#லைவ் அப்டேட்ஸ் : உக்ரைன் மீதான ரஷியா போர் 23-வது நாள்; லிவிவ் நகர் மீது ஏவுகணை தாக்குதல்

மார்ச் 18, 19:00 PM கீவ் நகரில் 60 பொதுமக்கள் உள்பட  222 -பேர் உயிரிழப்பு நேட்டோ அமைப்பில் உக்ரைன் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்த ரஷியா, அந்நாடு மீது கடந்த மாதம் 20 ஆம் தேதி தாக்குதல் நடத்தியது. உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் 23- வது நாளாக இன்றும் நீடித்து வருகிறது. உக்ரைனின் பல நகரங்களை சுற்றி வளைத்துள்ள ரஷியா, தலைநகர் கீவ் நகரையும் கைப்பற்ற போராடி வருகிறது.  உக்ரைன் படைகள் வலுவாக எதிர்ப்பதால்,  இரு … Read more

கர்நாடக அரசு பள்ளிகளில் பகவத் கீதை பாடத்தை அறிமுகப்படுத்த திட்டம் – மாநில கல்வித்துறை மந்திரி தகவல்

பெங்களூரு, கர்நாடக மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பகவத் கீதை குறித்த பாடங்களை கற்பிக்க திட்டமிட்டுள்ளதாக கர்நாடக மாநில கல்வித்துறை மந்திரி பி.சி.நாகேஷ் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளிகளில் நீதி வகுப்புகள் நடத்தும் நடைமுறை சில காலமாக பல்வேறு காரணங்களால் நிறுத்தப்பட்டுவிட்டது என்றும் அவற்றை மீண்டும் தொடங்க பெற்றோர்கள் பலர் விரும்புவதாகவும் தெரிவித்தார்.  மாணவர்களுக்கு நற்சிந்தனைகளை வழங்கும் வகையில் பகவத் கீதை, ராமாயணம், மகாபாரதம் ஆகியவற்றை பாடத்திட்டத்தில் வைப்பது குறித்து கல்வி நிபுணர்களுடன் … Read more

பெண்கள் உலகக்கோப்பை : வங்காளதேச அணிக்கு 141 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ்

மவுண்ட் மவுங்காணு, பெண்கள் உலகக்கோப்பை போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் மவுண்ட் மவுங்காணுவில் இன்று நடைபெற்று வரும் 17-ஆவது லீக் போட்டியில் வங்காளதேச அணியும், வெஸ்ட் இண்டீஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணையிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷெமைன் கேம்பல் 53 ரன்கள் அடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மற்ற … Read more

தென்கொரியாவில் தொடரும் துயரம்; 4.07 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு

சியோல், உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா பாதிப்புகளில் இருந்து 2 ஆண்டுகளுக்கும் கூடுதலாக மக்கள் இன்னும் முழுமையாக மீளவில்லை.  இந்நிலையில், தென்கொரியாவில் ஒமைக்ரான் வகை கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.  கடந்த 2 வாரத்திற்கு முன், ஒமைக்ரான் அலையானது, அந்நாட்டில் நாளொன்றுக்கு 1.4 லட்சம் முதல் 2.7 லட்சம் வரை பதிவாக கூடும் என கணிக்கப்பட்டு இருந்தது. எனினும், நாள்தோறும் பதிவாகும் எண்ணிக்கை, இதனை கடந்து அதிர்ச்சி ஏற்படுத்தி வருகிறது.  இதுபற்றி கொரிய நோய் கட்டுப்பாடு … Read more

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கைவிடக்கூடாது: மாநிலங்களுக்கு மத்திய அரசு எச்சரிக்கை

புதுடெல்லி, தெற்கு ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கைவிடக்கூடாது என்று மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.   இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன், மாநில அரசுகளுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், “ பரிசோதனை, தடம் கண்டறிதல், சிகிச்சை அளித்தல், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றுதல், தடுப்பூசி போட்டுக்கொள்ளுதல் ஆகிய 5 தடுப்பு நடவடிக்கை தொடர்ந்து தீவிரமாக பின்பற்ற வேண்டும். … Read more

பெண்கள் உலகக்கோப்பை : வங்காளதேச அணியை வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் திரில் வெற்றி

மவுண்ட் மவுங்காணு, பெண்கள் உலகக்கோப்பை போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் மவுண்ட் மவுங்காணுவில் இன்று நடைபெற்று வரும் 17-ஆவது லீக் போட்டியில் வங்காளதேச அணியும், வெஸ்ட் இண்டீஸ் அணியும் பலப்பரீட்சை நடத்தின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி நிர்ணையிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ஷெமைன் கேம்பல் 53 ரன்கள் அடித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். மற்ற … Read more

சிறுவயதில் அவமானப்படுத்திய ஆசிரியர்…! 101 முறை கத்தியால் குத்தி 30 ஆண்டுகளுக்கு பிறகு பழிதீர்த்த மாணவர்..!!

