இரவில் பணி முடிந்து 10 கி.மீ. தூரம் ஓடும் இளைஞரை பாராட்டிய முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்..!!

லண்டன், உத்தரகாண்டின் பரோலா பகுதியில் வசித்து வருபவர் பிரதீப் மெஹ்ரா (வயது 19).  இவர் தன்னுடைய வீட்டில் இருந்து 10 கி.மீ. தொலைவில்  இருக்கும் நிறுவனத்தில் வேலை செய்கிறார். பணி முடிந்து வீடு திரும்ப இரவாகி விடுகிறது. ஆனால், மற்றவர்களை போன்று வாகனம், பேருந்து வசதிகளை பிரதீப் பயன்படுத்தவில்லை.  அதற்கு பதிலாக, பணி முடிந்ததும் இரவில், நொய்டா சாலையில் 10 கி.மீ. தூரம் ஓடியே வீட்டை அடைகிறார். ராணுவத்தில் சேர்வதற்காக தான் ஓடுவதாகவும் காலையில் தினமும் 8 … Read more

“ரஷியா மிகப்பெரிய போர்க் குற்றச்செயல்களை செய்து வருகிறது” – ஐரோப்பிய ஒன்றியம் கடும் கண்டனம்!

பிரஸ்ஸல்ஸ்(பெல்ஜியம்), உக்ரைனில் தொடர்ந்து தாக்குதல் நடத்தில் வரும் ரஷியா மீது இன்னும் கூடுதல் பொருளாதார தடைகள் விதிப்பது பற்றி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தின் தொடக்கத்தில் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கை செயலாளர் ஜோசப் போரெல் பேசினார்.     அப்போது அவர் கூறியதாவது, “உக்ரைனில் மரியுபோலில் அனைத்தையும் அழித்தது, குண்டுவீசி அனைவரையும் கொன்றது என இப்போது நடப்பது ஒரு மாபெரும் போர்க் குற்றமாகும்” என்றார்.  இந்த கூட்டத்தில் பேசிய லிதுவேனியா … Read more

மணிப்பூர் முதல் மந்திரியாக பைரேன் சிங் பதவியேற்பு

இம்பால்,  வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கான முடிவுகள் கடந்த 10-ந்தேதி வெளியாகின. இதில் மொத்தமுள்ள 60 இடங்களில் 32 தொகுதிகளை கைப்பற்றி பா.ஜனதா கட்சி ஆட்சியை தக்க வைத்தது. அங்கு முதல்-மந்திரி பதவியில் இருக்கும் பைரேன் சிங் மற்றும் மூத்த எம்.எல்.ஏ. பிஸ்வஜித் சிங் ஆகியோருக்கு இடையே புதிய முதல்-மந்திரி பதவியை பிடிப்பதற்கு போட்டி நிலவியது. இது தொடர்பாக கடந்த 10 நாட்களில் இருவரும் 2 முறை டெல்லி சென்று … Read more

பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட்: மழையால் டாஸ் போடுவதில் தாமதம்

ஹாமில்டன், பெண்கள் உலகக்கோப்பை போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது.  இதில் இன்று நடைபெறும் 20 ஆவது லீக் ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன. இந்த போட்டியில் தற்போது மழை பெய்துவருவதால், டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் முதன்முறையாக நீதிபதியாக ஒரு கறுப்பின பெண்!

வாஷிங்டன், அமெரிக்காவின் சுப்ரீம் கோர்ட்டில் முதன்முறையாக கறுப்பின பெண் ஒருவர் நீதிபதியாக பொறுப்பேற்றக உள்ளார். முன்னதாக கறுப்பின பெண்ணான கேடான்ஜி பிரவுன் ஜாக்சன் என்பவரை, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் புதிய நீதிபதியாக நியமிக்க ஒப்புதல் அளித்தார்.  அவருடைய இந்த ஒப்புதலுக்கு பின்னர் அமெரிக்க நாடாளுமன்ற செனட் உறுப்பினர்கள் வாக்கெடுப்பு நடத்தி அதன்பின் தான் அவர் நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவார். இந்நிலையில், கறுப்பின பெண்ணை நீதிபதியாக நியமிக்க இன்று வாக்கெடுப்பு தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது. 100 உறுப்பினர்களைக் கொண்ட … Read more

பத்ம விருதுகளை இன்று வழங்குகிறார் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்..!

