உக்ரைன் மீதான தாக்குதலை நிறுத்துங்கள் – போப் ஆண்டவர் வேண்டுகோள்

வாடிகன், உக்ரைன் மீதான தாக்குதல் தொடங்கி இன்றுடன் 18 நாள் ஆகிறது. இதுவரை நடந்த தாக்குதலில் ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்து விட்டதாக கூறப்பட்டது. மேலும் படைவீரர்கள் பலரும் பலியாகி உள்ளனர். இந்த போரை நிறுத்தவும், சமரச பேச்சில் ஈடுபடவும் ஐக்கிய நாட்டு சபை கோரிக்கை விடுத்தது. இதுபோல போப் ஆண்டவர் போரை நிறுத்த வேண்டுகோள் விடுத்தார். போப் பிரான்சிஸ் வேண்டுகோளை ரஷியா ஏற்கவில்லை. நேற்றும் உக்ரைன் மீது கடுமையான தாக்குதலை நடத்தியது. இதில் குழந்தைகள் உள்பட பலர் … Read more

இந்திய ராணுவ வீரரை சுட்டுக்கொன்ற பயங்கரவாதி அதிரடி கைது – காஷ்மீர் போலீசார் தகவல்!!

ஸ்ரீநகர், ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினர் மற்றும் காஷ்மீர் போலீசார் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காஷ்மீரின் குப்வாரா பகுதியில் பயங்கரவாதிகள் சிலர் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, பாதுகாப்பு படையினர், காஷ்மீர் போலீசாருடன் இணைந்து குப்வாரா என்ற பகுதியில் பாதுகாப்பு படையினர் தேடுதல் வேட்டை நடத்தியபோது, அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த தாக்குதலையடுத்து அப்பகுதியை சுற்றிவளைத்த பாதுகாப்பு படையினரும் பதிலடி … Read more

ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன்: ஒலிம்பிக் சாம்பியனை சாய்த்தார் லக்‌ஷயா சென்..!

முல்கேம் அன்டெர் ரூ, ஜெர்மன் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள முல்கேம் அன்டெர் ரூ நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய இளம் வீரர் லக்‌ஷயா சென் மற்றும் ஒலிம்பிக் சாம்பியனான விக்டர் ஆக்சல்சென் (டென்மார்க்) மோதினர். இந்த ஆட்டத்தில் லக்‌ஷயா சென் 21-13, 12-21, 22-20 என்ற செட் கணக்கில் ஆக்சல்சென்னை வீழ்த்தி அவருக்கு அதிர்ச்சி அளித்தார். அதுவும் கடைசி செட்டில் 16-19 என்ற … Read more

ஈராக்கில் உள்ள அமெரிக்க தூதரகத்தை நோக்கி 12 ஏவுகணைகள் வீசி தாக்குதல் – அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள்

இர்பில்,  ஈராக்கின் வடக்கு நகரமான இர்பிலில் உள்ள அமெரிக்க தூதரகத்தை நோக்கி இன்று 12 ஏவுகணைகள் வீசப்பட்டதாக ஈராக் பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த ஏவுகணைகள் அண்டை நாடான ஈரானில் இருந்து இர்பிலில் நகரை நோக்கி ஏவப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.  ஈராக் மற்றும் அமெரிக்காவில் உள்ள அதிகாரிகள் சேதம் குறித்து வெவ்வேறு கருத்துகளை தெரிவித்தநிலையில், மற்றொரு அமெரிக்க அதிகாரி ஒருவர், எந்த ஒரு அமெரிக்க அரசாங்க கட்டிடங்களில், சேதம் மற்றும் உயிரிழப்புகள் … Read more

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று வருடாந்திர தெப்போற்சவம்…!

திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர தெப்போற்சவம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்கி 17-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. ஸ்ரீவாரி புஷ்கரணியில் தினமும் இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரை தெப்பம் பவனி வருகிறது.  முதல் நாள் ராமச்சந்திரமூர்த்தி, சீதா, லட்சுமணர், ஆஞ்சநேயர் தெப்பத்தில் எழுந்தருளி 3 சுற்றுகள் பவனி வருகின்றனர். 2-வது நாள் கிருஷ்ணசாமி, ருக்மணி தாயார் எழுந்தருளி 3 சுற்றுகள் பவனி வருகின்றனர். 3-வது நாள் மலையப்பசாமி, ஸ்ரீதேவி, பூதேவி … Read more

ஐ.எஸ்.எல் கால்பந்து அரைஇறுதி: ஐதராபாத் எப்.சி அணி வெற்றி..!

