ஐசிசி-இன் புதிய விதிமுறைகளுக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் வரவேற்பு

மும்பை, இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின். இவர் ஒருசில முறை மன்கட் முறையில் எதிர்முனையில் நின்றுகொண்டிருக்கும் பேட்ஸ்மேனை ரன் அவுட் செய்ததால், பல முன்னாள் வீரர்களும், கிரிக்கெட் விமர்ச்கர்களும் இவரை சாடினர்.  இந்த நிலையில்,மன்கட் முறையில் ‘ரன்-அவுட்’ செய்தால் அதை அதிகாரபூர்வ ரன்-அவுட்டாக எடுத்து கொள்ளும் வகையில் சர்வதேச கிரிக்கெட் விதிமுறையில் திருத்தம் செய்யப்பட்டுள்லது. இதனை இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆர்.அஸ்வின் வரவேற்றுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,  ‘ என் சக பந்து … Read more

வங்காளதேசத்தில் இந்து கோவிலை சூறையாடிய 200 பேர்; பலர் காயம்

டாக்கா, வங்காளதேசத்தின் டாக்கா நகரில் லால் மோகன் சஹா தெருவில், ராதாகந்தா என்ற இந்து கோவில் ஒன்று உள்ளது.  இந்த கோவிலில் பலர் சாமி தரிசனம் செய்து வந்துள்ளனர்.  இந்த நிலையில், திடீரென கோவிலுக்குள் புகுந்த 200 பேர் கொண்ட கும்பல் கோவில் மீது தாக்குதல் நடத்தியது. இந்த சம்பவத்தில் கோவில் சேதமடைந்தது.  கோவிலில் இருந்த பலர் தாக்குதலில் காயம் அடைந்து உள்ளனர்.  இதன்பின்பு கோவிலில் இருந்த பொருட்களை அள்ளி கொண்டு அந்த கும்பல் தப்பியோடி விட்டது.  … Read more

45 நாட்களில் போர் விமான துறைக்கு 7 அடுக்கு கட்டிடம்; டி.ஆர்.டி.ஓ. சாதனை

பெங்களூரு, கர்நாடகாவின் பெங்களூரு நகரில், எதிரிநாட்டு விமானங்களை தாக்கி அழிக்க கூடிய நவீன நடுத்தர வகையை சேர்ந்த போர் விமானங்களை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்கான உட்கட்டமைப்பு உருவாக்கப்பட்டு வந்தது.  7 அடுக்குகளை கொண்ட இந்த கட்டிடத்தினை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) நாற்பத்தி ஐந்தே நாட்களில் கட்டி முடித்து சாதனை படைத்து உள்ளது. இந்த கட்டிடம், போர் விமானங்களுக்கான மின்னணு சாதனங்களை மேம்படுத்துவதற்கான பணிகளை மேற்கொள்ள பயன்படுத்தப்பட உள்ளது.  இதனை மத்திய பாதுகாப்பு மந்திரி ராஜ்நாத் … Read more

பெண்கள் உலகக்கோப்பை : நியூசிலாந்து அணியை வீழ்த்தியது தென் ஆப்பிரிக்க அணி

ஹாமில்டன், நியூசிலாந்தில் நடந்து வரும் பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்று ஹாமில்டனில் நடைபெற்ற 16-வது லீக் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க,  நியூசிலாந்து அணியை எதிர்கொண்டது.  முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 47.5 ஓவரில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 228 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் சோபி டிவெய்ன் அதிரடியாக விளையாடி 93 ரன்கள் குவித்தார். இதையடுத்து 229 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி களமிறங்கியது. … Read more

தனது நாட்டைக் காக்க 12 குழந்தைகளுக்குத் தாயான உக்ரைன் பெண ஆயுதம் ஏந்தி வீர மரணம்!

கீவ், உக்ரைன் நாட்டின்  மருத்துவரான 48 வயதான ஓல்கா செமிடியானோவா ,2014 முதல் இராணுவத்தில் பணியாற்றி வந்தார். அவர் மார்ச் 3 அன்று உக்ரைனின் தெற்கில் உள்ள டொனெட்ஸ்க் நகரில் நடந்த துப்பாக்கிச் சண்டையின் போது கொல்லப்பட்டார். அவர் கடுமையான துப்பாக்கிச் சண்டையின் போது வயிற்றில் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளார். அவருடன் போரில் ஈடுப்பட்ட சக வீரர்களும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும் போரினால் இன்னும் சடலம் மீட்கப்படாததால், துயரமடைந்த குடும்பத்தினர் அவரை அடக்கம் செய்ய காத்திருக்கின்றனர். அவர் கொல்லப்பட்ட … Read more