புதுடெல்லி, பத்ம விருதுகள் ஆண்டுதோறும் குடியரசு தினத்தை முன்னிட்டு அறிவிக்கப்படும் இந்தியாவின் உயரிய சிவிலியன் விருதுகளில் ஒன்றாகும். இந்த விருதுகள் பத்ம விபூஷன், பத்ம பூஷன் மற்றும் பத்மஸ்ரீ ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழங்கப்படுகின்றன. பொது சேவை மற்றும் முக்கிய துறைகளில் குறிப்பிடத்தக்க சாதனை புரிந்தவர்களை கவுரவிக்க இந்த விருது வழங்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகளை ஜனாதிபதி  ராம்நாத் கோவிந்த் இன்று வழங்குகிறார். இதுகுறித்து ராஷ்டிரபதி பவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், ராஷ்டிரபதி … Read more

பாகிஸ்தான்- ஆஸ்திரேலியா கடைசி டெஸ்ட் இன்று தொடக்கம்

லாகூர்,  24 ஆண்டுக்கு பிறகு பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி அந்த நாட்டு அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது.  இதில் ராவல்பிண்டி மற்றும் கராச்சியில் நடந்த முதல் இரு டெஸ்ட் போட்டிகள் ‘டிரா’வில் முடிந்தது. இந்த நிலையில் பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட போட்டி லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் இன்று (திங்கட்கிழமை) தொடங்குகிறது. 2009-ம் ஆண்டு இலங்கை வீரர்கள் … Read more

எலான் மஸ்கின் தனியார் ஜெட் விமானத்தை ரகசியமாக கண்காணிக்கும் 19 வயது மாணவர்..!!

ஆஸ்டின், டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க். உலகின் முன்னணி பணக்காரர்களின் ஒருவராக விளங்கும் இவர் ஸ்பைஸ் எக்ஸ் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தையும் நிர்வகித்து வருகிறார். இந்த நிலையில் இவர் தற்போது தன்னுடைய தனியார் ஜெட் விமானத்தில் ஆஸ்டின் நகரத்தில் இருந்து பெர்லின் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை இவரது தனியார் ஜெட் விமானத்தை ரகசியமாக கண்காணிக்கும் டுவிட்டர் கணக்கான எலான் ஜெட் தெரிவித்துள்ளது. இந்த டுவிட்டர் கணக்கை 19 வயதான ஜாக் … Read more

மணிப்பூர் முதல் மந்திரியாக பிரேன் சிங் மீண்டும் தேர்வு

உத்தர பிரதேசம், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் சமீபத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது.  இந்த 5 மாநிலங்களில் 4 மாநிலங்களை பாஜக கைப்பற்றியது. பஞ்சாப்பில் காங்கிரஸ், பாஜகவை வீழ்த்தி ஆம் ஆத்மி அபாரமாக வெற்றிப்பெற்று முதல் முறையாக ஆட்சி அமைத்தது. பாஜக 4 மாநிலங்களில் வெற்றி பெற்றாலும், இன்னும் எந்த மாநிலத்திலும் ஆட்சி அமைக்கவில்லை. உத்தர பிரதேச முதல் மந்திரியாக யோகி ஆதித்யநாத் வரும் வெள்ளிக்கிழமை பதவியேற்க இருப்பதாக தகவல் வெளியானது. உத்தரகாண்ட், … Read more

2வது ஒருநாள் போட்டி : தென் ஆப்பிரிக்க அணிக்கு 195 ரன்களை இலக்காக நிர்ணயித்தது வங்காளதேசம்

ஜோஹன்ஸ்பேர்க், வங்காளதேச அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டியில்  வங்காளதேச அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தியது. இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி  இன்று ஜோஹன்ஸ்பேர்க்கில்  நடைபெற்று வருகிறது  இந்த போட்டியில் டாஸ் வென்ற வங்காளதேச அணி கேப்டன் தமீம் இக்பால் பேட்டிங்கை தேர்வு … Read more