இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருக்கு 20 ஆண்டுகள் சிறை – லண்டன் கோர்ட் தீர்ப்பு

லண்டன், கடந்த 2020 மே 1 ஆம் தேதி இங்கிலாந்து தலைநகர் லண்டனில் உள்ள அப்மினிஸ்டர் பகுதியில், ஒரு வீட்டில் 40 வயது ஆண் மற்றும் 11 வயது சிறுவன் இருவரும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டனர். போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்ற போது, அந்த நபரின் தலையில் கத்திக் குத்துக் காயங்களும், சிறுவனின் தோள் பகுதியில் துப்பாக்கி குண்டு பாய்ந்து இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.  அவர்களும் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் … Read more

மும்பை எல்.ஐ.சி. கட்டிடத்தில் பயங்கர தீ

மும்பை,  மும்பை எல்.ஐ.சி. கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ஆவணங்கள், பொருட்கள் எரிந்து நாசமாகின.  எல்.ஐ.சி. கட்டிடத்தில் தீ மும்பை சாந்தாகுருஸ் மேற்கு எஸ்.வி. ரோடு பகுதியில் 2 மாடியில் ‘ஜீவன் சேவா பில்டிங்’ என்ற எல்.ஐ.சி. கட்டிடம் உள்ளது. இதில் எல்.ஐ.சி. கிளை அலுவலகம் மற்றும் எஸ்.எஸ்.எஸ். டிவிஷனல் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இன்று காலை 6.40 மணியளவில் கட்டிடத்தின் 2-வது மாடியில் திடீரென தீப்பிடித்தது. தகவல் அறிந்து தீயணைப்பு துறையினர் 5 தீயணைப்பு … Read more

ஐபிஎல்: லக்னோவிற்கு எதிராக டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சு தேர்வு

மும்பை, 15-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டித்தொடர் விறு விறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சனிக்கிழமையான இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. அதன்படி இன்று இரண்டாவதாக நடைபெறும் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.  அதன்படி லக்னோ அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.  லக்னோ அணி 10 போட்டிகளில் விளையாடி 7 வெற்றி, 3 தோல்வியுடன் புள்ளிப்பட்டியலில் இரண்டாவது … Read more

பருவகால மாற்றம் எதிரொலி; 2022ம் ஆண்டின் தொடக்கம் 5வது அதிக வெப்பம் நிறைந்த ஆண்டாக பதிவு

நியூயார்க், நாசாவின் செயற்கைக்கோள் எடுத்த ஓராண்டின் புள்ளிவிவரங்கள்,  பூமி கணிக்கமுடியாத அளவில் வெப்பமடைந்து வருவதை காட்டுகிறது.   புவி வெப்பமயமாதல் என்ற செயல், கடந்த 20 ஆண்டுகளில் மூன்று மடங்கு அதிகரித்திருப்பதாகவும், தற்போது மிக மோசமான அளவில் இருப்பதாகவும் அதில் கூறப்பட்டு உள்ளது. 2021ம் ஆண்டு மார்ச் முதல் 2022ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரையிலான ஓராண்டு காலத்தில், செயற்கைக்கோள் தரவுகளின்படி, நாசா கண்டுபிடித்திருப்பது என்னவென்றால், பூமியின் ஒட்டுமொத்த அமைப்பிலும், கூடுதலாக பல ஆற்றல்கள் சூழ்ந்து கொண்டிருப்பது காண … Read more

முதுகலை நீட் தேர்வு ஒத்திவைப்பு என்ற தகவல் போலியானது: தேசிய தேர்வு வாரியம் விளக்கம்

புதுடெல்லி, முதுகலை நீட் தேர்வு மே 21 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், தேர்வானது ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றும், ஜூலை 9 ஆம் தேதி நடைபெறும் என்றும், தேசிய தேர்வு வாரியம் தகவல் தெரிவித்துள்ளதாக சமூக வலைதளத்தில் போலியான தகவல் பரவியது.  இந்த தகவலை தேசிய தேர்வு வாரியம் மறுத்துள்ளது. தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்று இணையத்தில் பரவும் தகவல் போலியானது என்று கூறிய தேசிய தேர்வு வாரியம், திட்டமிட்டபடி தேர்வு மே 21 ஆம் தேதி … Read more

"அடடா இவ்ளோ நாள் இந்தியாவுல இருந்துட்டு இத எப்படி மிஸ் பண்ணேன்" – வைரலாகும் கம்மின்ஸ் டுவீட்

