“தி காஷ்மீர் பைல்ஸ்” படம் பார்க்க போலீசாருக்கு விடுமுறை அளித்த மாநிலம்..!!

போபால்,  விவேக் ரஞ்சன் அக்னிஹோத்ரி இயக்கத்தில் அவரின் மனைவி பல்லவி ஜோஷி மற்றும் அனுபம் கெர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் “தி காஷ்மீர் ஃபைல்ஸ்”.  நேற்று முன்தினம் இப்படம் திரையரங்குகளில் வெளியானது. தற்போது இந்த படம் விமர்சக ரீதியாக பாராட்டுகளை பெற்று வருகிறது. 80களின் பிற்பகுதியிலும் 90களின் முற்பகுதியிலும் காஷ்மீர் கிளர்ச்சியின் போது காஷ்மீரிலிருந்து காஷ்மீரி பண்டிட்டுகள் வெளியேற்றப்பட்ட பின்னணியை கதை களமாக கொண்டு படம் வெளியாகி இருந்தது.  இதனைத்தொடர்ந்து காஷ்மீர் கிளர்ச்சியின் போது காஷ்மீரி … Read more

விராட் கோலியுடன் ‘செல்பி’: மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த 4 பேர் மீது வழக்கு பதிவு..!!

பெங்களூரு, இந்தியா-இலங்கை இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் நேற்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது, மூன்று ரசிகர்கள் பாதுகாப்பை மீறி விளையாட்டு மைதானத்திற்குள் நுழைந்தனர். இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடிய போது, ஆறாவது ஓவரில் முகமது ஷமியின் பந்து வீச்சில் குசல் மெண்டிஸ் காயமடைந்து சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார். அப்போது ஸ்லிப் பகுதியில் கோலி  நின்று கொண்டிருந்தார். அதை பார்த்த மூன்று ரசிகர்கள், தங்களது நட்சத்திர வீரரை அருகில் பார்க்கும் வாய்ப்பை உணர்ந்து, பாதுகாப்பு வேலியை உடைத்து … Read more

கீவ் புறநகர் பகுதிகளில் ரஷிய படைகள் தொடர்ந்து தாக்குதல்

லிவிவ், உக்ரைன் போர் எப்போது முடிவுக்கு வரும் என உலக நாடுகள் கவலையுடன் எதிர்பார்த்துக்கொண்டிக்கும் அதே வேளையில் ரஷியா படைகள் நாளுக்கு நாள் தாக்குதலின் வேகத்தை தீவிரப்படுத்தி வருகின்றன. இதனால் உக்ரைன் நகரங்கள் பற்றி எரிந்து வருகின்றன. உக்ரைனில் பாதுகாப்பான இடம் என்ற ஒன்று இல்லவே இல்லை என்பதை உறுதிப்படுத்தும் விதமாக அந்த நாட்டின் அனைத்து நகரங்கள் மீதும் ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதல்களை தொடுத்து வருகின்றன. வான்வழியாக ரஷிய போர் விமானங்கள் குண்டுமழை பொழிந்து வரும் … Read more

மேகதாதுவில் அணை கட்டுவதை மத்திய அரசு தடுக்க வேண்டும் – அதிமுக எம்.பி. தம்பிதுரை

புதுடெல்லி, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு இன்று தொடங்கியது. கொரோனா பரவல் குறைந்துவிட்ட நிலையில், இரு அவைகளும் காலை 11 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றன. ஏப்ரல் 8ம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.  மாநிலங்களையில் இன்று   மேகதாது அணை விவகாரத்தை எழுப்பிய  அதிமுக எம்.பி தம்பிதுரை கூறியதாவது: மேகதாதுவில் அணை கட்டுவது தமிழக விவசாயிகளை பாதிக்கும். அண்டை மாநிலங்களின் ஒப்புதல் இன்றி அணை கட்ட எப்படி நிதி ஒதுக்க முடியும்? … Read more

பிளேயர்ஸ் சாம்பியன்ஷிப் கோல்ப் தொடர்; இந்தியாவின் அனிர்பன் லஹிரி முன்னிலை!

