ஐசிசியின் ஆல் டைம் ஒருநாள் போட்டிக்கான தரவரிசை : சச்சினை பின்னுக்குத் தள்ளிய பாபர் அசாம்

லாகூர்,  24 ஆண்டுகளுக்கு பிறகு ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தான் மண்ணில் சுற்றுப்பயணம் செய்து சமீபத்தில் விளையாடியது.  அப்போது டெஸ்ட் தொடரில் பாபர் அசாம், மொத்தமாக 390 ரன்கள் விளாசினார். இதில் அதிகபட்சமாக ஒரு இன்னிங்சில் 196 ரன்கள் குவித்து அசத்தினார். அதை தொடர்ந்து நடைபெற்ற ஒரு நாள் தொடரில் பாபர் அசாம் தொடர்ந்து இரண்டு போட்டியில் சதம் விளாசினார். இதில் மூன்றாவது போட்டியில் பாபர் அசாம் 105 ரன்கள் அடித்தன் மூலம் சர்வதேச ஒருநாள் போட்டியில் தனது … Read more

நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது – பாக். சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

இஸ்லாமாபாத், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்தது செல்லாது எனவும் நாடாளுமன்றம் மீண்டும் செயல்படுவதற்கும் தடை இல்லை எனவும்  நாடாளுமன்றத்தில் ஏப்ரல் 9-ம் தேதி மீண்டும் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டுள்ளது.  இதனையடுத்து  நாளை மறுநாள் காலை 10 மணிக்கு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. பாகிஸ்தான் துணை சபாநாயகரின் உத்தரவு அரசியலமைப்புக்கு எதிரானது எனவும் தெரிவித்துள்ளது.

மத்திய மந்திரி ராஜ்நாத் சிங்குடன் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி சந்திப்பு

புதுடெல்லி, தமிழக கவர்னர் ஆர்என் ரவி, மூன்று நாள் சுற்றுப்பயணமாக இன்று டெல்லி சென்றுள்ளார். இதையடுத்து அவர் டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பில் தமிழகம் சார்ந்த விஷயங்கள் குறித்தும், இலங்கைத் தமிழர்கள் விவகாரம் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  இதன்பின் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தனது டெல்லி சுற்றுப்பயணத்தின் போது பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா உள்ளிட்ட முக்கிய மந்திரிகளை சந்திக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

குவின்டன் டி காக் அதிரடி அரைசதம் : லக்னோ அணி சிறப்பான தொடக்கம்

மும்பை, ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் – டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கேஎல் ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் டெல்லி அணி பேட்டிங் செய்ய களமிறங்கியது. அணியின் தொடக்க வீரர்களாக டேவிட் வார்னர் – பிரித்வி ஷா களமிறங்கினர். தொடக்கம் முதலே அதிரடி காட்டிய பிரித்வி ஷா பவர்பிளே ஓவர்களை சிறப்பாக பயன்படுத்தி ரன்களை … Read more

ஐ.நா. உரிமைகள் கவுன்சிலில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டது “சட்டவிரோதம்” – ரஷியா

ஜெனீவா, ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் ஜெனீவாவை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. 47 உறுப்பினர்களை கொண்டது ஐ.நா.வின் மனித உரிமை கவுன்சில். இதன் உறுப்பினர்கள் ஐ.நா. பொதுச்சபையின் 193 உறுப்பு நாடுகளால் மூன்றாண்டு காலத்திற்கு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அதில் ரஷியாவும் உறுப்பினராக இருந்தது.  இந்த சூழலில், உலகின் மாபெரும் முக்கியத்துவம் வாய்ந்த மனித உரிமை அமைப்பில் இருந்து, ரஷிஷ்யாவை நீக்க அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானம் மீது இன்று வாக்கெடுப்பு நடைபெற்றது. இந்நிலையில் மனித உரிமை கவுன்சிலில் … Read more

சிவசங்கர் பாபாவின் ஜாமீன் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் – சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு பதில்மனு

புதுடெல்லி, பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ சுஷில் ஹரி இண்டர்நே‌ஷனல் பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார். கடந்த ஆண்டு ஜூன் முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர், கடந்த அக்டோபரில் அளித்த புகாரில் பதிவான வழக்கில் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனு கடந்த ஆண்டு டிசம்பர் 1-ந்தேதி தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த உத்தரவை எதிர்த்து சிவசங்கர் பாபா … Read more

ஐபிஎல் தொடரில் அதிவேக அரைசதம் : கேஎல் ராகுல் சாதனையை சமன் செய்தார் பாட் கம்மின்ஸ்

மும்பை, ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் கடந்த மாதம் 26-ஆம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில்  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 4 … Read more

#லைவ் அப்டேட்ஸ்: ரஷிய அதிபர் புதின் மகள்களை குறிவைத்து அமெரிக்கா புதிய தடைகள்

கீவ், உக்ரைன் மீது ரஷியா 42-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் தொடர்பாக இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள் பின்வருமாறு:-  ஏப்ரல் 07,  02.06 a.m உக்ரைன் நேட்டோ, ஜி7 உடன் அதிக ஆயுதங்களை வாங்குவது பற்றி விவாதிக்க உள்ளது நேட்டோவின் வெளியுறவு அமைச்சர்களின் ஜி7 கூட்டத்தில் அதிக தற்காப்பு ஆயுதங்களை வாங்குவது குறித்து விவாதிக்க திட்டமிட்டுள்ளதாக உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபா தெரிவித்துள்ளார். “பிரஸ்ஸல்ஸில் எனது விவாதத்தின் முக்கிய தலைப்பு … Read more

முன்னாள் மந்திரி அனில் தேஷ்முக்கிற்கு 11-ந் தேதி வரை சி.பி.ஐ. காவல்

மும்பை,  மும்பை போலீஸ் கமிஷனராக இருந்த பரம்பீர் சிங் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் முன்னாள் உள்துறை மந்திரி அனில்தேஷ்முக் மீது ரூ.100 கோடி மாமூல் புகாரை கூறினார். இந்த புகார் தொடர்பாக சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.   இந்தநிலையில் சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அனில் தேஷ்முக் மற்றும் அவரது தனிச்செயலாளர் சஞ்சீவ் பாலன்டே, நேர்முக உதவியாளர் குந்தன் ஷிண்டே ஆகியோரும் கைது செய்யப்பட்டு ஆர்தர் ரோடு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே ரூ.100 கோடி … Read more

வாணவேடிக்கை காட்டிய கம்மின்ஸ் : 5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி வெற்றி

மும்பை, ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் கடந்த மாதம் 26-ஆம் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்று வரும் ஆட்டத்தில்  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி மும்பை அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க வீரர்களாக இஷான் கிஷன் – கேப்டன் ரோகித் … Read more