மும்பை, ஆஸ்திரேலியாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் பேட் கம்மின்ஸ். இவர் தற்போது ஐபிஎல்-லில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது இவர் சமூக வலைதளமான டுவீட்டரில் பகிர்ந்துள்ள பதிவு ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர், பாவ் பஜ்ஜியை ருசித்து மகிழ்ந்த அனுபவத்தை பகிர்ந்து உள்ளார்.  இது தொடர்பாக டுவிட்டரில் அவர் கூறும்போது, கடந்த 11 வருடங்களாக இந்தியாவிற்குத் தான் வந்து செல்கிறேன். ஆனால் பாவ் பஜ்ஜியை சாப்பிடாமல் எப்படித் தவறவிட்டேன் என தெரியவில்லை … Read more

பொது இடங்களில் பெண்கள் பர்தா கட்டாயம் அணிய வேண்டும்: தலீபான்கள் அறிவிப்பு

காபூல் , ஆப்கானிஸ்தானில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலீபான்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். தலீபான்கள் ஆட்சி அமைந்ததுமே அங்கு மிகக் கடுமையான பழமைவாத சட்டங்கள் பின்பற்றப்படலாம் என்று அந்நாட்டு மக்கள் மத்தியிலும் மனித உரிமை ஆர்வலர்களும்  கவலை தெரிவித்தனர். எனினும், தங்களின் முந்தைய ஆட்சி காலத்தை போன்று(1996- 2001) கடுமையான ஆட்சி இருக்காது என தலீபான்கள் உறுதி அளித்தனர்.  ஆனால்,  பெண்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகளை தலீபான்கள் விதித்து வருகின்றனர். அந்த வகையில், இன்று தலீபான்கள் வெளியிட்டுள்ள … Read more

தாயிடம் மன்னிப்பு கோரும் ராணுவ அதிகாரியாக பள்ளி மாணவர் எழுதிய கற்பனை குறிப்புகள்…

புதுடெல்லி, டெல்லி அரசு பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருபவர் மனு குலாதி.  இவர் தனது மாணவ, மாணவியர்களிடம் வீட்டு பாடம் ஒன்றை எழுதி வரும்படி கூறியுள்ளார்.  இதன்படி, அவர்கள் ஏதேனும் ஒரு சூழ்நிலையை கற்பனை செய்து கொண்டு, அதற்கு வருத்தம் தெரிவித்து குறிப்பு எழுத வேண்டும். ஒவ்வொருவரும் ஒரு வருத்த குறிப்பினை எழுதி வந்துள்ளனர்.  அதில் ஒரு மாணவர் எழுதிய விசயங்கள் குலாதியின் மனம் தொடும் வகையில் அமைந்தன.  அதனை அவர் வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். குலாதி வெளியிட்ட … Read more

ஐபிஎல் கிரிக்கெட்: ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் பேட்டிங் தேர்வு

மும்பை, 15-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டித்தொடர் விறு விறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. சனிக்கிழமையான இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதலாவது ஆட்டத்தில்  ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதுகின்றன.  இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் மயங்க் அகர்வால் முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். இதன்படி ராஜஸ்தான் ராயல்ஸ் அணி முதலில் பந்து வீசி வருகிறது.  இரு அணிகளுக்குமே அடுத்த சுற்று வாய்ப்பை வலுப்படுத்த இது முக்கியமான … Read more

#லைவ் அப்டேட்ஸ் உக்ரைனின் கடலோர நகரம் ஒடேசா மீது ரஷியா ஏவுகணை தாக்குதல்

கீவ்,  உக்ரைன் மீதான ரஷிய போர், உலகளவில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த போர் தொடர்பாக இன்று (மே 7) இதுவரை நடந்த முக்கிய நிகழ்வுகள் பின்வறுமாறு:-   6:00 Pm தெற்கு உக்ரேனில் உள்ள துறைமுக நகரமான ஒடேசா மீது இன்று(சனிக்கிழமை) ரஷியா ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக, அந்த பிராந்திய நிர்வாகத்தின் செய்தித் தொடர்பாளர் செர்ஹி பிராட்சுக் தெரிவித்துள்ளார். முன்னதாக ஒடேசா நகரைச் சுற்றியுள்ள பகுதிகளில் 4 ஏவுகணைகள் தாக்கியதாகவும், அதனைத் தொடர்ந்து ஒடேசா நகரின் … Read more