தேசிய மகளிர் ஆணையத்தால் புதிதாக மனிதக் கடத்தல் தடுப்புப் பிரிவு தொடக்கம்!

புதுடெல்லி, பெண்கள் மற்றும் சிறுமிகள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் மனிதக் கடத்தல் தொடர்பான வழக்குகளை இன்னும் திறம்பட கையாள்வதற்காகவும்,  மனிதக் கடத்தல் தடுப்புப் பிரிவை தேசிய மகளிர் ஆணையம் தொடங்கியுள்ளது. சட்ட அமலாக்க அலுவலர்கள் இடையே அதிகளவு விழிப்புணர்வை ஏற்படுத்தவதும் அவர்களது திறனை வளர்ப்பதும் இந்த பிரிவின் நோக்கமாகும்.  இதன்மூலம், காவல் அதிகாரிகள் மற்றும் விசாரணை அதிகாரிகளிடையே பிராந்திய, மாநில மற்றும் மாவட்ட அளவில் பாலியல் விழிப்புணர்வு பயிற்சிகள் நடத்தப்படும்.  மேலும்,  மனிதக் கடத்தலை தடுப்பதற்கான பயிலரங்குகளையும் … Read more

ஐ.பி.எல் 2022: டெல்லி அணிக்கு 172 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது குஜராத்

மும்பை, ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 15-வது சீசன் கடந்த மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று இரவு நடைபெற்று வருகிற  10 -வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் -டெல்லி கேபிட்டல்ஸ் அணிகள் மோதுகின்றன இதில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது முதலில் களமிறங்கிய குஜராத் அணியில்  தொடக்க வீரர் சுப்மன் கில்லின் அதிரடி ஆட்டத்தால் குஜராத் டைட்டன்ஸ் 20 ஓவர்கள் முடிவில் … Read more

தென்கொரியாவில் புதிதாக 2.64 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு…!!

சியோல்,  உலகம் முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில் டெல்டா பாதிப்பினை தொடர்ந்து, ஓமைக்ரான் எனும் புதிய வேரியண்ட் பரவி வருகிறது. இது பல நாடுகளில் மூன்றாவது அலை, நான்காவது அலைக்கு காரணமாகி உள்ளது.  இந்த சூழலில் தென்கொரியாவில் கொரோனா பாதிப்புகள் தற்போது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த வாரத்தில் அங்கு தினசரி கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை கடந்த நிலையில், அதன் பின்னர் பாதிப்பு சற்று குறைந்து வந்தது.  இந்த நிலையில் தென்கொரியாவில் கடந்த 24 மணி … Read more

பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை: அரியானா அரசு

அரியானா, நாட்டில் கொரோனா இரண்டாம் அலை வெகுவாக குறைந்துள்ளது. இதன்  காரணமாக பல மாநிலங்கள் கட்டுப்பாடுகளை வெகுவாக தளர்த்தியுள்ளது. இதில் முக்கியமாக பொது முகக்கவசம் அனிவது கட்டாயமில்லை என்று மராட்டியம் மற்றும் டெல்லி அரசுகள் கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிப்பை வெளியிட்டன. இந்த நிலையில் அரியானா அரசும் தற்போது பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை என்ற அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் : முதல் இன்னிங்க்சில் வங்காளதேச அணி 298 ரன்களுக்கு ஆட்டமிழந்தது

டர்பன், வங்காளதேச அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இரு அணிகளும்  முதல் டெஸ்டில் மோதி வருகிறது.   இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி தென் ஆப்பிரிக்க அணி முதலில் களமிறங்கியது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் டீன் எல்கரும், சரல் எர்வீயும் களமிறங்கினர். எல்கர் 67 ரன்களில் அவுட்டானார். சரல் எர்வீ 41 ரன்களில் வெளியேறினார். கீகன் பீட்டர்சன் 19 ரன்னிலும், ரியான் … Read more

