பெங்களூரு டெஸ்ட்: பாதுகாப்பை மீறி கோலியுடன் செல்பி எடுத்த ரசிகர்

பெங்களூரு, இந்தியா-இலங்கை இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டத்தின் போது, மூன்று ரசிகர்கள் பாதுகாப்பை மீறி விளையாட்டு மைதானத்திற்குள் நுழைந்தனர். இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடிய போது ஆறாவது ஓவரில் முகமது ஷமியின் பந்து வீச்சில் குசல் மெண்டிஸ் காயமடைந்து சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார்.  அப்போது ஸ்லிப் பகுதியில் கோலி  நின்று கொண்டிருந்தார். அதை பார்த்த மூன்று ரசிகர்கள், தங்களது நட்சத்திர வீரரை அருகில் பார்க்கும் வாய்ப்பை உணர்ந்து, பாதுகாப்பு வேலியை உடைத்து மைதானத்திற்குள் … Read more

4-வது ‘டோஸ்’ கொரோனா தடுப்பூசியை செலுத்தத் தொடங்கிய பிரான்ஸ்..!!

பாரீஸ்,  உலகின் பெரும்பாலான நாடுகளில் கொரோனாவுக்கு எதிராக 2 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. அதே வேளையில், கொரோனா தொடர்ந்து உருமாற்றம் அடைந்து புதிய வகை வைரஸ்களாக பரவி வருவதால், பல நாடுகளில் 3-வது டோஸ் (பூஸ்டர் டோஸ்) தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இன்னும் சில நாடுகள் 2-வது பூஸ்டர் அதாவது, 4-வது டோஸ் தடுப்பூசியில் கவனம் செலுத்தி வருகின்றன. இஸ்ரேலில் ஏற்கனவே 4-வது டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், பிரான்சில் இன்று முதல் … Read more

மாநிலங்கள் கையிருப்பில் 17.42 கோடி டோஸ் தடுப்பூசிகள் – மத்திய சுகாதாரத்துறை

புதுடெல்லி, மாநிலங்கள் கையிருப்பில் 17.42 கோடி டோஸ் தடுப்பூசிகள் மீதமுள்ளன என்று  மத்திய குடும்பநல மற்றும் சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.   இதுகுறித்து சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-  மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் கையிருப்பில் 17 கோடியே 42 லட்சத்து 45 ஆயிரத்து 896 டோஸ் தடுப்பூசிகள் இன்னும் பயன்படுத்தப்படாமல் மீதமுள்ளன. இதுவரை 182 கோடியே 65 லட்சத்து 14 ஆயிரத்து 930 டோஸ் தடுப்பூசிகள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. இவற்றை மத்திய … Read more

மகளிர் உலக கோப்பை : நியூசிலாந்தை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி வெற்றி

வெலிங்டன், 12-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) நியூசிலாந்தில் நடந்து வருகிறது. இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து – ஆஸ்திரேலியா அணிகள் மோதின  டாஸ் வென்ற நியூசிலாந்து  அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது அதன்படி முதலில் களமிறங்கிய ஆஸ்திரேலியா மகளிர்  அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 269 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணியில் அதிகபட்சமாக எல்லிஸ் பெர்ரி 68 ரன்கள் எடுத்தார். இதனை தொடர்ந்து 270 … Read more

தீவிரம் அடையும் ரஷியப் படைகள் தாக்குதல்..! பயத்தில் வெளியேறும் பொதுமக்கள்

கீவ்,  உக்ரைன் தலைநகரை சுற்றிவளைப்பதில் ரஷிய படைகள் தீவிரம் காட்டி வருகின்றன. மரியுபோல் நகரில் தாக்குதல்கள் நீடிக்கின்றன. 17 நாள் போரில் 1,300 வீரர்கள் பலியாகி உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் மீது வன்மம் கொண்டு ரஷியா தொடங்கி உள்ள போர் தொடர்ந்து தீவிரம் அடைந்து வருகிறது. நேற்று இந்த போர் 17-வது நாளை எட்டியது. இந்த போரினால் இதுவரை 25 லட்சம் மக்கள் அகதிகளாகி அண்டை நாடுகளான போலந்து, ருமேனியா, ஹங்கேரி, சுலோவாக்கியா ஆகியவற்றில் தஞ்சம் … Read more

