அமெரிக்க நாடாளுமன்றத்தில் கலவரம்: டிரம்ப் மகளிடம் 8 மணி நேரம் விசாரணை

வாஷிங்டன்,  அமெரிக்காவில் கடந்த 2020-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் ஜோ பைடன் வெற்றிப்பெற்றார். அவரது வெற்றியை உறுதி செய்து சான்றளிப்பதற்காக கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 6-ந் தேதி நாடாளுமன்றம் கூடியது. அப்போது தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் ஜனாதிபதி டிரம்பின் ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் நாடாளுமன்றத்துக்குள் புகுந்து பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர். இந்த கலவரத்தை கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 5 பேர் பலியாகினர். நாட்டையே அதிர வைத்த இந்த சம்பவம் … Read more

டெல்லி விமான நிலையத்தில் ரூ.90 கோடி போதைப்பொருள் சிக்கியது

புதுடெல்லி, டெல்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்திற்கு ைலபீரியா நாட்டை சேர்ந்த ஒருவர் வந்து இறங்கினாா். அவா் லாகோஸ் நகரில் இருந்து டெல்லி வழியாக டோகா பயணம் செல்ல இருந்தார். அவரது உடமைகளை ெடல்லியில் சுங்க வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது, அதில் ெவள்ளை மற்றும் ெவளிர் வண்ணங்களில் ஏதோ மர்ம பவுடர் பொருள் இருந்தது. அதை கைப்பற்றி ஆய்வுக்கு அனுப்பி ைவத்தனர். ேசாதனை முடிவில் அது கோகைன் ேபாைதப் ெபாருள் என்று தெரியவந்தது. மொத்தம் … Read more

“தோனியை போல் தினேஷ் கார்த்தி” – டு பிளெசிஸ் புகழாரம்

மும்பை, 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி தொடரில் நேற்று மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடந்த 13-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பெங்களூரு திரில் வெற்றி பெற்றது. முதலில் ஆடிய ராஜஸ்தான் 20 ஓவரில் 3 விக்கெட்டுக்கு 169 ரன் எடுத்தது. ஜோஸ் பட்லர் அதிகபட்சமாக 70 ரன் எடுத்தார். பின்னர் விளையாடிய பெங்களூரு அணி முதல் விக்கெட்டுக்கு 7 ஓவரில் 55 ரன் எடுத்தது. அதன் பின் விக்கெட்டுகள் சரிந்தது. … Read more

சீன விமானத்தின் கருப்பு பெட்டிகள் அமெரிக்கா அனுப்பி வைப்பு

பீஜிங்,  சீனாவின் ஈஸ்டர்ன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 737 ரக விமானம், அந்நாட்டின் குன்மிங் நகரில் இருந்து குவாங்சூ நகருக்கு கடந்த மாதம் 21-ம் தேதி புறப்பட்ட நிலையில், குவாங்சூவில் உள்ள மலைப்பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்தது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த 123 பயணிகள், 9 ஊழியர்கள் என 132 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். விமான விபத்துக்கான காரணம் என்ன என்பது தெரியவராத நிலையில் விமானத்தின் … Read more

மாநிலங்களவையிலும் நிறைவேறிய குற்றவியல் நடைமுறை திருத்த மசோதா..!!

புதுடெல்லி,  தண்டனை கைதிகள் மற்றும் விசாரணை கைதிகளின் கைரேகை, விரல் ரேகை, பாத அளவு, புகைப்படம், கண்ணின் கருவிழி போன்ற ‘பயோ மெட்ரிக்’ அளவுகளை சேகரிக்க போலீசாருக்கு அதிகாரம் அளிக்கும் குற்றவியல் நடைமுறை திருத்த மசோதா, ஏற்கனவே மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. இந்தநிலையில், மாநிலங்களவையில் இம்மசோதா மீதான விவாதத்துக்கு மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பதில் அளித்தார். அவர் கூறியதாவது:- கிரிமினல்களை விட போலீசார் எப்போதும் 2 படி முன்னால் இருக்க வேண்டும் என்பதற்காக, இம்மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. போராட்டத்தில் … Read more

லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பங்கேற்க வார்னர், ஆன்ரிச் நோர்ஜே தயார்- ஷேன் வாட்சன்