புளோரிடா, அமெரிக்காவில நடைபெற்று வரும் பிளேயர்ஸ் சாம்பியன்ஷிப் கோல்ப் தொடரில் இந்திய வீரர் அனிர்பன் லஹிரி முன்னிலை பெற்றார். அவர் அமெரிக்காவின் டாம் ஹோக் மற்றும் வரால்ட் வார்னர் ஜோடியை விட குறைவான புள்ளிகள் பெற்றார். கோல்ப் விளையாட்டை பொறுத்தவரை குறைவான புள்ளிகள் எடுப்பவரே வெற்றியாளர் ஆவார். புல்வெளி மைதானத்தில் நீண்ட தூரத்தில் இருந்து பந்தை அடிக்கும் போது ஒரே ஷாட்டில் பந்து இலக்குக்குரிய குழியில் விழுந்து விட்டால் குறைவான புள்ளி வழங்கப்படும். பந்தை குழியில் செலுத்துவதற்கு … Read more

சீனாவில் மீண்டும் வேகமெடுக்கும் கொரோனா: பல்வேறு நகரங்களில் ஊரடங்கு அமல்..!!

பீஜிங்,  2 ஆண்டுகளுக்கும் மேலாக உலகை ஆட்டிப்படைத்து கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் முதன் முதலில் தோன்றியது சீனாவில்தான். அங்குள்ள உகான் நகரில் உருவான இந்த வைரஸ் உலகெங்கிலம் பரவியுள்ளது. இந்த கொடிய வைரஸ் ஒவ்வொரு அலையாக உலக நாடுகளை கதி கலங்க வைத்துள்ளது. ஆனால் சீனா கொரோனாவின் முதல் அலையின்போதே நாடு தழுவிய முழு ஊரடங்கு, பயணக் கட்டுப்பாடு, அதிகளவு பரிசோதனை உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்தி நோய் தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்தது. ஆனால் இன்னமும் … Read more

மக்களவையில் பிரதமர் மோடிக்கு பாஜக எம்பிக்கள் உற்சாக வரவேற்பு..!

புதுடெல்லி, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் அமர்வு, கடந்த ஜனவரி 29-ந் தேதி தொடங்கியது. பிப்ரவரி 1-ந் தேதி, மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். பின்னர், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது விவாதம் நடந்தது. இதையடுத்து, பிப்ரவரி 11-ந் தேதியுடன் முதல் அமர்வு கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது.  தொடர்ந்து நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு இன்று தொடங்கியது. கொரோனா பரவல் குறைந்துவிட்ட நிலையில், இரு அவைகளும் காலை … Read more

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் : பாகிஸ்தானை வீழ்த்தியது வங்காளதேசம்!!

வெலிங்டன், பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற 12-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் – வங்காளதேசம் அணிகள் பலப்பரிட்சை நடத்தின. இப்போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த வங்காளதேச அணி 7 விக்கெட் இழப்பிற்கு 234 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக பர்கார் ஹூக் 71 ரன்களும், அந்த அணியின் கேப்டன் நிகர் சுல்தானா  46 ரன்களும், தொடக்க … Read more

ஆஸ்கார் நாயகன் வில்லியம் ஹர்ட் மரணம்..!

சென்னை, அமெரிக்காவை சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகர் வில்லியம் ஹர்ட். இவர் திரைப்படத்துறையில் அறிமுகமாவதற்க்கு முன்பு 1970 களில் பல மேடை நாடகங்களில் நடித்துள்ளார். 1980ம் ஆண்டு வெளியான ஆல்டர்டு இஸ்டேட்ஸ் என்ற படத்தின் மூலம் திரைபடத்துக்கு அறிமுகமானார்.  இவர் கிஸ் ஆப் த ஸ்பைடன் வுமன், டார்க் சிட்டி, பிராட்காஸ்ட் நியூஸ், பிளாக் விடோ, எ ஹிஸ்டரி ஆப் வயலன்ஸ் உள்பட பல படங்களில் நடித்து இருக்கிறார். மேலும் மார்வல் ஸ்டுடியோவின் பல படங்களிலும் நடித்துள்ளார். … Read more

கொரோனா இழப்பீடு பெற போலி ஆவணம் சமர்பிப்பு- சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் வேதனை!

புதுடெல்லி, கொரோனா இழப்பீடு பெறுவதற்கு போலி சான்றிதழ்கள் தரப்படுவதாக வரக்கூடிய தகவல் வருத்தம் அளிக்கிறது என்று சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் வருத்தம் தெரிவித்தனர். இந்த வழக்கு விசாரணையில் நீதிபதிகள் தெரிவித்ததாவது, நமது ஒழுக்கம் இவ்வளவு தூரம் தாழ்ந்து போகும் என நினைக்கவில்லை. கொரோனா இழப்பீடு பெற போலி ஆவணம் தருவது பற்றி விசாரிக்க உத்தரவிட வேண்டியது அவசியமாகிறது. கொரோனாவால் இறந்தோரின்  ஒவ்வொரு குடும்பத்துக்கும் ரூ.50 ஆயிரம் இழப்பீடு தர உத்தரவிட்டோம். ஆனால் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு குழந்தைக்கும் … Read more