அந்தமான் நிகோபார் தீவுகளில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவு

புதுடெல்லி, வங்கக்கடல் பகுதியில் அமைந்துள்ள அந்தமான் தீவுகளில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. காலை 8.58 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  அந்தமானின் போர்ட் பிளேர் நகரின் அருகே ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.1 ஆக பதிவாகியுள்ளதாகத் தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது. அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு வடக்கு-வடகிழக்கே 225 கிலோமீட்டர் தொலைவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து தேசிய புவியியல் மையம் தனது டுவிட்டரில், “ரிக்டர் அளவுகோலில் 4.1 … Read more

பிரீமியர் லீக் கால்பந்து : ரொனால்டோ ஹாட்ரிக் கோல் : மான்செஸ்டர் யுனைடெட் அணி வெற்றி

பிரீமியர் லீக் கால்பந்து  போட்டியில் நேற்று  நடைபெற்ற ஆட்டத்தில் மான்செஸ்டர் யுனைடெட் – டாட்டன்ஹாம் அணிகள்  மோதின. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில்   மான்செஸ்டர் அணி வீரர் ரொனால்டோ ஹாட்ரிக் கோல் அடித்து அசத்தினார். 12வது நிமிடத்தில் ,38வது நிமிடத்தில் ,81வது நிமிடத்தில் ஹாட்ரிக் கோல் அடித்து அடித்து அசத்தினார். இதற்கு பதிலடி கொடுக்க எதிரணி கடைசி வரை போராடினர் .35 வது நிமிடத்தில் .72 வது நிமிடத்தில்  2 கோல் மட்டும் டாட்டன்ஹாம் அடித்தது. இதனால்  3-2 என்ற … Read more

பண்டிகைக்காக பச்சை நிறத்தில் ஜொலிக்கும் சிகாகோ நதி..!

டவுன்டவுண், அமெரிக்காவின் இலினாய்ஸ் மாகாணத்தில் வருடாந்திர பண்டிகையை முன்னிட்டு சிகாகோ நதியை பச்சை நிறமாக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. அங்கு ஆண்டுதோறும் புனித பேட்ரிக் திருநாள் மார்ச் 17-ந்தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பண்டிகையின் போது மக்கள் அனைவரும் பச்சை நிற ஆடையணிந்து பங்கேற்பர். இதன் ஒரு பகுதியாக சிகாகோ நதியிலும் பச்சை நிற சாயம் கலக்கப்படும். 1962-ம் ஆண்டு முதல் நதிக்கு சாயம் பூசுவது நடைபெற்று வருகிறது. கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா பாதிப்பின் காரணமாக … Read more

காங்கிரஸ் நாடாளுமன்ற குழு கூட்டம் சோனியாகாந்தி இல்லத்தில் தொடங்கியது!

புதுடெல்லி, உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர், பஞ்சாப் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இது காங்கிரஸ் தொண்டர்கள் மட்டுமின்றி முன்னணி தலைவர்களுக்கும் பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அவர்கள் கட்சித்தலைமை மீது விமர்சனங்களை வீசத்தொடங்கி உள்ளனர். இந்த நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2-வது பாதி ஒரு மாத இடைவேளைக்குப்பின் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது.  பட்ஜெட் கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டிய விஷயங்கள் குறித்தும் காங்கிரஸ் எம்.பி.க்களின் … Read more

பெண்கள் புரோ ஆக்கி லீக்: பெனால்டி ஷூட்-அவுட்டில் இந்தியாவை வீழ்த்தியது ஜெர்மனி..!

புவனேஸ்வர், 9 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது புரோ ஆக்கி லீக் தொடர் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். இந்திய பெண்கள் அணி இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, ஒரு தோல்வி என்று 9 புள்ளிகளுடன் 3-வது இடம் வகிக்கிறது. இந்த நிலையில் புவனேஸ்வர் நகரில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் இந்தியா- ஜெர்மனி அணிகள் சந்தித்தன. வழக்கமான நேரத்தில் 1-1 … Read more