பரம்வீர் சிங் வழக்கு – சிபிஐ விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

புதுடெல்லி, மராட்டிய  மாநில முன்னாள் உள்துறை  மந்திரி அனில் தேஷ்முக்கிடம் இருந்து ரூ.100 கோடி வசூலித்ததாக மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம்பீர் சிங் மீது மராட்டிய போலீசார் தொடுத்துள்ள அனைத்து வழக்குகளையும் சிபிஐக்கு மாற்ற சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஒரு வாரத்திற்குள் சிபிஐயிடம் ஒப்படைக்குமாறு போலீசாருக்கு சுப்ரீம் கோர்ட்டு  உத்தரவிட்டுள்ளது. உண்மை வெளிவருவது முக்கியம், ஆனால் பரம்வீர் சிங்கும், முன்னாள் உள்துறை மந்திரியும் ஒருவர் மீது ஒருவர் கூறியுள்ள குற்றச்சாட்டுகள் காரணமாக மக்களின் நம்பிக்கையை சிதைத்துவிட்டன … Read more

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து தோனி விலகல்…!

மும்பை, ஐபிஎல் 15-வது சீசன் கிரிக்கெட் திருவிழா வரும் சனிக்கிழமை முதல் தொடங்கவுள்ளது. இதன் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோத உள்ளது.  இந்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து தோனி விலகியுள்ளார். தனது கேப்டன் பதவியை ரவீந்திர ஜடேஜாவுக்கு தோனி விட்டுக்கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.  கேப்டன் பொறுப்பில் இருந்து விலகினாலும், வீரராக அணியில் தோனி தொடர்வார் என்று அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. ஐபிஎல் போட்டிகள்தொடங்கியதில் … Read more

சுவிட்சர்லாந்தில் பதுங்கிய புதினின் ரகசிய காதலி… வெளியேற்ற வலுக்கும் கோரிக்கை

ஜெனீவா, ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்ற ஜிம்னாஸ்டிக் வீராங்கனை அலினா கபேவா (வயது 38).  இவர் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினின் மனைவி என பரவலாக நம்பப்படுகிறது.  புதினின் 4 குழந்தைகளுக்கு தாய் என்றும் கூறப்படுகிறது.  எனினும், இதுபற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதனையும் புதின் இதுவரை வெளியிடவில்லை. புதினின் ரகசிய காதலி, நேசனல் மீடியா குரூப் என்ற ரஷியாவில் உள்ள ஒரு மிக பெரிய தொலைக்காட்சி ஒன்றின் இயக்குனர்கள் வாரிய தலைவராக இருந்து வருவதுடன், ஆண்டொன்றுக்கு 80 லட்சம் … Read more

எரிபொருள் விலையேற்றத்துக்கு என்ன காரணம்? மத்திய மந்திரி விளக்கம்

புதுடெல்லி, நாட்டில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனால் இல்லதரசிகள் வேதனை அடைந்துள்ளனர்.  இந்தநிலையில்,  நாடளுமன்ற மக்களவையில் இதுகுறித்த கேள்விக்குப் பதிலளித்த மத்திய மந்திரி ஹர்தீப் சிங் புரி, நாட்டில் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலை உயர்வுக்குக் காரணம் சர்வதேச சந்தையில் ஏற்பட்ட விலை உயர்வே ஆகும். எனினும் மக்களுக்கு குறைந்த விலையில் எரிபொருள் கிடைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  ஏப்ரல் 2021 முதல் பிப்ரவரி 2022 வரையிலான … Read more

லாகூர் டெஸ்ட் : கடைசி நாளில் பாகிஸ்தான் வெற்றிக்கு 278 ரன்கள் தேவை

லாகூர்,   பாகிஸ்தான் சென்றுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அந்த நாட்டு அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் ராவல்பிண்டி மற்றும் கராச்சியில் நடந்த முதல் இரு டெஸ்ட் போட்டிகள் ‘டிரா’வில் முடிந்தது. இந்த நிலையில் பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட போட்டி லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் கடந்த மார்ச் 21ம் தேதி தொடங்கியது  டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் கம்மின்ஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். … Read more

