வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான உலகக்கோப்பை போட்டி; ஹர்மன்பிரீத் கவுர் சதம் விளாசல்!!

ஹாமில்டன், 12-வது பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) நியூசிலாந்தில் நடந்து வருகிறது.ஹாமில்டனில் இன்று நடைபெற்று வரும்  லீக் ஆட்டத்தில் மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி, ஸ்டாபானி டெய்லர் தலைமையிலான வெஸ்ட்இண்டீசுடன் விளையாடி வருகிறது. இப்போட்டியில்  டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய இந்திய அணியின் தொடக்கவீராங்கனை ஸ்மிரிதி மந்தனா அபாரமாக ஆடி சதமடித்தார். அவர் 123 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.  அவருக்கு … Read more

உக்ரைனில் ரஷிய போர் காரணமாக கொரானா தொற்று அதிகரிக்கலாம்.! – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

ஜெனிவா, உக்ரைன் மீது ரஷியா இன்று 17-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷிய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன. அதேவேளை, தென்கிழக்கு நகரமான மரியுபோல் நகரிலும் ரஷியா வான்வெளி தாக்குதல் நடத்தி வருகிறது.  ரஷியா நடத்தி வரும் தாக்குதலுக்கு உக்ரைன் தரப்பும் பதிலடி கொடுத்து வருகிறது. ரஷியாவுடனான போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் ஆயுதம் மற்றும் நிதி உதவிகளை வழங்கி வருகிறது. ரஷியா … Read more

கேரளா; வீட்டு வாசலில் ரேஷன் பொருட்கள் விநியோகம்..!

திருவனந்தபுரம்,  கேரள சட்டப்பேரவையில் 2022-23 ஆம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அம்மாநில நிதித்துறை மந்திரி கே.என்.பாலகோபால் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.  அதில், உக்ரைனில் இருந்து திரும்பிய மாணவர்களுக்கு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.  மேலும், அனைத்து தொகுதிகளிலும் நடமாடும் ரேஷன் கடைகள் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.  அதன்படி, பட்டியலின சமூகங்கள் உள்ளிட்ட விளிம்புநிலை பிரிவினர் வசிக்கும் பகுதிகளில் நடமாடும் விற்பனை நிலையங்கள் மூலம் நேரடியாக வீட்டு வாசலில் ரேஷன் பொருட்கள் விநியோகிக்கப்படும் … Read more

சிறை கைதிகளுக்கு மல்யுத்த பயிற்சியளிக்கும் ஒலிம்பிக் வீரர் சுஷில் குமார்!!

புதுடெல்லி,  2012 ஆம் ஆண்டு நடந்த லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளி பதக்கம் வென்றவர் இந்தியாவின் சுஷில் குமார். கடந்த ஆண்டு மே மாதம் சொத்து தகராறு காரணமாக, இவர் தனது நண்பர்களுடன்  சேர்ந்து,  முன்னாள் ஜூனியர் தேசிய மல்யுத்த சாம்பியன் சாகர் தங்கர் மற்றும் அவரது நண்பர்களை, சத்ரசல் மைதானத்தில் வைத்து  தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த சாகர் தங்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட மல்யுத்த வீரர் சுஷில் … Read more

உக்ரைன் மீது பெலாரஸ் தாக்குதலை தொடருமா..? புதினுடன் பெலாரஸ் அதிபர் ஆலோசனை!

மாஸ்கோ, ரஷிய அதிபர் புதின் மற்றும் அண்டை நாடான பெலாரஸ் அதிபர் அலெக்சாண்டர் லுகாஷென்கோ ஆகிய இருவரும் நேற்று சந்தித்து ஆலோசனையில் ஈடுபட்டனர். இந்த நிலையில், ஐரோப்பாவின் கடைசி சர்வாதிகாரி என அறியப்படும் அலெக்சாண்டர் லுகாஷென்கோவை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் சந்தித்துள்ள நிலையில், உக்ரைன் மீது பெலாரஸ் படையெடுக்க வாய்ப்புள்ளதாக அச்சம் எழுந்துள்ளது. தற்போது பெலாரஸ் நாட்டு  போர் விமானங்கள் உக்ரைன் எல்லையில் தாக்குதலை முன்னெடுத்துள்ளன.ரஷியாவின் திட்டத்தின்படியே பெலாரஸ் போர் விமானங்களை அனுப்பி எல்லையில் தாக்குதல் … Read more

ஆந்திரா அமைச்சரவை மாற்றம்: அமைச்சர் ஆகிறாரா நடிகை ரோஜா..?

