அரசியல் கட்சிகள் அனைத்தும் மக்களிடையே பிளவை உருவாக்குகின்றன – குலாம் நபி ஆசாத்

புதுடெல்லி, அரசியல் கட்சிகள் பொதுமக்களிடையே பெரும் குழப்பத்தையும் பிளவையும் ஏற்படுத்தியுள்ளன என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்தார். 1990 காலகட்டத்தில், காஷ்மீர் பண்டிட்கள் கொல்லப்பட்ட விவகாரம் பாகிஸ்தானால் ஏவப்பட்ட பயங்கரவாதத்தால் தான் நிகழ்ந்தது என்று கூறினார். தற்போது நாடு முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ள ‘தி காஷ்மீர் பைல்ஸ்’ திரைப்பட விவகாரத்தை குறிப்பிட்டு அவர் இந்த கருத்துக்களை முன்வைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது, அரசியல் கட்சிகள் மதம், சாதி மற்றும் பிற விஷயங்களின் … Read more

தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான 2-ஒரு நாள் போட்டி; டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங் தேர்வு

ஜோஹன்ஸ்பேர்க், வங்காளதேச அணி தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒரு நாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில் சிறப்பாக விளையாடிய வங்காள தேச அணி 38 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணியை வீழ்த்தியது. இந்த நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது ஒருநாள் போட்டி  இன்று ஜோஹன்ஸ்பேர்க்கில்  நடைபெறுகிறது. இந்திய நேரப்படி போட்டி 1.30 மணிக்கு தொடங்குகிறது. … Read more

கொரோனா குறித்த 3 தவறான தகவல்கள் – உலக சுகாதார மையம் எச்சரிக்கை

ஜெனீவா, உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா பாதிப்பு குறைந்து வந்த நிலையில் சீனா, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் தற்போது கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்தியா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில் கொரோனா பரவல் குறைந்துள்ளதையடுத்து, கொரோனா கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டு வருகிறது.  இந்த நிலையில், கொரோனா தொற்று குறித்து மக்களிடையே தவறான தகவல்கள் பரவி வருவதாக உலக சுகாதார மையம் எச்சரித்துள்ளது. இது குறித்து உலக சுகாதார மையத்தின் கொரோனா தடுப்பு தொழில்நுட்ப தலைமை … Read more

உத்தரகாண்ட் சட்டசபையில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் நாளை பதவியேற்பு..!

டேராடூன்,  நடந்து முடிந்த உத்தரகாண்ட் சட்டசபை தேர்தலில் பா.ஜ.க அபார வெற்றி பெற்று ஆட்சியைத்தக்க வைத்தது. மொத்தம் உள்ள 70 இடங்களில் அந்தக் கட்சி 47 இடங்களை பிடித்தது. ஆனாலும் அந்த மாநில முதல்-மந்திரி புஷ்கர் சிங் தாமி (வயது 46) காதிமா தொகுதியில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இதனால் புதிய முதல்-மந்திரி பதவி யாருக்கு என்ற கேள்வி எழுந்துள்ளது. புதிய முதல்-மந்திரி பதவிக்கு, தேர்தலில் தோல்வியடைந்த புஷ்கர் சிங் தாமி பெயர்தான் பலமாக அடிபடுகிறது. மற்றபடி, … Read more

பெண்கள் உலகக்கோப்பை : நியூசிலாந்து அணியை வீழ்த்தி இங்கிலாந்து திரில் வெற்றி

ஆக்லாந்து, பெண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியானது நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 19 ஆவது லீக் போட்டியில் நியூசிலாந்து- இங்கிலாந்து பெண்கள் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து மகளிர் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.  அந்த அணியில் அதிகபட்சமாக மேடி கிரீன் 52 ரன்கள் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மற்ற வீராங்கனைகள் யாரும் சோபிக்காத நிலையில் இறுதியில் அந்த … Read more

உக்ரைனில் ஆபத்து விளைவிக்கும் உயிரியல் பரிசோதனைக்கு அமெரிக்கா உறுதுணை…? ரஷியா திடுக்கிடும் குற்றச்சாட்டு

