ரஷிய தாக்குதலில் 300-பேர் பலி என அச்சம்: உக்ரைன் அதிகாரிகள் தகவல்

கீவ், உக்ரைன் மீது ரஷிய படைகள் தொடர்ந்து குண்டு மழை பொழிகின்றன. உக்ரைன் மீது ரஷியா நடத்தும் தாக்குதல் ஒருமாதம் கடந்து விட்டாலும் கூட இன்னும் தாக்குதலின் தீவிரம் குறையவில்லை. உக்ரைன் தலைநகர் கீவ்-வை கைப்பற்றும் நோக்கில் ரஷியா தனது தாக்குதலை தொடுத்து வருகிறது.  ஆனால், உக்ரைன் படைகள் கடும் சவால் அளிப்பதால், ரஷியாவில் இன்னும் தலைநகரை கைப்பற்ற முடியவில்லை. உக்ரைனின் பலநகரை ரஷிய படைகள் சுற்றி வளைத்துள்ளன. இவற்றில் முக்கியமான நகரங்களில் ஒன்று மரியோபோல் ஆகும்.ஏனெனில், … Read more

யோகி ஆதித்யநாத் மந்திரி சபையில் 24 புதுமுகங்களுக்கும் இடம்

லக்னோ,   உத்தரபிரதேசத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 403 தொகுதிகளில் பா.ஜனதா கூட்டணி 273 இடங்களை கைப்பற்றி ஆட்சியை தக்க வைத்தது. இந்நிலையில்  உத்தரபிரதேச முதல்-மந்திரியாக இன்று  யோகி ஆதித்யநாத் தொடர்ந்து 2-வது முறையாக பதவியேற்றார் . யோகி ஆதித்யநாத்துக்கு கவர்னர் ஆனந்தி பென் படேல் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் .லக்னோவில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் கிரிக்கெட் மைதானத்தில் பதவியேற்பு நிகழ்ச்சி  நடைபெற்றது .இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, … Read more

டோனியின் தலைமையின் கீழ் விளையாடியது எனக்கு கிடைத்த அதிர்ஷ்டம்: பாப் டு பிளெஸ்சிஸ்

மும்பை, ஐபிஎல் சீசன் தொடங்கியதில் இருந்தே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்தவர் எம்.எஸ்.டோனி. இவர் நேற்று சென்னை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினார். இதனால், சென்னை அணியின்ன் புதிய கேப்டனாக ரவீந்திர் ஜடேஜா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், சென்னை அணியில் விளையாடியது குறித்தும், டோனியின் கேப்டன்சி குறித்தும் தென் ஆப்பிரிக்க முன்னாள் கேப்டன் பாப் டு பிளெஸ்சிஸ் கூறியதாவது; “டோனியின் கேப்டன்சியின் கீழ் சென்னை அணியில் நீண்ட காலம் விளையாடியுள்ளேன். … Read more

"அமெரிக்காவுடன் மோதலுக்கு தயார்!" -வடகொரிய அதிபர் அதிரடி

பியாங்யாங், வடகொரியா சமீபத்தில் மிகப்பெரிய கண்டம்  விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணை சோதனையை நடத்தியது. இதுகுறித்து அந்நாட்டு அதிபர் கிம் ஜாங் உன் கூறுகையில்,  இந்த ஏவுகணை சோதனை, வடகொரியாவின் அணுசக்தி வலிமையை நிரூபிக்கவும், அமெரிக்க ராணுவ நடவடிக்கையை தடுப்பதற்காகவும் நடத்தப்பட்டுள்ளது என்றார்.  மேலும், இந்த ஏவுகளை வடகொரியாவின் முந்தைய தயாரிப்புகளை விட அதிக உயரம் மற்றும் தொலைவுகள் சென்று தாக்கக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது என்று கூறிய அவர், அமெரிக்காவின் எந்த ஒரு ராணுவ முயற்சிகளையும் … Read more

கேரளா பாலியல் வன்கொடுமை வழக்கு; டாட்டூ ஸ்டுடியோ கலைஞருக்கு ஜாமீன் மறுப்பு

கொச்சி, கேரளாவின் கொச்சி நகரில் எடப்பள்ளி பகுதியில் டாட்டூ ஸ்டுடியோ நடத்தி வருபவர் சுஜீஷ் பி.எஸ். இவர் பல பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இவர் மீது 6 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று போலீசார் தெரிவித்தனர். 18 வயது இளம்பெண் ஒருவர் சுஜீசின் ஸ்டுடியோவிற்கு டாட்டூ போட வந்தபோது அவரை சுஜீஷ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.  இதனை தொடர்ந்து சுஜீசுக்கு எதிராக முதன்முறையாக அந்த இளம்பெண் போலீசில் புகார் அளித்து உள்ளார். இதனையடுத்து, பிரான்ஸ் … Read more

