மக்கள் மீது பாஜக விலைவாசி உயர்வு போரை தொடங்கியுள்ளது – குமாரசாமி

பெங்களூரு, கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:- பா.ஜனதாவின் விலைவாசி உயர்வின் கொடூரம் தொடர்ந்து வருகிறது. பெட்ரோல்-டீசல், சமையல் கியாஸ் சிலிண்டர் விலை அதிகரித்து வருகிறது. அத்துடன் தற்போது மின் கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. மனசாட்சி இல்லாத அரசுக்கு மக்களிடம் பணம் பறிப்பதே தொழிலாகிவிட்டது.  தரமான மின்சாரத்தை வழங்க முடியாத அரசு, கட்டணத்தை உயர்த்துவதில் மட்டும் ராக்கெட் வேகத்தில் செயல்படுகிறது.  ஏழை மக்கள் வீடுகளை கட்ட முடியாது. வயிறு நிறைய சாப்பிட … Read more

பஞ்சாப் அணியின் புதிய நம்பிக்கை நட்சத்திரம் வைபவ் அரோராவுக்கு ஷிகர் தவான் புகழாரம்

மும்பை, ஐபிஎல் 15ஆவது சீசனின் நேற்றைய ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஜிதேஷ் ஷர்மா, வைபவ் அரோரா ஆகிய இரண்டு புதுமுக வீரர்கள் இடம்பெற்றனர். சிஎஸ்கேவுக்கு எதிராக அறிமுக வீரர் வைபவ் அரோரா சிறப்பாக பந்து வீசினார். வைபவ் அபாரமாக பந்துகளை ஸ்விங் செய்து, பிரமிக்க வைத்தார். குறிப்பாக தீபக் சஹாரைப் போல இன் ஸ்விங், அவுட் ஸ்விங் இரண்டையும் வீசி அசத்தினார். இவரது பந்துகளை … Read more

இலங்கையில் பொருளாதார நெருக்கடி: கொழும்புவில் அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம்

கொழும்பு,  இலங்கையில் வரலாறு காணாத வகையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அதிபர் கோத்தபய ராஜபக்சே மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சே ஆகியோருக்கு கடும் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இந்த நெருக்கடியில் இருந்து மீண்டு வருவதற்கு வசதியாக இலங்கை மந்திரிகள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்தனர். அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மகிந்த ராஜபக்சே இருவரையும் தவிர்த்து மீதமுள்ள 26 மந்திரிகளும் ராஜினாமா செய்தனர். இதல் மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சேவும் அடங்குவார். அவர்களது ராஜினாமாவை அதிபர் … Read more

இந்தியாவின் ரிக்கி கேஜ் இரண்டாவது முறையாக கிராமி விருதை வென்றார்! பிரதமர் மோடி பாராட்டு

லாஸ் வேகாஸ், இசை உலகின் உயரிய விருதாக கருதப்படும் கிராமி விருது வழங்கும் விழா ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. 2022-ம் ஆண்டுக்கான 64-வது கிராமி விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடந்தது.  இந்த விழாவில், ரிக்கி கேஜ்  இரண்டாவது முறையாக கிராமி விருதை வென்றார். “டிவைன் டைட்ஸ்..” என்ற ஆல்பம் பாடலுக்காக, ஸ்டீவர்ட் கோப்லேண்ட் உடன் சேர்ந்து அவர் விருது பெற்றுள்ளார். விருது மேடையில், ரிக்கி கேஜ் பார்வையாளர்களை நோக்கி  “நமஸ்தே” என்று வணக்கம் … Read more

'கிரிக்கெட்டின் சிறந்த தூதர் நீங்கள்' – ராஸ் டெய்லருக்கு சச்சின் வாழ்த்து

ஹாமில்டன், நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் ஜாம்பவானான ராஸ் டெய்லர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதியில் சர்வதேச போட்டிகளிலிருந்து தன்னுடைய ஓய்வை அறிவித்தார். இந்த நிலையில் இன்று அவர்  தனது கடைசி சர்வதேச போட்டியாக நெதர்லாந்துக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் விளையாடினார். அவருக்கு  இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், ‘ராஸ் நீங்கள் கிரிக்கெட்டின் சிறந்த தூதராக இருந்தீர்கள்! உங்களுக்கு எதிராக … Read more

உக்ரைன் போர்: புச்சா படுகொலைக்கு பதிலடியாக 40 ரஷிய தூதர்களை வெளியேற்றும் ஜெர்மனி..!!

