உ.பி.ல் யோகியின் முதல் அறிவிப்பு… இலவச ரேசன் திட்டம் அடுத்த 3 மாதங்களுக்கு நீட்டிப்பு

லக்னோ, உத்தர பிரதேசத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிக தொகுதிகளை கைப்பற்றி பா.ஜ.க. மீண்டும் ஆட்சியை பிடித்தது.  முதல்-மந்திரியாக 2வது முறையாக யோகி ஆதித்யநாத் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.  இதன்படி, அவர் நேற்று முதல்-மந்திரியாக பொறுப்பேற்று கொண்டார்.  அவருடன் அமைச்சர்களும் பொறுப்பேற்று கொண்டனர். இதனை தொடர்ந்து, உத்தர பிரதேச அமைச்சரவையின் முதல் கூட்டம் லக்னோ நகரில் இன்று நடந்தது.  இதில், மாநிலத்தில் அடுத்த 3 மாதங்களுக்கு (ஜூன் 30 வரை) இலவச ரேசன் திட்டத்தினை நீட்டிப்பது … Read more

பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட்: இந்திய அணியால் அரையிறுதிக்கு தகுதிபெற வாய்ப்பு உள்ளதா..?

வெலிங்டன், பெண்கள் உலகக்கோப்பை போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதன் லீக் போட்டிகள் நாளையுடன் முடிவடைய உள்ளன. இதில் தற்போது வரையில் ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய இரு அணிகள் மட்டும் அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ளன. எஞ்சியுள்ள இரு இடங்களுக்கு இந்திய உட்பட 4 அணிகள் மல்லுக்கட்டுகின்றன. நாளை கடைசி இரு லீக் போட்டிகள் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளின் முடிவில் அரையிறுதிக்கு தகுதிபெறும் அணி எது என்பது தெரிந்துவிடும். எனினும், இந்தியா நாளை தன் கடைசி … Read more

விடுகதை அல்ல: 24 வயது பெண்ணுக்கு 22 குழந்தைகள்…? எல்லாம் 2 வயது அது எப்படி…?

அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தைச் சேர்ந்தவர் கிறிஸ்டினா ஓஸ்டர்க். 24 வயதான இந்தப் பெண்ணுக்கு இப்போது 22 குழந்தைகள் உள்ளன. கிறிஸ்டினாவின் கணவர் பெயர் காலிப். இவர்கள் இருவரும் வாடகை தாய் முறையில் 22 குழந்தைகளை பெற்றுள்ளனர். இதற்காக அவர்கள் 195,000 டாலர்களை( இந்திய மதிப்பில் ரூ1.50 கோடி)  செலவு செய்துள்ளனர். கிறிஸ்டினாவின் இந்த பெரிய குடும்பம் குறித்த பதிவு  இன்ஸ்டாகிராம் தளத்தில் வைரல் ஆனது. இவர்களுக்கு எப்படி இத்தனை குழந்தைகள் என்பதை நெட்டிசன்களால் புரிந்து கொள்ள இயலவில்லை. … Read more

இந்திய பத்திரிகை அதிபர்கள் சங்கத்தின் புகாரின் பேரில் ‘கூகுள்’ நிறுவனம் மீது இந்திய போட்டி ஆணையம் விசாரணை

புதுடெல்லி,  இந்திய பத்திரிகை அதிபர்கள் சங்கத்தின் (ஐ.என்.எஸ்.) பொது செயலாளர் மேரி பால்  ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- இந்திய செய்தி ஊடகங்கள், தங்கள் வாடிக்கையாளர்களுக்காக நாட்டு நடப்புகளை செய்திகளாக உருவாக்குகின்றன. அவை இணையதளத்தில் மின்னணு வடிவத்தில் கிடைக்கின்றன.  ‘கூகுள்’ போன்ற தேடுபொருளை பயன்படுத்தி, அந்த செய்திகளை வாடிக்கையாளர்கள் அறிந்து கொள்கிறார்கள். மேற்கோள் காட்டவும் பயன்படுத்திக்கொள்கிறார்கள்.    செய்திகளை உருவாக்க ஊடகங்கள் ஏராளமான பணம் முதலீடு செய்கின்றன. இருப்பினும், அந்த செய்திக்கு உரிய பணத்தை … Read more

தோல்வி எதிரொலி : ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் சரிவை சந்தித்த பாகிஸ்தான் அணி

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை ஆஸ்திரேலிய அணி 1-0 என கைப்பற்றியது .3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2  போட்டிகள் டிராவில் முடிவடைந்த நிலையில் கடைசி டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 115 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது  இந்த வெற்றியினால் ஆஸ்திரேலிய அணி ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி பட்டியலில் முதல் இடத்திலும் , இந்த தொடரில்  தோல்வி அடைந்ததால்  இரண்டாம் இடத்தில் இருந்த பாகிஸ்தான் அணி 4 வது  இடத்துக்கு தள்ளப்பட்டது .இந்திய அணி … Read more