நியூசிலாந்து – நெதர்லாந்து அணிகளுக்கு இடையிலான 20 ஓவர் போட்டி மழையால் ரத்து

நெதர்லாந்து கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஒரு 20 ஓவர் போட்டி ,மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது . இரு  அணிகளுக்கும் இடையிலான டி20 போட்டி இன்று நடைபெற இருந்தது .இந்நிலையில் இந்த ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டுள்ளது . நியூசிலாந்து – நெதர்லாந்து அணிகள் மோதும் முதல் ஒரு நாள் போட்டி வருகிற மார்ச் 29ம் தேதி நடைபெற உள்ளது 

டேட்டிங்கில் நபரை நடுநிசியில் கத்தியால் குத்திய ஈரானிய இளம்பெண்… மர்மம் என்ன?

லாஸ் வேகாஸ், அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நிக்கா நிகவுபின் (வயது 21) என்ற இளம்பெண், பிளென்டி ஆஃப் பிஷ் என்ற டேட்டிங் வலைதளம் வழியே ஆடவர் ஒருவரிடம் தன்னை அறிமுகப்படுத்தி கொண்டார். இதன்பின்னர் ஹெண்டர்சன் நகரில் உள்ள சன்செட் ஸ்டேசன் ஓட்டலில் சந்திப்பது என இருவரும் முடிவு செய்தனர்.  இதற்காக இரண்டு பேரும் ஓட்டலில் அறை ஒன்றை வாடகைக்கு எடுத்து உள்ளனர். சம்பவம் நடைபெற்ற நாளில் இருவரும் பாலியல் உறவில் ஈடுபட்டு உள்ளனர்.  அதனை தொடர்ந்து, … Read more

டெல்லியில் 17-வயது சிறுவன் கழுத்தறுக்கப்பட்ட நிலையில் சூட்கேசில் சடலமாக கண்டெடுப்பு

தலைநகர் டெல்லியில் உள்ள ரோஹினி பகுதியை சேர்ந்த 17-வயது சிறுவன் நேற்று இரவு  திடீரென மாயமானான். இதையடுத்து, அருகாமையில் உள்ள காவல் நிலையத்தில் பெற்றோர்கள் புகார் அளித்தனர். இதற்கிடையில், இன்று காலை மன்கோல்புரி பகுதியில் உள்ள பீர் பாபா பஜார் பகுதியில், சந்தேகத்திற்கிடமான வகையில், சூட்கேஸ் ஒன்று கேட்பாரற்று கிடந்தது.  இதைக் கவனித்த உள்ளூர்வாசிகள் உடனடியக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.  நிகழ்விடத்திற்கு வந்த போலீசார், சூட்கேசை கைப்பற்றி திறந்து பார்த்ததும் பதறினர். ஏனெனில், சூட்கேசிற்குள் சிறுவன் ஒருவனது … Read more

தோனியை போன்ற கேப்டனை பெற சென்னை அணி அதிர்ஷ்டம் செய்திருக்க வேண்டும்- சேவாக் புகழாரம்

மும்பை, ஐபிஎல் 15-வது சீசன் கிரிக்கெட் திருவிழா வரும் நாளை முதல் தொடங்கவுள்ளது. இதன் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதவுள்ளன. இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி நேற்று விலகினார். இதையடுத்து சென்னை அணியின் புதிய கேப்டனாக ஆல்ரவுண்டர் ஜடேஜா நியமிக்கப்பட்டார். ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டது தோனியின் முடிவு அணி நிர்வாகம் தெரிவித்தது. கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினாலும், வீரராக … Read more

ஒரே நாளில் 200 ரஷிய வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் – உக்ரைன் ராணுவம் தகவல்

கீவ், உக்ரைனில் ரஷிய ராணுவம் நடத்தி வரும் தாக்குதல் கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உக்ரைன் நாட்டின் முக்கிய பகுதிகளை ரஷிய ராணுவம் கைப்பற்றியுள்ளது. இதற்கு உக்ரைன் தரப்பிலும் பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது கடந்த 24 மணி நேரத்தில், உக்ரைன் படைகள் சுமார் 200 ரஷிய ராணுவ வீரர்களைக் கொன்றதுடன், ஒன்பது தாக்குதல்களையும் முறியடித்துள்ளதாக உக்ரைன் ஆயுதப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 12 டாங்கிகள், 20 கவச வாகனங்கள், 9 பீரங்கி அமைப்புகள், 3 … Read more