நடப்பு ஆண்டில் 10 வீரர்கள் தற்கொலை; சி.ஆர்.பி.எப். டி.ஜி. வேதனை

ஜம்மு, ஜம்மு மற்றும் காஷ்மீருக்கான மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.) டி.ஜி. செய்தியாளர்களை சந்தித்து இன்று பேசினார்.  அவர் கூறும்போது, நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தலில், 41 வி.ஐ.பி.க்களுக்கு சி.ஆர்.பி.எப். படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.  தேர்தல் முடிந்த பின்பு, 27 பேரது பாதுகாப்பு திரும்ப பெறப்பட்டு உள்ளது. காஷ்மீரில் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்பு கல்வீச்சு சம்பவங்கள் ஏறக்குறைய பூஜ்ய எண்ணிக்கையில் உள்ளன.  வெளிநாட்டு பயங்கரவாதிகளின் ஊடுருவல் மற்றும் தாக்குதல்களின் … Read more

இண்டியன்வெல்ஸ் டென்னிஸ் : காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார் ரபேல் நடால்

இண்டியன்வெல்ஸ், பி.என்.பி.பரிபாஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி அமெரிக்காவின் இண்டியன்வெல்சில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதிக்கு முந்தய சுற்று இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் ஸ்பெயின் அணியின் நட்சத்திர டென்னிஸ் வீரரும் உலகின் முன்னாள் நம்பர் 1 வீரருமான ரபேல் நடால் அமெரிக்காவின் ரெய்லி ஓபெல்காவை எதிர்கொண்டார். ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய நடால்  7-6 (3), 7-6 (5) என்ற கணக்கில் ரெய்லியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறினார். நாளை நடைபெறும் … Read more

ரஷிய படையினரால் கடத்தப்பட்ட உக்ரைன் நகர மேயர் விடுவிப்பு!

கீவ், உக்ரைன் மீது ரஷியாவின் போர் தாக்குதல் இன்று 22-வது நாளாக நீடிக்கிறது.  ரஷிய படைகள் முக்கிய நகரங்களான தலைநகர் கிவ், கார்கிவ், மரியுபோலில் ஏவுகணை, வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருகிறது. அதே நேரத்தில் ரஷியாவிற்கு உக்ரைனும் ஈடுகொடுத்து வருகிறது.  இந்நிலையில் உக்ரைனின் மெலிட்டோ போல் நகர மேயரான இவான் பெடோரோவை கடந்த வாரம் வெள்ளிகிழமை அன்று ரஷிய படையினர் கடத்தி சென்றனர். அவர் ரஷிய படைக்கு ஒத்துழைப்பு அளிக்க மறுத்ததால் கடத்தப்பட்டதாக உக்ரைன் … Read more

டெல்லி வன்முறையில் கொல்லப்பட்ட உளவுத்துறை அதிகாரியின் சகோதரருக்கு அரசுப்பணி

புதுடெல்லி, குடியுரிமை திருத்தச்சட்ட ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் இடையே தலைநகர் டெல்லியில் 2020 பிப்ரவரி 23-ம் தேதி வன்முறை வெடித்தது. இந்த வன்முறையில் 53 பேர் உயிரிழந்தனர்.   இந்த வன்முறையில் உளவுத்துறையில் பணியாற்றி வந்த காவலர் அங்கித் சர்மா கொடூரமாக கொலை செய்யப்பட்டார். கொல்லப்பட்ட அங்கித் சர்மாவின் உடல் சந்த் பாக் என்ற பகுதியில் உள்ள ஒரு குப்பை மேட்டில் இருந்து கண்டெடுக்கப்பட்டது. அவர் பல முறை கத்தியால் குத்தி கொடூரமாக கொலை செய்யப்பட்டிருந்தார். இந்த கொலையில் … Read more

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடர் : ஜோ ரூட் சதம் அடித்து அசத்தல்

பிரிட்ஜ்டவுன், இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிவடைந்தது. இந்த நிலையில் 2-வது டெஸ்ட் போட்டி பிரிட்ஜ்டவுனில் இந்திய நேரப்படி நேற்று இரவு தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட் பேட்டிங்கை தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக களமிறங்கிய கிராவ்லி ரன் ஏதும் எடுக்காத நிலையில் நடையை கட்டினார். … Read more