கோவா, 8-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் கோவாவில் நடந்து வருகிறது. லீக் சுற்று முடிவில் ஜாம்ஷெட்பூர் (13 வெற்றி, 4 டிரா, 3 தோல்வி), ஐதராபாத் (11 வெற்றி, 5 டிரா, 4 தோல்வி), ஏ.டி.கே.மோகன் பகான் (10 வெற்றி, 7 டிரா, 3 தோல்வி), கேரளா பிளாஸ்டர்ஸ் (9 வெற்றி, 7 தோல்வி, 4 டிரா) ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களை பிடித்து அரைஇறுதிக்கு தகுதி பெற்றன.  அரைஇறுதியில் … Read more

சீனாவில் வேகமெடுக்கும் தினசரி கொரோனா பாதிப்பு..! தொற்று எண்ணிக்கை 3,400 ஆக பதிவு

பீஜிங், உலகில் முதன் முதலாக சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் கொரோனாவுடன் போராடிக் கொண்டிருந்த நிலையில், சீனா கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்தது. இந்த சூழலில் சீனாவில் மீண்டும் கொரோனா வேகமெடுக்கத் தொடங்கி உள்ளது. கடந்த சில நாட்களாக அங்கு தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. சீனாவின் உள்ளூர் நகரங்களிலும், வெளிநாடுகளில் இருந்து வந்த பயணிகள் மூலமாகவும் அங்கு கொரோனா … Read more

தேசிய பங்கு சந்தையை ஆட்டிப்படைத்த மர்ம சாமியார் யார்…? உண்மையை போட்டுடைத்த சிபிஐ

புதுடெல்லி, தேசிய பங்கு சந்தையின் நிர்வாக இயக்குனராக கடந்த 2013ம் ஆண்டு முதல் 2016ம் ஆண்டு வரை சித்ரா ராமகிருஷ்ணன் பணியாற்றி வந்தார். அப்போது பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக, இந்திய பங்குகள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) குற்றம் சாட்டியது. முன் அனுபவம் இல்லாத ஆனந்த் சுப்பிரமணியம் என்பரை, தலைமை வியூக அதிகாரியாக நியமித்ததுடன், பிற சலுகைகள் வழங்கியதாக குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டது.மர்மமான இமயமலை சாமியாரின் பேச்சை கேட்டுக் கொண்டு பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக செபி  கூறியது. இந்த … Read more

கிரிக்கெட்: ஸ்மிருதி மந்தனா, ஹர்மன்பீரித் கவுர் சதம் அடித்து அசத்தல்..!! – இந்திய அணி 317 ரன்கள் குவிப்பு

ஹாமில்டன்,  12-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) நியூசிலாந்தில் நடந்து வருகிறது. அதில் வெஸ்ட்இண்டீஸ் அணி தனது முந்தைய ஆட்டங்களில் நியூசிலாந்து, இங்கிலாந்தை வீழ்த்தி வலுவான நிலையில் இருந்தது. இந்திய அணி முதல் ஆட்டத்தில் பாகிஸ்தானை பந்தாடியது. அடுத்த ஆட்டத்தில் நியூசிலாந்திடம் ‘சரண்’ அடைந்தது. இந்நிலையில் ஹாமில்டனில் இன்று நடைபெற்று வரும் லீக் ஆட்டத்தில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி, ஸ்டாபானி டெய்லர் தலைமையிலான வெஸ்ட்இண்டீசுடன் மோதியது.  அதில் டாஸ் வென்ற … Read more

ஆபாசத்தை தூண்டும்…? குதிரை வால் சடைக்கு தடை…!

டோக்கியோ, ஜப்பானில் உள்ள பள்ளிகள், மாணவிகள் பள்ளிக்கு குதிரை வால்  (Ponytails) வகை சிகையலங்காரத்தில் வருவதற்கு தடை விதித்துள்ளது. குதிரை வால் வகை சிகையலங்காரம் அணிந்து வரும்போது மாணவிகளின் கழுத்து பகுதி மாணவர்களுக்கு பாலியல் உணர்ச்சியை தூண்டும் என்பதால் இந்த தடை விதித்திருப்பதாக தெரிவித்துள்ளது. இது போன்ற வினோதமான விதிகள் ஏற்படுத்தப்படுவது ஜப்பானில் இது முதல் முறை இல்லையென்றாலும் இந்த தடைக்கு அங்கு பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது.  இதுகுறித்து கூறிய நடுநிலைப் பள்ளி ஒன்றின் முன்னாள் ஆசிரியர் … Read more