புதிய, அதிக சக்தி வாய்ந்த, தடை செய்யப்பட்ட ஏவுகணை பரிசோதனை… வடகொரியா அதிரடி

பியாங்யாங், அமெரிக்கா, தென்கொரியா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட நாடுகளை அச்சுறுத்தும் வகையிலும், தங்கள் ஆயுத பலம் பற்றி உலக நாடுகளுக்கு வெளிப்படும் வகையிலும், அணு ஆயுதங்களை தாங்கி செல்லும் ஏவுகணைகளை சோதனை செய்து உலக நாடுகளுக்கு வடகொரியா அவ்வப்போது அதிர்ச்சி கொடுத்து வருகிறது. தொலைதூர இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் ஏவுகணை, ஹைப்பர் சோனிக் ஏவுகணை என பல்வேறு வகையிலான ஏவுகணைகளை வடகொரியா பரிசோதித்து வருகிறது. இந்நிலையில், கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத வகையில் புதிய மற்றும் … Read more

மேகதாது விவகாரம்: தமிழக தீர்மானத்தை எதிர்த்து கர்நாடக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம்

பெங்களூரு,  கர்நாடக மாநிலம் குடகு மாவட்டத்தில் உருவாகும் காவிரி ஆறு கர்நாடகம் மட்டுமல்லாது தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா ஆகிய மாநிலங்களுக்கும் பாய்கிறது. ஆனால் காவிரி நீரை பங்கிட்டு கொள்வதில் கர்நாடகம், தமிழ்நாடு இடையே நீண்டகால பிரச்சினை இருந்து வருகிறது.  இதற்கிடையில், காவிரியின் குறுக்கே ரூ.9 ஆயிரம் கோடி செலவில் ராமநகர் மாவட்டம் கனகபுரா அருகே மேகதாது எனும் இடத்தில் புதிய அணை கட்ட கர்நாடகம் முடிவு செய்தது. மேலும், கர்நாடக சட்டசபையில் 2022-2023-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை அம்மாநில … Read more

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சு தேர்வு

கிரேனடா, இங்கிலாந்து அணி வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. இதில் நடந்துமுடிந்த இரு டெஸ்ட் போட்டிகளும் டிராவில் முடிந்தது.  இந்த நிலையில், 3-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியானது கிரேனடாவில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது.  அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து வருகிறது, 

உக்ரைனுக்கு 6,000 ஏவுகணைகளை அனுப்பி உள்ளோம் – இங்கிலாந்து பிரதமர்

லண்டன், உக்ரைன் தலை நகரான கீவ் நகர் மீது நேற்று ரஷிய படைகள் நடத்திய  குண்டு வெடிப்புகள், அந்த நகரை குலுங்க வைத்தது. வடமேற் கில் இருந்து பீரங்கி தாக்குதல், தொடர்ந்து நடத்தப் பட் டது. துப்பாக்கி சண்டை களும் கீவ் நகரில் இடை விடாமல் நடந்ததாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக் கின்றன.  கடந்த ஒரு மாதமாக தொடரும் இந்த போரில் ராணுவ வீரர்கள், மக்கள் என ஆயிரக்கணக்கானோர் பலியாகியுள்ளனர். புற நகரான புச்சா, ஹோஸ்டமெல், … Read more

சென்னை ஐகோர்ட்டிற்கு இரு நீதிபதிகள் நியமனம்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவு

புதுடெல்லி, சென்னை ஐகோர்ட்டிற்கு கூடுதலாக இரு நீதிபதிகளை நியமனம் செய்து ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். வழக்கறிஞர்களாக இருந்து வந்த 6 பேரை நீதிபதிகளாக நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் பரிந்துரைத்து இருந்த நிலையில், ஜனாதிபதி உத்தரவிட்டு உள்ளார்.  வழக்கறிஞர்களாக இருந்து வந்த மாலா மற்றும் சவுந்தர் ஆகியோரை கூடுதல் நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இந்த உத்தரவின் மூலம் சென்னை ஐகோர்ட்டில் உள்ள நீதிபதிகளின் மொத்த எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ளது. பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை 12 … Read more