நியூயார்க், நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்நாடு மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24ந்தேதி படையெடுப்பில் ஈடுபட்டது.  இது போரல்ல, ராணுவ நடவடிக்கை என ரஷிய அதிபர் புதின் கூறினார்.  உக்ரைனின் ராணுவ உட்கட்டமைப்பு மீதே தாக்குதல் நடைபெறுகிறது என ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் கூறியது.  உக்ரைனின் நாசிச நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டு வருகிறோம் என்றும் ரஷியா தெரிவித்தது. எனினும், தொடர்ந்து 3 வாரத்திற்கும் கூடுதலாக நீடித்து வரும் இந்த போரில், குடிமக்களில் 600க்கும் … Read more

ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக ஜெய்ஷாவின் பதவிக்காலம் நீட்டிப்பு

கொழும்பு, இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான்  உள்பட  24 நாடுகளின் கிரிக்கெட் வாரியங்கள் ஆசிய கிரிக்கெட் கவுன்சிலில் அங்கம் வகிக்கின்றன. இந்த கவுன்சிலின் தலைவராக கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் செயலாளர் ஜெய் ஷா நியமிக்கப்பட்டார்.  இந்த நிலையில், இன்று ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் ஆண்டு பொதுக்குழு கூட்டம் இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைவராக ஜெய்ஷாவின் பதவிக்காலம் 2024- ஆம் … Read more

தாய்நாட்டை காக்க ரஷியாவுக்கு எதிராக போரிட முன்வந்த 98 வயது “பாட்டி”

கீவ், நேட்டோவில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த பிப்ரவரி 24ந்தேதி அந்நாடு மீது ரஷியா படையெடுத்தது.  உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கை என ரஷிய அதிபர் புதின் கூறினார்.  உக்ரைனின் ராணுவ உட்கட்டமைப்பு மீதே தாக்குதல் நடைபெறுகிறது என ரஷிய பாதுகாப்பு அமைச்சகம் கூறியது. உக்ரைன் மீது ரஷியா தொடுத்து வரும் போரானது தொடர்ந்து 24வது நாளாக நீடித்து வருகிறது.  இந்த போரில், குடிமக்களில் 600 பேர் வரை உயிரிழந்து உள்ளனர்.  ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்து … Read more

சிறு தொழில்களை பாதுகாத்திட டிஜிட்டல் வர்த்தகத்தில் திறந்தவெளி கட்டமைப்பு வேண்டும்; பியூஷ் கோயல்

புதுடெல்லி, டிஜிட்டல் வர்த்தகத்துக்கான திறந்தவெளி கட்டமைப்பு(நெட்வொர்க்) மூலம் மின்னணு வர்த்தகத்தை(இ-காமர்ஸ்) ஜனநாயகப்படுத்தலாம் என்று மத்திய வர்த்தகம், தொழில் துறை, நுகர்வோர், உணவு மற்றும் பொது விநியோகம் மற்றும் ஜவுளித்துறை மந்திரி பியூஷ் கோயல் தெரிவித்தார். இதன்மூலம் சிறு, குறு தொழில்களுக்கு சம வாய்ப்பு அளித்து சிறு வணிகத்தை பாதுகாக்க இது உதவும். மேலும், சிறு தொழில்களை பாதுகாக்க இது வழி செய்யும் என்றார்.  பிலானியில் உள்ள பிர்லா தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் கழகம் ஏற்பாடு  செய்திருந்த 5-ஆவது … Read more

பெண்கள் உலகக்கோப்பை; பரபரப்பான போட்டியில் இந்திய அணி போராடி தோல்வி..!

ஆக்லாந்து, பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆக்லாந்தில் நடைபெறும் 18-வது லீக் ஆட்டத்தில் 6 முறை சாம்பியனான ஆஸ்திரேலிய அணியுடன் இந்திய அணி மோதி வருகிறது. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி இந்தியாவிற்கு எதிராக பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கிய ஸ்மிருதி மந்தனா மற்றும் ஸஃபாலி வெர்மா தலா 10 மற்றும் 12 ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். தொடர்ந்து களமிறங்கிய யாஷிகா … Read more