உக்ரைன்-ரஷியா போர் முடிவுக்கு வர போப் பிரான்சிஸ் சிறப்பு பிரார்த்தனை

ரோம், உக்ரைன் மீது ரஷியா 31-வது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரால் இரு தரப்புக்கும் அதிக அளவில் உயிர்சேதம் ஏற்பட்டுள்ளது. உக்ரைனில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் அண்டை நாடுகளில் அகதிகளாக தஞ்சமடைந்துள்ளனர்.  போரை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்த நிலையில், ரஷியா மீது உலக நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்துள்ளன.  இதனிடையே உக்ரைன் மீதான போரை ரஷியா கைவிட வேண்டும் என்று போப் பிரான்சிஸ் தொடர்ந்து வலியுறுத்தி … Read more

மேற்கு வங்காளத்தில் 4 வாளிகளில் 40 நாட்டு வெடிகுண்டுகள்; போலீசார் பறிமுதல்

பீர்பும், மேற்கு வங்காளத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பாது ஷேய்க் என்பவர் மார்ச் 21ந்தேதி அன்று படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து, இவரது கொலை காரணமாக அவரது சொந்த ஊரான பீர்பூம் மாவட்டம் ராம்பூர்ஹாட்டில் போக்டுய் கிராமத்தில் ஏற்பட்ட வன்முறையில், நேற்று முன்தினம் அடையாளம் தெரியாத நபர்கள் சிலர் பல வீடுகளுக்கு தீ வைத்தனர், அதில் 8 பேர் உயிருடன் எரித்து கொல்லப்பட்டனர். இந்த வன்முறை சம்பவம், மேற்கு வங்காள மாநிலம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. … Read more

ஆஸ்திரேலிய தோல்வி எதிரொலி: பாகிஸ்தான் அணியை சாடிய அக்தர்

கராச்சி, ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு, 3 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியது. இதில் முதல் இரு டெஸ்ட் போட்டிகள் டிராவில் முடிவடைந்த நிலையில், கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 115 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று தொடரை 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. இந்த நிலையில் நடந்து முடிந்த டெஸ்ட் தொடர் குறித்து கருத்து தெரிவித்த பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான சோயப் அக்தர், பாகிஸ்தான் அணியை சாடினார். இதுகுறித்து அவர் கூறுகையில்,  “பாகிஸ்தான் … Read more

"வாய்ப்புகள் கொட்டிக்கிடக்கு வாருங்கள் எங்கள் மாநிலத்திற்கு"-துபாயில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

துபாய் அரசு முறை பயணமாக துபாய் சென்றுள்ள தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முதலீடுகளை ஈர்ப்பது தொடர்பாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் மந்திரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார். இன்று ஐக்கிய அமீரகம்-தமிழ்நாடு இடையே 1,600 கோடி ரூபாய்க்கான முதலீடு ஒப்பந்தமானது. குறிப்பாக நோபல் குழுமம் சார்பில் 1,000 கோடி ரூபாய் முதலீட்டில் இரும்பு தொழிற்சாலை அமைக்க ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. பின்னர் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தொழில் முதலீடுகள் செய்ய வரும் முதலீட்டாளர்களை தமிழகம் வரவேற்க தயாராக இருப்பதாக தெரிவித்தார். … Read more

கேரளாவில் இன்று 496 பேருக்கு கொரோனா பாதிப்பு

 திருவனந்தபுரம், கேரளாவில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, கேரளாவில் இன்று 496 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 693  பேர் குணமடைந்துள்ளனர்.  இதனால், கேரளாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 64 லட்சத்து 57  ஆயிரத்து 993 ஆக அதிகரித்துள்ளது.  வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 4 ஆயிரத்து 051   பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் .வைரஸ் தாக்குதலுக்கு இன்று  உயிரிழப்பு ஏற்படவில்லை என்பது … Read more

ஐ.பி.எல் தொடக்க விழாவில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்றவர்களை கவுரவிக்கும் பிசிசிஐ

