சீனா சென்ற புதிய இந்திய தூதருக்கு கட்டாய தனிமை

பீஜிங், சீனாவுக்கான புதிய இந்திய தூதராக பிரதீப் குமார் ராவத் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் பொறுப்பை ஏற்பதற்காக சீனாவுக்கு நேற்று சென்றடைந்தார். அங்கு கொரோனா கால கட்டுப்பாடுகள் அமலில் உள்ளதால், நெறிமுறைப்படி அவர் கட்டாய தனிமையில் வைக்கப்பட்டுள்ளார். இதை அங்குள்ள இந்திய தூதரகம், டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளது. அவர் ஷாங்காய் நகரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. ஆனால் இதுபற்றி அதிகாரப்பூர்வ தகவல்கள் இல்லை. சீனாவுக்கான இந்திய தூதராக இருந்த விக்ரம் மிஸ்ரி, தேசிய பாதுகாப்பு துணை ஆலோசகராக நியமிக்கப்பட்டதைத் … Read more

மராட்டிய மந்திரி நவாப் மாலிக் மீதான வழக்கு; அமலாக்கத்துறை காவல் 7-ந் தேதி வரை நீட்டிப்பு

மும்பை, தாவூத் இப்ராகிம் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு எதிராக தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) சமீபத்தில் வழக்குப்பதிவு செய்து இருந்தது. இந்த வழக்கை அடிப்படையாக வைத்து அமலாக்கத்துறை சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கை பதிவு செய்தது. இதில் மராட்டிய மந்திரி நவாப் மாலிக் தாவூத் இப்ராகிம் தொடர்புடையவர்களிடம் நிலம் வாங்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் மந்திரி நவாப் மாலிக்கை கடந்த 23-ந் தேதி கைது செய்து விசாரித்து வந்தது. இதில் விசாரணை காலம் முடிந்து … Read more

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: உலக குரூப் பிளே-ஆப் சுற்றில் டென்மார்க்-இந்தியா இன்று மோதல்

புதுடெல்லி, டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் உலக குரூப் பிளே-ஆப் சுற்றில் இந்தியா-டென்மார்க் அணிகள் மோதும் ஆட்டம் டெல்லியில் இன்றும், நாளையும் நடக்கிறது.  இன்று காலை 11 மணிக்கு நடைபெறும் ஒற்றையர் பிரிவின் முதலாவது ஆட்டத்தில் இந்திய வீரர் ராம்குமார், கிறிஸ்டியன் சிக்ஸ்காட்டையும், மற்றொரு ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீரர் யுகி பாம்ப்ரி, மைக்கேல் டார்பேகாட்டையும் சந்திக்கின்றனர். சனிக்கிழமை நடைபெறும் இரட்டையர் பிரிவின் ஆட்டத்தில் திவ்ஜி சரண் மற்றும் ரோகன் போபன்னா ஜோடி பிரெட்ரிக் நீல்சன் மற்றும் … Read more

ரஷியா படையெடுக்கலாம் என அச்சம்: ஐரோப்பிய யூனியனில் சேர விண்ணப்பித்த முன்னாள் சோவியத் நாடுகள்

முனிச்,   உக்ரைன் மீது 9-வது நாளாக ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. இரு தரப்பு மோதலில் பலர் உயிரிழந்துள்ளனர்.  இதற்கிடையில், உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவ் நோக்கி வரும் ரஷிய படைகளை உக்ரைன் பாதுகாப்பு படையினர் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், ரஷிய படைகள் தங்கள் தாக்குதலை தொடர்ந்து தீவிரப்படுத்தி … Read more

உக்ரைன் போர்: மேலும் 210 இந்தியர்கள் டெல்லி வந்தடைந்தனர்

புதுடெல்லி, ரஷியா-உக்ரைன் நாடுகளுக்கு இடையே நடைபெறும் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்கள் விரைவாக நாடு திரும்பி வருகின்றனர். ‘ஆபரேஷன் கங்கா’ திட்டத்தின் கீழ் மாணவர்கள் உள்பட இந்தியர்களை மீட்கும் நடவடிக்கையை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் ருமேனியா தலைநகர் புக்காரெஸ்டில் இருந்து இந்திய விமானப்படையின் சி-17 ரக போர் விமானம் மூலம் மேலும் 210 இந்தியர்கள் டெல்லி வந்தடைந்தனர். டெல்லி வந்தடைந்த இந்தியர்களை பாதுகாப்பு துறை இணை அதிகாரி அஜய் … Read more

சென்னையில் 3 நாட்கள் மாநில அளவிலான கைப்பந்து போட்டி..!

