாக கட்டுப்படுத்தப்பட்ட நிலையில் டெல்லி, மராட்டியம் மற்றும் தெலுங்கானா போன்ற மாநிலங்களில் முககவசம் அணிவது கட்டயமில்லை என்ற உத்தரவுகள் வெளியாகி உள்ளது. இந்நிலையில், கோவா மாநிலத்திலும் முககவசம் அணிவது கட்டாயமில்லை என்ற உத்தரவு வெளியாக உள்ளது. இதுகுறித்து கோவா மாநில முதல் மந்திரி பிரமோத் சாவந்த், நிருபர்களிடம் கூறுகையில், “கோவா மாநிலம் விரைவில் முக … Read more

ஜூனியர் உலக கோப்பை ஆக்கி: கால்இறுதியில் இந்தியா-தென் கொரியா இன்று மோதல்

போட்செப்ஸ்ட்ரூம், 15 அணிகள் பங்கேற்றுள்ள ஜூனியர் பெண்கள் உலக கோப்பை ஆக்கி போட்டி தென் ஆப்பிரிக்காவில் உள்ள போட்செப்ஸ்ட்ரூம் நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கும் கால்இறுதி ஆட்டம் ஒன்றில் சலிமா டெடி தலைமையிலான இந்திய அணி, தென் கொரியாவை எதிர்கொள்கிறது.  லீக் சுற்றில் வேல்ஸ், ஜெர்மனி, மலேசியா ஆகிய அணிகளை வீழ்த்தி தனது பிரிவில் (டி) முதலிடம் பிடித்த இந்தியா கம்பீரமாக கால்இறுதிக்குள் நுழைந்தது. தென் கொரியா அணி லீக் சுற்றில் ஒரு … Read more

இஸ்ரேல்: டெல் அவிவ் நகரின் பல்வேறு பகுதிகளில் துப்பாக்கிச் சூடு தாக்குதல் – 6 பேர் படுகாயம்

ஜெருசலேம்,  இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் டவுன்டவுனில் நேற்று இரவு பல பார்கள் மற்றும் உணவகங்கள் நிறைந்த பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது ஆறு பேர் காயமடைந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான நோக்கம் உடனடியாகத் தெரியவில்லை, ஆனால் பாலஸ்தீனியர்களால் நடத்தப்பட்ட தொடர்ச்சியான கொடிய தாக்குதல்களைத் தொடர்ந்து அதிக பதட்டங்களுக்கு மத்தியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.  டெல் அவிவ் நகரைச் சுற்றியுள்ள பல இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக இஸ்ரேலின் அவசர சேவை மையம் தகவல் தெரிவித்தது. … Read more

மராட்டிய முன்னாள் மந்திரி அனில் தேஷ்முக்கின் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை..!

மும்பை,  மும்பை போலீஸ் கமிஷனராக இருந்த பரம்பீர் சிங் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முன்னாள் உள்துறை மந்திரி அனில்தேஷ்முக் மீது ரூ.100 கோடி மாமூல் புகாரை கூறினார். இந்த புகார் தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது. இதனைத்தொடர்ந்து சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அனில் தேஷ்முக் மற்றும் அவரது தனிச்செயலாளர் சஞ்சீவ் பாலன்டே, நேர்முக உதவியாளர் குந்தன் ஷிண்டே ஆகியோரும் கைது செய்யப்பட்டு ஆர்தர் ரோடு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே ரூ.100 கோடி … Read more