போப் பிரான்சிசுடன் இங்கிலாந்து மன்னர் சார்லஸ் சந்திப்பு

வாடிகன், போப் ஆண்டவர் பிரான்சிசுக்கு சில நாட்களுக்கு முன்பு நுரையீரல் பாதிப்பால் உடல்நலம் மோசமடைந்தது. தீவிர சிகிச்சைக்கு பின்னர் அவர் மீண்டு வந்தார். சுவாச தொற்று மற்றும் நுரையீரலை நிம்மோனியா பாதிப்பில் இருந்து குணமடைந்து சமீபத்தில் மருத்துவமனையில் இருந்து வாடிகனுக்கு திரும்பினார். இந்தநிலையில், போப் பிரான்சிசை இங்கிலாந்து மன்னர் சார்லஸ், அவரது மனைவி கமிலா ஆகியோர் சந்தித்தனர். மன்னர் சார்லஸ் 4 நாள் அரசு முறை பயணமாக இத்தாலிக்கு வந்தபோது வாடிகனில் போப் பிரான்சிஸ்சை சந்தித்ததாக வாடிகன் … Read more

நிதிஷ் குமாரை துணை பிரதமராக்க வேண்டும்-பாஜக மூத்த தலைவர் விருப்பம்

பாட்னா, பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் ஐக்கிய ஜனதாதள தலைவர் நிதிஷ் குமார் முதல்-மந்திரியாக பதவி வகித்து வருகிறார். மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடக்கிறது. 74 வயதான நிதிஷ் குமார் வருகிற தேர்தலிலும் போட்டியிட்டு மீண்டும் முதல்-மந்திரியாக விரும்புகிறார். இதற்காக தீவிர தேர்தல் பணிகளையும் முடுக்கி விட்டு உள்ளார்.ஆனால் நிதிஷ் குமாருக்கு தேசிய அளவில் பதவி அளிக்க வேண்டும் என பா.ஜனதா மூத்த தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான அஸ்வினி குமார் … Read more

மாண்டி கார்லோ டென்னிஸ்: அல்காரஸ் காலிறுதிக்கு முன்னேற்றம்

மான்டி கார்லோ, பல முன்னணி வீரர்கள் பங்கேற்றுள்ள மான்டி கார்லோ மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் தொடர் மொனாக்கோவில் நடந்து வருகிறது. இதில் , ஆண்கள் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஆட்டம் ஒன்றில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ், ஜெர்மனியின் டேனியல் அல்ட்மையர் உடன் மோதினார். பரபரப்பான இந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடிய அல்காரஸ் 6-3, 6-1 என்ற செட் கணக்கில் எளிதில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். தினத்தந்தி Related Tags : டென்னிஸ்  … Read more

பயணிகள் ஹெலிகாப்டர் நதியில் மூழ்கி விபத்து: மூன்று குழந்தைகள் உட்பட 6 பேர் பலி

நியூயார்க், அமெரிக்காவின் மன்ஹாட்டன் நகரைச் சுற்றி சுற்றுலாப் பயணிகளை ஏற்றி சென்ற தனியார் ஹெலிகாப்டர் ஒன்று நியூயார்க் நகரத்தின் ஹட்சன் நதியில் (Hudson River) விழுந்து விபத்துக்குள்ளானதில் மூன்று குழந்தைகள் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டதாக நியூயார்க் நகர மேயர் தெரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இறந்தவர்களில் ஸ்பெயினிலிருந்து வருகை தந்த ஒரு விமானி மற்றும் ஒரு குடும்பத்தினர் அடங்குவர். நியூயார்க் தீயணைப்புத் துறை, உள்ளூர் நேரப்படி பிற்பகல் 3:17 மணிக்கு நதியில் ஹெலிகாப்டர் மூழ்கியதாக தகவல் … Read more

காதல் மனைவி இறந்த துக்கத்தில்.. 2 பிஞ்சு குழந்தைகளை கொன்று தொழிலாளி தற்கொலை

தாவணகெரே, கர்நாடக மாநிலம் தாவணகெரேவை சேர்ந்தவர் உதய் (வயது 35). இவரது மனைவி ஹேமா (32). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு சிந்துஸ்ரீ (4), ஸ்ரீஜெய் (3) என்ற குழந்தைகள் இருந்தனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹேமா மாரடைப்பால் இறந்துபோனார். இதனால் மனைவி இறந்த துக்கத்தில் உதய் சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்ததுடன், குழந்தைகளை சரியாக கவனிக்க முடியவில்லையே என்ற கவலையில் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று … Read more

பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் போட்டி இன்று தொடக்கம்

இஸ்லாமாபாத், 6 அணிகள் இடையிலான பாகிஸ்தான் சூப்பர் லீக் (பி.எஸ்.எல்.) டி20 போட்டி இன்று தொடங்கி மே 18-ந்தேதி வரை பாகிஸ்தானில் 4 நகரங்களில் நடக்கிறது. ஐ.பி.எல். நடக்கும் சமயத்தில் பி.எஸ்.எல். லீக் நடப்பது இதுவே முதல் முறையாகும். ஐ.பி.எல். இரவு 7.30 மணிக்கு தொடங்கும் நிலையில் பி.எஸ்.எல். போட்டி இரவு 8.30 மணிக்கு தொடங்க இருப்பதாக போட்டிக்கான தலைமை செயல் அதிகாரி சல்மான் நசீர் தெரிவித்துள்ளார். இது போட்டிக்கான சரியான சூழல் கிடையாது. என்றாலும் பி.எஸ்.எல். … Read more

இரவு பகலாக தாக்குதல்… பயங்கரவாதிகளின் சுரங்கம், கட்டிடங்களை தகர்த்த இஸ்ரேல்

டெல் அவிவ், ஹமாஸ் அமைப்புக்கு எதிராக ஓராண்டாக இஸ்ரேல் தாக்குதல் நடத்திய நிலையில், முதல்கட்ட போர்நிறுத்த ஒப்பந்த அடிப்படையில், பரஸ்பரம் கைதிகள் விடுவிக்கப்பட்டனர். எனினும், 2-வது கட்ட போர்நிறுத்த ஒப்பந்தம் ஏற்படாத சூழலில், திடீரென இஸ்ரேல் தாக்குதலில் ஈடுபட தொடங்கியது. பயங்கரவாதிகளை இலக்காக கொண்டு நாங்கள் தாக்குதல் நடத்துகிறோம் என இஸ்ரேல் கூறுவதுடன், மக்கள் அடர்த்தியான பகுதிகளில் அவர்கள் (ஹமாஸ் அமைப்பினர்) செயல்படுகின்றனர் என்றும் அதனால், பொதுமக்களின் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என்றும் குற்றச்சாட்டாக கூறியது. தாக்குதலையும் தீவிரப்படுத்தி … Read more

அதிர்ச்சி சம்பவம்: மதுபானம் ஊற்றி கொடுத்து சிறுமி கூட்டு பலாத்காரம்

பெங்களூரு, கர்நாடகா மாநிலம் பெலகாவி மாவட்டத்தின் புறநகர் பகுதியில் 16 வயது சிறுமி பெற்றோருடன் வசித்து வருகிறாள். இந்தநிலையில், சிறுமிக்கும் அதே பகுதியை சேர்ந்த வாலிபர் ஒருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இருவரும் காதலித்து வந்தனர். இதையடுத்து அந்த வாலிபர், சிறுமியின் பெற்றோரிடம் தங்களது மகளை திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்திருந்தார். இதற்கிடையில், கடந்த 7-ந்தேதி சிறுமியின் வீட்டுக்கு தனது நண்பருடன் சென்ற வாலிபர், அவளை மது அருந்த கட்டாயப்படுத்தி கூட்டுக் பலாத்காரம் செய்துள்ளார். … Read more

கே.எல்.ராகுல் அபாரம்: பெங்களூரு அணியை வீழ்த்தி டெல்லி வெற்றி

பெங்களூரு, ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பெங்களூருவில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி – பில் சால்ட் ஆகியோர் களமிறங்கினர். இதி பில் சால்ட் ஆரம்பம் முதலே … Read more

டொமினிகன் குடியரசு கேளிக்கை விடுதி விபத்தில் மாகாண கவர்னர் மரணம்: பலி எண்ணிக்கை 113 ஆனது

சாண்டோ டொமிங்கோ: கரீபியன் தீவு நாடான டொமினிகன் குடியரசு நாட்டின் சாண்டோ டொமிங்கோவில் பிரபல இரவு கேளிக்கை விடுதியான ‘ஜெட் செட்’ என்னும் விடுதி அமைந்திருந்தது. இந்த விடுதிக்கு உள்ளூரை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளும் அதிகளவில் கூடுவார்கள். நேற்று முன்தினம் இரவு அந்த விடுதியில் இசை கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் ஏராளமானோர் அங்கு கூடினர். அரசியல் பிரமுகர்கள், பேஸ்பால் விளையாட்டு வீரர்கள் உள்பட பிரபலமானவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். நேற்று … Read more