உக்ரைனை இரண்டு துண்டாக பிரிக்க ரஷியா திட்டம் – உளவுத்துறை எச்சரிக்கை

கீவ், உக்ரைன் மீது ரஷியா இன்று 32-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்ற மும்முரமாக தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், உக்ரைன் – ரஷிய படைகள் இடையே தீவிர சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது.   ஒரு மாதத்திற்கு மேல் ஆகியும் ரஷியாவால் உக்ரைனை முழுமையாக கைப்பற்ற முடியவில்லை. அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிடமிருந்து தொடர்ந்து உக்ரைன் ஆயுத உதவிகளை பெற்று போரிட்டு வருகிறது. … Read more

வெளிநாடு செல்லும் இந்தியர்களுக்கு விரைவில் கொரோனா பூஸ்டர் டோஸ் தடுப்பூசி

புதுடெல்லி, நாடு முழுவதும் கொரோனா பாதிப்புகளால் பஸ், ரெயில், விமானம் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் கடந்த 2 ஆண்டுகளாக முடங்கி இருந்தன.  எனினும், சமீப நாட்களாக கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைந்துள்ள சூழலில், பெருமளவிலான தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.  இவற்றில் சர்வதேச விமான சேவையும் அடங்கும். இந்த நிலையில், கல்வி, வேலைவாய்ப்பு, விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க, அலுவலக அல்லது வர்த்தகம் சார்ந்த மற்றும் வெளிநாட்டு கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு பயணிக்கும் விமான பயணிகளுக்கு … Read more

ஐபிஎல் கிரிக்கெட்: டாஸ் வென்ற கொல்கத்தா பந்து வீச்சு தேர்வு

மும்பை, ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டில் உதயமானது. ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ள இந்த ‘சரவெடி’ ஆட்டம் ஆண்டுதோறும் இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் நடத்தப்படுகிறது. இதன்படி 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா மும்பையில் இன்று தொடங்கியது.  2022- ஐபிஎல் போட்டியின் முதல் ஆட்டத்தில் ஜடேஜா தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி … Read more

#லைவ் அப்டேட்ஸ்:உக்ரைனில் மேலும் ஒரு நகரை ரஷிய படைகள் கைப்பற்றியதாக தகவல்

கீவ், உக்ரைன் மீது ரஷியா 31-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போர் தொடர்பாக இன்று இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள் பின்வறுமாறு:- மார்ச் 26,  3.00 p.m உக்ரைன் வெளியுறவுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறை மந்திரிகளை அமெரிக்க அதிபர் ஜோ பைடன் சந்திக்க உள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. ரஷிய தாக்குதல் நீடித்து வரும் நிலையில், உக்ரைனின் மந்திரிகளை ஜோ பைடன் சந்திப்பது சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெறுகிறது.  மார்ச் 26,  01.20 p.m துருக்கி … Read more

“அரசுக்கு களங்கம் விளைவிக்க பாஜக முயற்சி” – திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டு

கொல்கத்தா, மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பாது ஷேய்க் என்பவர் மார்ச் 21 ஆம் தேதியன்று படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து, இவரது கொலை காரணமாக அவரது சொந்த ஊரான பீர்பூம் மாவட்டம் ராம்பூர்ஹாட்டில் போக்டுய் கிராமத்தில் ஏற்பட்ட வன்முறையில், நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் பல வீடுகளுக்கு தீ வைத்தனர், அதில் 8 பேர் உயிருடன் எரித்து கொல்லப்பட்டனர். இந்த வன்முறை சம்பவம், மேற்கு வங்காள மாநிலம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை … Read more

அடுத்த ஆண்டு முதல் மகளிர் ஐ.பி.எல் போட்டிகள்..?

மும்பை: மகளிர்  ஐ.பி.எல். போட்டியை அடுத்த ஆண்டு (2023) முதல் நடத்த இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) திட்டமிட்டு உள்ளது. 6 அணிகள் பங்கேற்கும் மகளிர் ஐபிஎல் போட்டிகளை நடத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பிசிசிஐ தலைவர் கங்குலி தெரிவித்துள்ளார். நடப்பு ஐ.பி.எல் தொடரில் பிளே – ஆப் சுற்று நடைபெறும்போது 3 அணிகள் பங்கேற்கும் மகளிர் டி20 தொடர் நடைபெற உள்ளது குறிப்ப்பிடத்தக்கது 

உக்ரைன்-ரஷியா போர் முடிவுக்கு வர போப் பிரான்சிஸ் சிறப்பு பிரார்த்தனை

ரோம், உக்ரைன் மீது ரஷியா 31-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரால் இரு தரப்புக்கும் அதிக அளவில் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.  போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்த நிலையில், ரஷியா மீது உலக நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன.  இதனிடையே உக்ரைன் மீதான போரை ரஷியா கைவிட வேண்டும் என்று போப் பிரான்சிஸ் தொடர்ந்து வலியுறுத்தி … Read more

மேற்கு வங்காளத்தில் 4 வாளிகளில் 40 நாட்டு வெடிகுண்டுகள்; போலீசார் பறிமுதல்

பீர்பும், மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பாது ஷேய்க் என்பவர் மார்ச் 21ந்தேதி அன்று படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து, இவரது கொலை காரணமாக அவரது சொந்த ஊரான பீர்பூம் மாவட்டம் ராம்பூர்ஹாட்டில் போக்டுய் கிராமத்தில் ஏற்பட்ட வன்முறையில், நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் பல வீடுகளுக்கு தீ வைத்தனர், அதில் 8 பேர் உயிருடன் எரித்து கொல்லப்பட்டனர். இந்த வன்முறை சம்பவம், மேற்கு வங்காள மாநிலம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. … Read more

ஆஸ்திரேலிய தோல்வி எதிரொலி: பாகிஸ்தான் அணியை சாடிய அக்தர்

கராச்சி, ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இதில் முதல் இரு டெஸ்ட் போட்டிகள் டிராவில் முடிவடைந்த நிலையில், கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 115 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த நிலையில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடர் குறித்து கருத்து தெரிவித்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சோயப் அக்தர், பாகிஸ்தான் அணியை சாடினார். இதுகுறித்து அவர் கூறுகையில்,  “பாகிஸ்தான் … Read more

"வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கு வாருங்கள் எங்கள் மாநிலத்திற்கு"-துபாயில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

துபாய் அரசு முறை பயணமாக துபாய் சென்றுள்ள தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் மந்திரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இன்று ஐக்கிய அமீரகம்-தமிழ்நாடு இடையே 1,600 கோடி ரூபாய்க்கான முதலீடு ஒப்பந்தமானது. குறிப்பாக நோபல் குழுமம் சார்பில் 1,000 கோடி ரூபாய் முதலீட்டில் இரும்பு தொழிற்சாலை அமைக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. பின்னர் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தொழில் முதலீடுகள் செய்ய வரும் முதலீட்டாளர்களை தமிழகம் வரவேற்க தயாராக இருப்பதாக தெரிவித்தார். … Read more