கீவ்,  உக்ரைன் மீது ரஷிய படைகளின் தாக்குதல் தொடர்ந்து ஒரு மாதத்திற்கும் கூடுதலாக நீடித்து வருகிறது.  இந்த நிலையில், இந்த வாரம் புச்சா நகரை உக்ரேனிய படைகள் மீண்டும் கைப்பற்றின.  அந்நகரம் ரஷிய படைகளின் கட்டுப்பாட்டில் இருந்ததால், ஏறக்குறைய ஒரு மாதமாக அந்த நகரத்திற்கு உக்ரேனியர்கள் யாரும் செல்ல முடியவில்லை. இந்த சூழலில், புச்சா நகரில், 280 பேரின் உடல்களை பெரிய குழிகளில் ஒரே இடத்தில் போட்டு புதைத்து உள்ளோம் என்று மேயர் அனடோலி பெடோருக் தெரிவித்தார். … Read more

தெலுங்கானா முதல்-மந்திரிக்கு டெல்லியில் மருத்துவ பரிசோதனை..!!

புதுடெல்லி,  தெலுங்கானா மாநில முதல்-மந்திரியும், தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ் தனது இடது கையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக, அவர் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். கை, தோள்பட்டைகளில் வலி இருந்ததினால் அவருக்கு இதயம் சம்பந்தப்பட்ட கோளாறு ஏதேனும் இருக்கிறதா என மருத்துவர்கள் பரிசோதனை நடத்தினர். அங்கு அவருக்கு நவீன பரிசோதனை முறையான ஆஞ்சியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் சிடி ஸ்கேன் போன்றவை மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் தெலுங்கானா முதல்-மந்திரி கே.சந்திரசேகர் ராவ் … Read more

ஐபிஎல் கிரிக்கெட் : ஐதராபாத் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி லக்னோ அணி வெற்றி

மும்பை, ஐபிஎல் கிரிக்கெட் சீசன் கடந்த மாதம் 15-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைப்பெற்ற போட்டியில் ஐதராபாத் – லக்னோ அணிகள் மோதின. டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் வில்லியம்சன் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி  லக்னோ அணி பேட்டிங் செய்ய முதலில் களமிறங்கியது. தொடக்க வீரராக களமிறங்கிய டி காக் 1 ரன்கள் எடுத்த நிலையில் வாஷிங்டன் சுந்தர் பந்துவீச்சில் வெளியேறினார். அதை தொடர்ந்து வந்த லீவிசும் … Read more

தென்கொரியாவில் 1.40 கோடியை தாண்டிய கொரோனா பாதிப்பு…!!

சியோல்,  உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் டெல்டா பாதிப்பினை தொடர்ந்து, ஓமைக்ரான் எனும் புதிய வேரியண்ட் பரவி வருகிறது. இது பல நாடுகளில் மூன்றாவது அலை, நான்காவது அலைக்கு காரணமாகி உள்ளது.  இந்த சூழலில் தென்கொரியாவில் கொரோனா பாதிப்புகள் தற்போது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தில் அங்கு தினசரி கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை கடந்த நிலையில், அதன் பின்னர் பாதிப்பு சற்று குறைந்து வருகிறது.  இந்த நிலையில் தென்கொரியாவில் கடந்த 24 மணி … Read more

ஆந்திராவில் புதிதாக 13 மாவட்டங்கள்: காணொலி மூலம் திறந்து வைத்தார் முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி

அமராவதி,  ஆந்திர மாநிலத்தில் தற்போது 13 மாவட்டங்கள் இருக்கின்றன. அவற்றைப் பிரித்து, மேலும் 13 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவ்வாறு ஆந்திராவில் புதிதாக உருவாக்கப்பட்ட 13 மாவட்டங்களை அம்மாநில முதல்-மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி காணொலி மூலம் இன்று திறந்து வைத்தார். அதனுடன் புதிதாக தொடங்கப்பட்ட மாவட்டங்களில் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் பொறுப்பேற்றுக்கொண்டனர்.  திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள பக்தர்களுக்காக கட்டப்பட்ட பத்மாவதி நிலையத்தில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள மாவட்ட கலெக்டர்களின் அலுவலகம் இன்று முதல் செயல்பட … Read more