குடிநீரில் பிளாஸ்டிக் பொருளை வடிகட்ட உதவும் வெண்டைக்காய்… ஆய்வில் ஆச்சரிய தகவல்

டெக்சாஸ், நாம் அன்றாடம் வாழ்வதற்கு அடிப்படையாக உணவு, குடிநீர் ஆகியவை இன்றியமையாத ஒன்றாக உள்ளது.  இவற்றில், விரதம், பட்டினி என்ற பெயரில் ஒரு நாளில் உணவின்றி கூட இருந்து விடலாம்.  ஆனால், குடிநீர் இல்லாவிட்டால் நாக்கு வறண்டு தவிக்கும் நிலைக்கு தள்ளப்படும் சூழல் ஏற்படும். அதிலும், இந்த கோடை காலத்தில் தண்ணீர் பஞ்சம் மக்களை அல்லல்படுத்தி விடும்.  கிடைக்கும் தண்ணீரை குடித்து செல்லும் நிலையும் பல இடங்களில் காணப்படுகிறது.  குடிநீரின் அத்தியாவசிய தேவை ஒருபுறம் பார்க்கப்பட்டாலும், அதன் … Read more

துபாயில் இருந்து தங்கம் கடத்தி வந்தவர் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் கைது

ஜெய்ப்பூர், ஜெய்ப்பூர் சர்வதேச விமான நிலையத்தில் பயணி ஒருவர் சந்தேகப்படும்படியாக, தன்னுடைய உடமைகளை வேறு ஒருவரிடம் ஒப்படைத்துள்ளார்.  இதையடுத்து, சந்தேக நபரிடம் எதற்காக உங்கள் பொருட்களை இன்னொருவரிடம் கொடுக்கின்றீர்கள் என்று சுங்கத்துறை அதிகாரிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு அந்த நபர் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தார். இதனை தொடர்ந்து சந்தேக நபரையும், அவரிடம் பொருட்களை பெற்றுக்கொண்ட நபரையும் தனியாக சோதனை செய்தனர். அப்போது அந்த பயணி, தனது கால் ஷூவில் 99.50 சதவீதம் தூய்மையான 369 கிராம் தங்கத்தை … Read more

லாகூர் டெஸ்ட் : பாகிஸ்தானை வீழ்த்தி தொடரை வென்றது ஆஸ்திரேலிய அணி

லாகூர்,   பாகிஸ்தான் சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அந்த நாட்டு அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ராவல்பிண்டி மற்றும் கராச்சியில் நடந்த முதல் இரு டெஸ்ட் போட்டிகள் ‘டிரா’வில் முடிந்தது. இந்த நிலையில் பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட போட்டி லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் கடந்த மார்ச் 21ம் தேதி தொடங்கியது  டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். … Read more

ரஷிய தாக்குதலில் 300-பேர் பலி என அச்சம்: உக்ரைன் அதிகாரிகள் தகவல்

கீவ், உக்ரைன் மீது ரஷிய படைகள் தொடர்ந்து குண்டு மழை பொழிகின்றன. உக்ரைன் மீது ரஷியா நடத்தும் தாக்குதல் ஒருமாதம் கடந்து விட்டாலும் கூட இன்னும் தாக்குதலின் தீவிரம் குறையவில்லை. உக்ரைன் தலைநகர் கீவ்-வை கைப்பற்றும் நோக்கில் ரஷியா தனது தாக்குதலை தொடுத்து வருகிறது.  ஆனால், உக்ரைன் படைகள் கடும் சவால் அளிப்பதால், ரஷியாவில் இன்னும் தலைநகரை கைப்பற்ற முடியவில்லை. உக்ரைனின் பலநகரை ரஷிய படைகள் சுற்றி வளைத்துள்ளன. இவற்றில் முக்கியமான நகரங்களில் ஒன்று மரியோபோல் ஆகும்.ஏனெனில், … Read more

யோகி ஆதித்யநாத் மந்திரி சபையில் 24 புதுமுகங்களுக்கும் இடம்

லக்னோ,   உத்தரபிரதேசத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் பா.ஜனதா கூட்டணி 273 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்தது. இந்நிலையில்  உத்தரபிரதேச முதல்-மந்திரியாக இன்று  யோகி ஆதித்யநாத் தொடர்ந்து 2-வது முறையாக பதவியேற்றார் . யோகி ஆதித்யநாத்துக்கு கவர்னர் ஆனந்தி பென் படேல் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் .லக்னோவில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் பதவியேற்பு நிகழ்ச்சி  நடைபெற்றது .இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, … Read more