ஐ.பி.எல்: பெங்களூரு அணியின் புதிய கேப்டன் டு பிளெஸ்சிஸ்?

15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 26-ந் தேதி மும்பையில் தொடங்குகிறது. இந்த போட்டிகள் மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி மே 29 ஆம் தேதி முடிவடைகிறது. மார்ச் 26 ஆம் தேதி நடைபெறும் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி , கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது.  இந்நிலையில் பெங்களூரு அணி இன்னும் புதிய கேப்டனை அறிவிக்கவில்லை. விராட் கோலி கேப்டன் பதவியிலிருந்து விலகியுள்ள நிலையில் ,  யார் … Read more

‘பெண்கள் அதிகமாக அரசியலில் ஈடுபட வேண்டும்’ – அபுதாபி மாநாட்டில் ஹிலாரி கிளிண்டன் பேச்சு!

அபுதாபி,  அபுதாபியில் நடைபெற்ற பெண்கள் உச்சி மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய அமெரிக்க முன்னாள் வெளியுறவு செயலாளர் ஹிலாரி கிளிண்டன் ‘பெண்கள் முன்னேற்றத்திற்கு அவர்கள் அதிகமாக அரசியலில் ஈடுபட வேண்டும்’ என கூறியுள்ளார். வாழ்நாள் சாதனையாளர் விருது சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு போர்ப்ஸ் 30/50 என்ற தலைப்பில் பெண்கள் உச்சி மாநாடு அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் சர்வதேச அளவில் பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிந்த பெண்கள் கலந்துகொண்டு கருத்தரங்கங்களில் பேசி வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் அமெரிக்க … Read more

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 3,993 ஆக குறைந்தது

புதுடெல்லி, இந்தியாவில் கொரோனா 3-வது அலை முடிவை நெருங்கிக்கொண்டிருக்கிறது.  இன்று  காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் இந்த எண்ணிக்கை மேலும் சரிந்தது. இந்தியாவில் ஒரே நாளில் 3,993 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 4,29,67,315 லிருது 4,29,71,308 ஆக உயர்ந்துள்ளது.  ஒரே நாளில் 8,055 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.  இந்தியாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,23,09 லிருந்து 4,24,06,150 ஆக உயர்ந்துள்ளது.  நாடு முழுவதும் … Read more

பைஜூஸ் நிறுவனத்தின் சீருடை ஸ்பான்சர் மேலும் ஒரு ஆண்டு நீட்டிப்பு

கொல்கத்தா, இந்திய கிரிக்கெட் அணியின் சீருடை ஸ்பான்சராக பைஜூஸ் நிறுவனம் 2019-ம் ஆண்டு முதல் இருந்து வருகிறது. இலங்கைக்கு எதிரான போட்டி தொடருடன் பைஜூஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் முடிவதாக இருந்தது.  இந்த நிலையில் பைஜூஸ் நிறுவனத்தின் சீருடை ஸ்பான்சர் ஒப்பந்தம் மேலும் ஒரு ஆண்டு நீட்டிக்கப்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டு பயணிகளுக்கு பி.சி.ஆர். பரிசோதனை கிடையாது என அறிவிப்பு

அபுதாபி, ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில், அங்கு கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அபுதாபிக்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு பி.சி.ஆர். பரிசோதனை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து எதிகாத் விமான நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது;- “அபுதாபியில் அரசு சார்பில் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில், வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளை ஊக்கப்படுத்தும் விதமாக சில கூடுதல் தளர்வுகளும் அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை அபுதாபி சர்வதேச … Read more

கேரளா: வாட்ஸ் அப் மூலம் போதைப்பொருள் விற்பனை செய்த கணவன்-மனைவி

திருவனந்தபுரம், கேரள மாநிலம் கன்னூர் மாவட்டத்தில் தம்பதி போதைப்பொருள் விற்பனை செய்து வருவதாகவும், பெங்களூருவில் இருந்து கன்னூருக்கு சொகுசு பஸ்சில் கொரியர் நிறுவனத்திற்கு பார்சல் மூலம் போதைப்பொருள் அனுப்பி வைக்கப்படுவதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, கன்னூர் மாவட்ட போலீசார் நேற்று சம்மந்தப்பட்ட கொரியர் நிறுவனத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, கொரியர் நிறுவனத்திற்கு பார்சலில் வந்த போதைப்பொருளை வாங்க வந்த தம்பதியை கையும் களவுமாக பிடித்தனர். பிடிபட்ட முகபிலங்காடு பகுதியை சேர்ந்த அப்சல் மற்றும் … Read more

சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டி: காயம் காரணமாக சுனில் சேத்ரி விலகல்

புதுடெல்லி, இந்திய கால்பந்து அணி வருகிற 21-ந் தேதி பக்ரைன் தலைநகர் மனாமா செல்கிறது. அங்கு வருகிற 23 மற்றும் 26-ந் தேதிகளில் நடைபெறும் சர்வதேச நட்புறவு கால்பந்து போட்டியில் இந்திய அணி, முறையே பக்ரைன், பெலாரஸ் அணிகளுடன் மோதுகிறது. இந்த இரண்டு ஆட்டங்களும் இந்திய நேரப்படி இரவு 9.30 மணிக்கு தொடங்குகிறது.  உக்ரைன் மீது போர் தொடுத்து இருக்கும் ரஷியாவுக்கு ஆதரவாக பெலாரஸ் இருப்பதால் அந்த அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி பங்கேற்குமா? என்பதில் … Read more

துபாய்: பள்ளி பஸ்சை திருடி விற்ற இருவருக்கு தலா ஒரு ஆண்டு ஜெயில்

துபாய்,  துபாயில் உள்ள தனியார் நிறுவனம் அருகே பள்ளிக்கூட மாணவ, மாணவிகளை அழைத்து செல்லும் பஸ் ஒன்று நீண்ட நாட்களாக இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டிருந்தது. இந்த நிலையில் அந்த பஸ் திடீரென்று காணாமல் போனது. இதனால் அதிர்ச்சியடைந்த உரிமையாளர் இது குறித்து போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அந்த பகுதியில் உள்ள குடோனில் வேலை பார்த்து வந்த 2 பேர் பஸ்சை திருடி சார்ஜாவில் உள்ள கார் நிறுவனத்தில் … Read more

நள்ளிரவில் தீப்பற்றி எரிந்த வீடு – பச்சிளம் குழந்தை உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் உடல் கருகி பலி..!

திருவனந்தபுரம், கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம் தளவபுரம் வர்கலா நகரை சேர்ந்தவர் பிரதாபன் (62). இவர் அப்பகுதியில் உள்ள புத்தன் சந்தையில் காய்கறி கடை நடத்தி வருகிறார். பிரதாபன் தனது மனைவி செர்லி (54), மூத்த மகன் அகில் (26), மருமகள் அபிராமி (24) மற்றும் பெயர் வைக்காத 8 மாத பெண் குழந்தை ஆகியோருடன் வர்கலா நகரில் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு சொந்தமான வீட்டில் இரண்டாவது மாடியில் வசித்து வருகிறார்கள்.  இந்நிலையில், பிரதாபன் வீட்டில் … Read more

ஜெர்மன் ஓபன் பேட்மிண்டன்: சிந்து, ஸ்ரீகாந்த் பங்கேற்பு!

பெர்லின், பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஒலிம்பிக் போட்டியில் 2 முறை பதக்கம் வென்றவரான இந்தியாவின் முன்னணி வீராங்கனை பி.வி.சிந்து கலந்து கொள்கிறார். அவர் தனது முதலாவது சுற்று ஆட்டத்தில் உலக தரவரிசையில் 11-வது இடத்தில் உள்ள பூசனன் ஓங்பாம்ருங்பானை (தாய்லாந்து) சந்திக்கிறார்.  இதேபோல் காயம் காரணமாக பார்மில் இல்லாமல் தவித்து வரும் இந்திய வீராங்கனை சாய்னா நேவால் தனது முதல் சுற்று ஆட்டத்தில் சிங்கப்பூரை சேர்ந்த யோ ஜியா மின்னை எதிர்கொள்கிறார். ஆண்கள் ஒற்றையர் பிரிவில் உலக … Read more