மும்பை, ஐபிஎல் தொடரின் 15-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடருக்கான ஏலம் கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இந்த ஏலத்தில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி ஆஸ்திரேலிய அணியின் அதிரடி தொடக்க வீரர் டேவிட் வார்னரை தங்கள் அணியில் ஏலம் எடுத்தது. பாகிஸ்தான் தொடரில் தேசிய அணிக்காக விளையாடி வந்ததால் டெல்லி அணியின் போட்டிகளில் வார்னர் தற்போது வரை விளையாடவில்லை. இந்த நிலையில் தற்போது லக்னோ அணியுடனான அடுத்த போட்டியில் பங்கேற்பதற்கு வார்னர் தயாராக இருப்பதாக … Read more

உலகளவில் கொரோனா வீழ்ச்சி: உலக சுகாதார அமைப்பு தகவல்

ஜெனீவா,  உலகளவில் கடந்த செவ்வாய்க்கிழமை வரையிலான கொரோனா நிலவர அறிக்கையை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. ஒரு வார காலத்தில் 90 லட்சம் பேருக்கு உலகளவில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் இது 16 சதவீதம் குறைவு ஆகும். புதிதாக 26 ஆயிரம் பேர் தொற்றால் பலியாகி உள்ளனர். உலகின் எல்லா பகுதிகளிலும் கொரோனா தொற்று பாதிப்பும், பலியும் குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு கூறுகிறது. இதற்கிடையே கொரோனா தொற்று ஆதிக்கம் செலுத்தத்தொடங்கியுள்ள சீனாவின் … Read more

கொள்ளையடிக்க சென்று 'கலகலப்பு’ பட பாணியில் ஜன்னலில் சிக்கிய திருடன்…!

திருப்பதி,  கொள்ளையடிக்க சென்று ‘கலகலப்பு’ பட பாணியில் ஜன்னலில் சிக்கிக் கொண்ட திருடனின் வினோத நிகழ்வு ஆந்திர மாநிலத்தில் நடந்து உள்ளது. ஸ்ரீகாகுளம் ஜாடுபுடியில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில் எல்லையம்மன்.  இந்த கோவிலில் ஆண்டுதோறும் மார்ச் மாதங்களில் விமரிசையாக திருவிழா நடைபெறும். இது போன்று உள்ளூர் மற்றும் வெளியூரை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டுட திருவிழா கடந்த மாதம் கோலாகலமாக நடந்தது முடிந்தது. அப்போது பக்தர்கள் தங்கம், வெள்ளி, பணம் ஆகியவை உண்டியலில் காணிக்கையாக … Read more

"என்னுடைய வளர்ச்சிக்கு ஹர்திக் பாண்டியா பெரிதும் உதவினார்" – இஷான் கிஷன்

மும்பை, ஐபிஎல் தொடரில் 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ள மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 2016 ஆம் ஆண்டு  இஷான் கிஷனை ஏலத்தில் எடுத்தது. ஆரம்ப காலங்களில் அவருக்கு அணியில் விளையாட வாய்ப்பு கிடைக்கவில்லை.  2020 ஆம் ஆண்டு தான் அவர் 516 ரன்கள் விளாசி ஐபிஎல் தொடரில் உச்சம் தொட்டார். அதன் பின்னர் மும்பை அணியின் முக்கிய வீரராக இஷான் கிஷன் தற்போது விளங்குகிறார் மும்பை அணியில் சேர்ந்த போது இஷான் கிஷன் அணியின் மற்ற … Read more

ஐக்கிய அரபு அமீரகம்: போதைப்பொருள் வைத்திருந்த இஸ்ரேல் நாட்டு பெண்ணுக்கு மரண தண்டனை..!!

அபுதாபி,  ஐக்கிய அரபு அமீரகத்தில் 500 கிராம் கொக்கெய்ன் போதைப் பொருளை வைத்திருந்த குற்றத்திற்காக இஸ்ரேலிய பெண் ஒருவருக்கு மரண தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 43 வயதான பிடா கிவான் என்று இஸ்ரேலிய ஊடகங்களால் பெயரிடப்பட்ட அந்த பெண், தனது தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளார். முன்னதாக வடக்கு இஸ்ரேலில் உள்ள ஹைஃபாவில் புகைப்பட ஸ்டுடியோ வைத்திருக்கும் கிவான், ஒரு வருடத்திற்கு முன்பு வேலைக்காக துபாய்க்கு வந்ததாக இஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஒரு … Read more