ஆந்திரப் பிரதேசம், ஆந்திர மாநில சட்டப்பேரவையில் முதல் அமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி முன்னிலையில் மாநில நிதி அமைச்சர் புக்கன ராஜேந்திரநாத் ரெட்டி ரூ 2.56 லட்சம் கோடியில் 2022-23-ம் ஆண்டுக்கான வருவாய் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது அவர் திருக்குறளை மேற்கோள் காட்டி பட்ஜெட்டை துவக்கினார்.  பட்ஜெட் உரைக்குப் பின்னர் முதல் அமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி பேசுகையில், இந்த பட்ஜெட்டால் அனைத்து தரப்பினரும் வளம் பெறுவார்கள். விரைவில் அமைச்சரவை மாற்றம் இருக்கும். இதில் அமைச்சர் … Read more

பெண்கள் உலகக்கோப்பை; கேப்டனாக அதிக போட்டிகளில் விளையாடி மிதாலி ராஜ் உலக சாதனை!

ஹாமில்டன், ஹாமில்டனில் இன்று நடைபெற்று வரும் உலகக்கோப்பை லீக் ஆட்டத்தில், மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி, ஸ்டாபானி டெய்லர் தலைமையிலான வெஸ்ட்இண்டீசுடன் விளையாடி வருகிறது. இப்போட்டியில்  தலைமை தாங்கியதன் மூலம் உலக கோப்பை போட்டியில் அதிக ஆட்டங்களில் கேப்டனாக இருந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் பெலின்டா கிளார்க்கின் (23 ஆட்டங்கள்) சாதனையை மிதாலி ராஜ் முறியடித்தார்.  உலக கோப்பை தொடரில், இதுவரை மிதாலி ராஜ்  24 ஆட்டங்களில் கேப்டனாக இந்திய அணியை வழிநடத்தி உள்ளார் … Read more

உக்ரைனில் இருந்து இதுவரை 25 லட்சம் அகதிகள் வெளியேற்றம்..!

ஜெனீவா, உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர், அந்த நாட்டையே புரட்டி போட்டு விட்டது. அந்த நாட்டின் குடிமக்கள், தங்கள் உயிர்களைக் காப்பாற்றிக்கொள்வதற்காக நாட்டை விட்டு வெளியேறுகிற, அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் அடைகிற அவல நிலை ஏற்பட்டுள்ளது.  இந்த நிலையில், பிப்ரவரி 24ல் தொடங்கப்பட்ட ரஷியாவின் ஆக்கிரமிப்பிற்குப் பிறகு உக்ரைனை விட்டு  இதுவரை 25 லட்சம் பேர் அகதிகளாக வெளியேறி உள்ளனர். இது இரண்டாவது உலகப்போருக்கு பின் ஐரோப்பா கண்ட மிக விரைவான வெளியேற்றம் என்று … Read more

ஆந்திராவில் கள்ளச்சாராயம் குடித்த 15 தொழிலாளர்கள் பலி..!

திருப்பதி, ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள ஜங்கரெட்டிகுடம் நகரில் கடந்த 2 நாட்களாக கூலி வேலை செய்து வரும் தொழிலாளர்களுக்கு திடீரென வாந்தி, வயிற்றுப் போக்கு மற்றும் வயிற்று வலி போன்ற அறிகுறிகளுடன் 25-க்கும் மேற்பட்டோர் அங்குள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றனர். இந்நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி கடந்த 2 நாட்களில் அடுத்தடுத்து 15 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவத்திற்கு … Read more

பெண்கள் புரோ ஆக்கி லீக்: இந்தியா-ஜெர்மனி அணிகள் இன்று மோதல்

புவனேஸ்வர், 9 அணிகள் பங்கேற்றுள்ள 3-வது புரோ ஆக்கி லீக் தொடர் பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் தலா 2 முறை மோத வேண்டும். இந்திய பெண்கள் அணி இதுவரை 4 ஆட்டங்களில் விளையாடி 3 வெற்றி, ஒரு தோல்வி என்று 9 புள்ளிகளுடன் 3-வது இடம் வகிக்கிறது. இந்த நிலையில் தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள இந்திய பெண்கள் அணி அடுத்து 4-ம் நிலை அணியான ஜெர்மனியுடன் 2 … Read more