மும்பை, ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டில் உதயமானது. ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ள இந்த ‘சரவெடி’ ஆட்டம் ஆண்டுதோறும் இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில் நடத்தப்படுகிறது. இதன்படி 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா மும்பையில் இன்று  தொடங்குகிறது. இந்த முறை குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் புதிதாக அறிமுகம் ஆவதால், அணிகளின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. இதனால் அணிகள் மோதும் முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அதிக தடவை ஐ.பி.எல். … Read more

கத்தாரின் தோகா மன்றத்தில் உரையாற்றிய உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

தோகா,  நேட்டோ கூட்டமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷியா, அந்நாடு மீது கடந்த பிப்ரவரி 24 ஆம் தேதி போர் தொடுத்தது. உக்ரைன் மீது 31-வது நாளாக ரஷிய படைகள் குண்டு மழை பொழிந்து வருகின்றன. அசுர பலம் கொண்ட ரஷிய ராணுவத்தின் தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் சளைக்காமல் ஈடு கொடுத்து வருகின்றன.  இதற்கிடையே, தனது நாட்டுக்கு சர்வதேச அளவில் ஆதரவு திரட்டும் வகையில், ஐரோப்பிய நாடுகளின் பாராளுமன்றங்களில் காணொலி வாயிலாக உக்ரைன் அதிபர் … Read more

உ.பி.ல் யோகியின் முதல் அறிவிப்பு… இலவச ரேசன் திட்டம் அடுத்த 3 மாதங்களுக்கு நீட்டிப்பு

லக்னோ, உத்தர பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிக தொகுதிகளை கைப்பற்றி பா.ஜ.க. மீண்டும் ஆட்சியை பிடித்தது.  முதல்-மந்திரியாக 2வது முறையாக யோகி ஆதித்யநாத் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.  இதன்படி, அவர் நேற்று முதல்-மந்திரியாக பொறுப்பேற்று கொண்டார்.  அவருடன் அமைச்சர்களும் பொறுப்பேற்று கொண்டனர். இதனை தொடர்ந்து, உத்தர பிரதேச அமைச்சரவையின் முதல் கூட்டம் லக்னோ நகரில் இன்று நடந்தது.  இதில், மாநிலத்தில் அடுத்த 3 மாதங்களுக்கு (ஜூன் 30 வரை) இலவச ரேசன் திட்டத்தினை நீட்டிப்பது … Read more

பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்திய அணியால் அரையிறுதிக்கு தகுதிபெற வாய்ப்பு உள்ளதா..?

வெலிங்டன், பெண்கள் உலகக்கோப்பை போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதன் லீக் போட்டிகள் நாளையுடன் முடிவடைய உள்ளன. இதில் தற்போது வரையில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய இரு அணிகள் மட்டும் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளன. எஞ்சியுள்ள இரு இடங்களுக்கு இந்திய உட்பட 4 அணிகள் மல்லுக்கட்டுகின்றன. நாளை கடைசி இரு லீக் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளின் முடிவில் அரையிறுதிக்கு தகுதிபெறும் அணி எது என்பது தெரிந்துவிடும். எனினும், இந்தியா நாளை தன் கடைசி … Read more

விடுகதை அல்ல: 24 வயது பெண்ணுக்கு 22 குழந்தைகள்…? எல்லாம் 2 வயது அது எப்படி…?

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தைச் சேர்ந்தவர் கிறிஸ்டினா ஓஸ்டர்க். 24 வயதான இந்தப் பெண்ணுக்கு இப்போது 22 குழந்தைகள் உள்ளன. கிறிஸ்டினாவின் கணவர் பெயர் காலிப். இவர்கள் இருவரும் வாடகை தாய் முறையில் 22 குழந்தைகளை பெற்றுள்ளனர். இதற்காக அவர்கள் 195,000 டாலர்களை( இந்திய மதிப்பில் ரூ1.50 கோடி)  செலவு செய்துள்ளனர். கிறிஸ்டினாவின் இந்த பெரிய குடும்பம் குறித்த பதிவு  இன்ஸ்டாகிராம் தளத்தில் வைரல் ஆனது. இவர்களுக்கு எப்படி இத்தனை குழந்தைகள் என்பதை நெட்டிசன்களால் புரிந்து கொள்ள இயலவில்லை. … Read more