அமெரிக்காவில் 2 இந்தியர்களுக்கு முக்கிய பதவி; ஜோ பைடன் பரிந்துரை

வாஷிங்டன்,  அமெரிக்காவில் யார் ஜனாதிபதியாக வந்தாலும் இந்தியர்கள் முக்கிய பதவிகளை அலங்கரிப்பது நீடிக்கிறது. இப்போது 2 முக்கிய பதவிகளில் இந்தியர்களை நியமிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பரிந்துரைத்துள்ளார். இந்திய வம்சாவளி வக்கீல் கல்பனா கோட்டக்கல், சம வேலை வாய்ப்பு ஆணையத்தின் தலைவர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இந்தியாவை பூர்வீகமாகக்கொண்ட வினய் சிங், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறையின் தலைமை நிதி அதிகாரி ஆகிறார். கல்பனா கோட்டக்கல் பன்முகத்தன்மை கொண்டவர், சட்ட நிபுணர் ஆவார். மனித உரிமைகளுக்காக ஓங்கிக்குரல் … Read more

உக்ரைன் உடனான போரை நிறுத்த விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் – பிரதமர் மோடி

புதுடெல்லி, உக்ரைன் மீது ரஷியா 37-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. போரை முடிவுக்கு கொண்டு வர பல நாடுகள் முயற்சித்த போதும் அந்த முயற்சிகள் தோல்வியிலேயே முடிந்து வருகின்றன. இந்த போர் உலக நாடுகளின் அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கத்திய நாடுகள், ஆசிய நாடுகள், வளைகுடா நாடுகள் என பல்வேறு நாடுகளும் இந்த போரில் தங்கள் நிலைப்பாட்டை கவனமாக கையாண்டு வருகின்றன. இந்த போரில் இந்தியாவின் நிலைப்பாட்டை உலக நாடுகள் மிகவும் கூர்மையாக கண்காணித்து … Read more

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக முன்னாள் பாகிஸ்தான் வீரர் உமர்குல் நியமனம்

லாகூர், பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான உமர்குல் 2020-ம் ஆண்டு தனது ஓய்வை அறிவித்தார். அதன்பின் உள்ளூர் கிரிக்கெட் போட்டியில் பயிற்சியாளராக செயல்பட்டார். இந்நிலையில் ஆப்கானிஸ்தான் அணியின் புதிய பந்துவீச்சு பயிற்சியாளர் மற்றும் ஆலோசகராக பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் உமர் குல் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் ஏப்ரல் 4-ந் தேதி அணியில் இணைவார். பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் பயிற்சியாளராக பணியாற்றிய அனுபவம் அவருக்கு உள்ளது. ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடனான உடன்படிக்கையின்படி, உமர்குல் அணியுடன் மூன்று வார … Read more

பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

இஸ்லாமாபாத்,  பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவந்துள்ள சூழலில், அங்கு அரசியலில் நெருக்கடி நிலை நிலவுகிறது. இந்தநிலையில், அமெரிக்க டாலருக்கு எதிரான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்திருக்கிறது. ஒரு டாலருக்கு இணையான பாகிஸ்தான் ரூபாய் மதிப்பு 183 ஆக சரிந்திருக்கிறது. சீனாவிடம் இருந்து பெற்ற கடன்களில் ஒரு பகுதி உள்ளிட்ட கடன்களை திரும்பச் செலுத்தியதால் அன்னியச் செலாவணி இருப்பு குறைந்து, ரூபாய் மதிப்பு சரிந்துள்ளதாக பாகிஸ்தான் ஸ்டேட் வங்கி … Read more

கவர்னர்கள் முடிவெடுக்க காலக்கெடு: மாநிலங்களவையில் திமுக எம்.பி. வில்சன் தனி உறுப்பினர் மசோதா தாக்கல்

புதுடெல்லி, தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்படும் சட்ட மசோதாக்கள், கவர்னர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடப்படுவதாகவும், ஒப்புதல் அளிப்பதற்கு அரசியலமைப்புச் சட்டத்தில் கால நிர்ணயம் செய்யப்படாததால், அதனை பயன்படுத்தி கவர்னர்கள் காலதாமதம் செய்வதாகவும் புகார்கள் எழுந்தன.  இது குறித்து நாடாளுமன்ற மாநிலங்களையில் பேசிய திமுக எம்.பி. வில்சன், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 200-வது பிரிவை திருத்துவதற்கும், மாநில சட்டமன்றங்களால் அனுப்பப்படும் மசோதாக்கள் மீது கவர்னர்கள் முடிவெடுப்பதற்கான காலக்கெடுவை நிர்ணயிப்பதற்கும், தனி உறுப்பினர் மசோதாவை தாக்கல் செய்துள்ளார்.