350 டி20 போட்டிகளில் விளையாடிய இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார் டோனி

மும்பை, 15-வது ஐபிஎல் சீசன் கடந்த மாதம் 26-ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த  போட்டியில் விளையாடிய டோனிக்கு இது 350வது டி20 போட்டி ஆகும் . இதனால் ரோகித் சர்மாவுக்கு பிறகு 350 டி20 போட்டிகளில் விளையாடிய இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை  பெற்றார் டோனி.

தென்கொரியாவில் புதிதாக 2.34 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு…!!

சியோல்,  உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் டெல்டா பாதிப்பினை தொடர்ந்து, ஓமைக்ரான் எனும் புதிய வேரியண்ட் பரவி வருகிறது. இது பல நாடுகளில் மூன்றாவது அலை, நான்காவது அலைக்கு காரணமாகி உள்ளது.  இந்த சூழலில் தென்கொரியாவில் கொரோனா பாதிப்புகள் தற்போது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தில் அங்கு தினசரி கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை கடந்த நிலையில், அதன் பின்னர் பாதிப்பு சற்று குறைந்து வருகிறது.   இந்த நிலையில் தென்கொரியாவில் கடந்த 24 மணி … Read more

நாட்டின் பாதுகாப்புக்கு உயர் முன்னுரிமை: ராஜ்நாத்சிங்

ஒற்றுமைக்கு முயற்சி ‘சேடக்’ ஹெலிகாப்டர் அறிமுகப்படுத்தப்பட்டு 60 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதையொட்டி, இந்திய விமானப்படை சார்பில், ஐதராபாத்தில் உள்ள விமானப்படை தளத்தில் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. அதில், ராணுவ மந்திரி ராஜ்நாத்சிங், விமானப்படை தளபதி வி.ஆர்.சவுத்ரி மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் ராஜ்நாத்சிங் பேசியதாவது:- நாட்டுக்காக பாடுபட்டவர்களுக்கு இந்த நிகழ்ச்சி உண்மையான அஞ்சலி செலுத்துவதாக அமையும். நாட்டின் பாதுகாப்புக்கு இந்த அரசு உயர் முன்னுரிமை அளிக்கும். அதன் ஒற்றுமை, ஒருமைப்பாட்டை பாதுகாக்க எல்லா முயற்சிகளும் … Read more

ஐ.பி.எல் : டெல்லி அணியை வீழ்த்தி குஜராத் அபார வெற்றி

மும்பை, ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் கடந்த மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று இரவு நடைபெற்று வருகிற  10 -வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் -டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது முதலில் களமிறங்கிய குஜராத் அணியில்  தொடக்க வீரர் சுப்மன் கில்லின் அதிரடி ஆட்டத்தால் குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்கள் முடிவில் … Read more

5 வடகொரிய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை

வாஷிங்டன்,  ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்களை புறக்கணித்து, அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. அந்த நாட்டுக்கு எதிராக கடுமையான பொருளாதார தடைகளை ஐ.நா.சபையும், அமெரிக்காவும் விதித்துள்ளபோதும், வட கொரியா தளராமல் தொடர்ந்து ஏவுகணைகளை சோதித்து வருகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக, கண்டம் விட்டு கண்டம் பாய்ந்து சென்று தாக்குதல் நடத்த ஏற்ற ‘பாலிஸ்டிக்’ ரக ஏவுகணையை சோதித்தது. இது உலக அரங்கை அதிர … Read more

குஜராத் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மிக்கு ஒரு வாய்ப்பளியுங்கள் – அரவிந்த் கெஜ்ரிவால்

அகமதாபாத், குஜராத்தில் சட்டசபை தேர்தல் இந்த ஆண்டு இறுதியில் நடைபெற உள்ளது. இந்த நிலையில் பஞ்சாப் சட்டசபை தேர்தலில் பெற்ற அமோக வெற்றியைத் தொடர்ந்து டெல்லி முதல்மந்திரியும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், குஜராத்தில் வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மிக்கு ஒரு வாய்ப்பு அளிக்குமாறு குஜராத் மக்களிடம் அவர் வலியுறுத்தினார்.  மேலும், தனது கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் குஜராத்தில் நிலவும் ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் என்று கூறினார். அகமதாபாத்தில் திரங்கா யாத்திரையின் போது … Read more

புரோ ஹாக்கி லீக் : இங்கிலாந்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றி

புவனேஷ்வர், 9 அணிகள் இடையிலான 3-வது புரோ ஆக்கி லீக் போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது.  இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும்.இந்நிலையில் ஒடிசாவின் புவனேஸ்வர் நகரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா -இங்கிலாந்து அணிகள் மோதின . பரபரப்பான இந்த ஆட்டம் வழக்கமான நேர முடிவில் 3-3 என்ற கோல் கணக்கில் சமன் ஆனது.இதனால் பெனால்டி ஷூட்அவுட் முறை கடைபிடிக்கப்ட்டது . இதில் 3-2 என்ற கோல் … Read more

இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா, ஒமைக்ரானை விட வேகமாக பரவும்- உலக சுகாதார அமைப்பு

லண்டன், சீனாவின் உகான் நகரில் முதன் முதலாக  கொரோனா வைரஸ் கடந்த 2019- ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது. இந்த கொரோனா வைரஸ் ஏறத்தாழ இரண்டரை ஆண்டுகளுக்கும் மேலாக உலக மக்களை கதி கலங்க வைத்துவிட்டது. தொற்று பரவலால், சுகாதார நெருக்கடி மட்டும் அல்லாது பொருளாதார ரீதியிலும் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.  பல நாடுகளும் ஊரடங்கு விதித்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியது.  கொரோனாவுக்கு எதிரான தடுப்பூசி கண்டறியப்பட்டு, முழு வீச்சில் போடப்பட்டு வருகிறது. இதன் காரணமாகவும் தற்போது … Read more

பிரதமர் மோடி, மோரீசன் முன்னிலையில் இந்தியா, ஆஸ்திரேலியா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்து

இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தம் இந்தியாவுக்கும், ஆஸ்திரேலியாவுக்கும் இடையே இணக்கமான நல்லுறவு உள்ளது. இந்த நிலையில் இரு தரப்பு வர்த்தகத்தை அதிகரிக்கவும், சந்தை வாய்ப்பை மேம்படுத்தவும், இரு நாடுகளுக்கு இடையே இண்ட்ஆஸ் எக்டா என்று அழைக்கப்படுகிற இந்திய ஆஸ்திரேலிய பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தக ஒப்பந்தம் செய்து கொள்ள முடிவாகி இருந்தது. அதன்படி பிரதமர் மோடி, ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரீசன் முன்னிலையில் காணொலி காட்சி வழியாக நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்த ஒப்பந்தத்தில் மத்திய வர்த்தக மந்திரி … Read more

3-வது ஒருநாள் போட்டி : ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது பாகிஸ்தான்

லாகூர், பாகிஸ்தான் -ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான   மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது . இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் ஆசம் பந்துவீச்சை தேர்வுசெய்தார். அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது 67 ரன்களில் 5 விக்கெட் இழந்து தடுமாறியது  ஆஸ்திரேலிய அணி.அந்த அணியில் அலெக்ஸ் கேரி சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த அவர் 56 ரன்களில் ஆட்டமிழந்ததார் .இறுதியில் 41.5 ஓவர்களில் 10 விக்கெட்டை இழந்து … Read more