சென்னை, நெல்லை நண்பர்கள் கிளப் மற்றும் டாக்டர் சிவந்தி கிளப் சார்பில் ஏ.கே.சித்திரை பாண்டியன் நினைவு முதலாவது மாநில கைப்பந்து போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டி எழும்பூர் மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் 6-ந் தேதி வரை 3 நாட்கள் நடக்கிறது.  ஆண்கள் பிரிவில் கல்லூரி அணிகளான எஸ்.ஆர்.எம்., எஸ்.டி.சி. (பொள்ளாச்சி), செயின்ட் ஜோசப்ஸ் என்ஜினீயரிங், டி.ஜி.வைஷ்ணவா, சத்யபாமா, லயோலா ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன.  பெண்கள் பிரிவில் டாக்டர் சிவந்தி கிளப், எஸ்.ஆர்.எம்., … Read more

உக்ரைனில் நிலைமை மேலும் மோசமடையலாம் – புதினிடம் பேசிய பிரான்ஸ் அதிபர் அதிர்ச்சி தகவல்

பாரிஸ், உக்ரைன் மீது 9-வது நாளாக ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் படைகளும் பதிலடி கொடுத்து வருகின்றன. இரு தரப்பு மோதலில் பலர் உயிரிழந்துள்ளனர்.  இதற்கிடையில், உக்ரைன் மீது ரஷியா நடத்தி வரும் தாக்குதலுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. உக்ரைன் தலைநகர் கீவ் நோக்கி வரும் ரஷிய படைகளை உக்ரைன் பாதுகாப்பு படையினர் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், ரஷிய படைகள் தங்கள் தாக்குதலை தொடர்ந்து தீவிரப்படுத்தி வருகின்றன. … Read more

பேச்சுவார்த்தை, ராஜாங்க ரீதியிலான பாதைக்கு திரும்ப வேண்டும் – குவாட் மாநாட்டில் மோடி வலியுறுத்தல்

புதுடெல்லி, இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய 4 நாடுகள் கொண்ட வலுவான கூட்டமைப்பு ‘குவாட்’ ஆகும்.   இந்நிலையில் குவாட் தலைவர்களின் கூட்டம் நேற்று காணொலி வாயிலாக நடைபெற்றது. இதில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், ஜப்பான் பிரதமர் யோஷின்டே சுகா ஆகியோர் கலந்து கொண்டனர். அந்த கூட்டத்தில் உக்ரைன் விவகாரம் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. அப்போது, இந்திய பிரதமர் மோடி, பேச்சுவார்த்தை மற்றும் ராஜாங்க ரீதியிலான … Read more

இந்தியா-இலங்கை முதலாவது டெஸ்ட் இன்று தொடக்கம்

மொகாலி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இலங்கை கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 0-3 என்ற கணக்கில் பறிகொடுத்தது. அடுத்து 2 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்குகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்கு உட்பட்டது என்பதால் இந்த போட்டி முக்கியத்துவம் பெறுகிறது. விராட் கோலி கேப்டன் பதவியில் இருந்து ஒதுங்கிய பிறகு ரோகித் சர்மா … Read more

ரஷியாவில் உலக வங்கியின் அனைத்து திட்டங்களும் நிறுத்தப்படுவதாக அறிவிப்பு

வாஷிங்டன், உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷியா மீதான மேற்கத்திய நாடுகளின் பிடி இறுகி வருகிறது. பல நாடுகளும் பொருளாதார தடைகளை விதித்துள்ளன. குறிப்பாக அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள் ரஷிய விமானங்கள் தங்கள் வான்வெளியில் பறக்க தடை விதித்துள்ளன. இந்த நிலையில் ரஷியாவிலும், அதன் கூட்டாளியான பெலாரஸ் நாட்டிலும் அனைத்து திட்டங்களையும் உலக வங்கி அதிரடியாக நிறுத்தி உள்ளது. இதையொட்டி உலக வங்கி வெளியிட்ட அறிக்கையில், “உக்ரைன் மீதான ரஷிய படையெடுப்பு மற்றும் உக்ரைன் மக்களுக்கு … Read more