பிருசெல்ஸ், பெல்ஜியத்தை சேர்ந்த 37 வயது நபர் குண்டெர் உவென்ட்ஸ். இவர் 1990-களில் தனக்கு 7-வயதாக இருந்த போது  மரியா வெர்லிண்டேன் என்ற ஆசிரியரிடம் மாணவனாக இருந்துள்ளார். அப்போது மரியா, குண்டெர் உவென்ட்சை அடித்து அவமானப்படுத்தி உள்ளார். இந்த சம்பவத்தால் கோபம் அடைந்த குண்டெர் உவென்ட்ஸ் 30 வருடங்களுக்கு பிறகு அதற்கு பழிதீர்த்து உள்ளார். தனக்கு அவமானம் ஏற்படுத்திய  ஆசிரியர் மரியா வெர்லிண்டேனை (59) கடந்த ஆண்டு கண்டுபிடித்து 101 முறை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இந்த … Read more

'தி காஷ்மீர் பைல்ஸ்' திரைப்பட இயக்குநருக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு

புதுடெல்லி, காஷ்மீரில் 1990-ஆம் ஆண்டுகளில் இந்து மதத்தினரை குறிவைத்து பயங்கரவாத தாக்குதல்கள் நடத்தப்பட்டது. இந்து மதத்தை சேர்ந்த பண்டிட்கள் காஷ்மீரை விட்டு வெளியேற வேண்டும் என பயங்கரவாதிகள் பகிரங்க எச்சரிக்கை விடுத்தனர். அதேபோல், காஷ்மீரில் இஸ்லாமிய மத வழிபாட்டு தளத்தில் அமைக்கப்பட்டிருந்த ஒலிப்பெருக்கு மூலமாகவும் எச்சரிக்கை விடுக்கபட்டது. இந்த பயங்கரவாத தாக்குதல்கள், எச்சரிக்கையை தொடர்ந்து காஷ்மீரில் இருந்து லட்சக்கணக்கான பண்டிட்கள் தங்கள் வாழ்விடங்களை விட்டு வெளியேறி நாட்டின் பல்வேறு இடங்களில் அகதிகளாக தஞ்சமடைந்தனர்.    இதற்கிடையில், காஷ்மீரில் … Read more

விராட் கோலி இனி எதிரணிக்கு அபாயகரமான வீரராக இருப்பார்’: மேக்ஸ்வெல் சொல்கிறார்

புது டெல்லி,  15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 26-ந்தேதி மும்பையில் தொடங்குகிறது. இதில் பங்கேற்கும் 10 அணிகளில் ஒன்றான பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் தனது முதல் லீக் ஆட்டத்தில் 27-ந்தேதி பஞ்சாப் கிங்சை சந்திக்கிறது. பெங்களூரு அணியின் கேப்டனாக நீண்ட காலமாக பணியாற்றிய விராட் கோலி, ஒரு முறை கூட கோப்பையை வெல்லாத விரக்தியில் பொறுப்பில் இருந்து விலகினார். ஒரு வீரராக அந்த அணியில் நீடிக்கிறார். பெங்களூரு அணியின் புதிய கேப்டனாக தென்ஆப்பிரிக்காவின் … Read more

"நீங்கள் ஒரு டிக்டாக் நட்சத்திரம்"- உக்ரைன் அதிபரை பாராட்டிய மாணவி

கீவ், உக்ரைன் நாடு நேட்டோவில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த பிப்ரவரி 24ந்தேதி அந்நாடு மீது ரஷியா படையெடுத்தது. இந்த போர் இன்று 23-வது நாளாக தொடர்கிறது. இதனால், உக்ரைன் – ரஷிய படைகள் இடையே தீவிர சண்டை தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்தபோதும் அவை தோல்வியிலேயே முடிகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்பாக ரஷிய படைகள் நடத்திய தாக்குதலில் கத்யா விளாசென்கோ என்ற 16 வயதான உக்ரைன் மாணவி … Read more