பேட்மிண்டன் போட்டிகளில் பங்கேற்க ரஷிய வீரர்களுக்கு தடை; உலக பேட்மிண்டன் கூட்டமைப்பு அறிவிப்பு

மலேசியா, உக்ரைன் நாடு மீது ரஷியா கடந்த 24-ந்தேதி போர் தொடுத்தது. முதல் நாளில் உக்ரைனின் முக்கிய நகரங்கள் மீது ஏவுகணை வீச்சு மற்றும் விமானங்கள் மூலம் குண்டுகளை வீசி தாக்கினர். ரஷியா இன்று 6-வது நாளாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது.   இதனால் ரஷியா மீது பல்வேறு நாடுகள் பொருளாதார தடையை விதித்துள்ளது. ரஷிய அணி கால்பந்து தொடர்களில் பங்கேற்க பிபா கூட்டமைப்பு ஏற்கனவே தடை செய்துள்ளது. இந்த நிலையில் பேட்மிண்டன் போட்டிகளில் பங்கேற்க ரஷியா … Read more

ரஷிய விமானப்படை தாக்குதல்! கார்கிவ் நகரில் பொதுமக்கள் 8 பேர் பலி!!

கீவ், ரஷியா இன்று 6-வது நாளாக தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் கீவ் நகரில்  உள்ள உளவுத்துறை அலுவலகங்களுக்கு அருகேயுள்ள மக்கள் வெளியேறுமாறு ரஷிய ராணுவம் அறிவுறுத்தியுள்ளது.  இதற்கிடையே, உக்ரைனின் முக்கிய நகரமாக கருதப்படும் கார்கிவ் நகரில், ரஷிய விமான படைகள் இன்று வான்வழி தாக்குதல் நடத்தின. பொதுமக்கள் இருந்த கட்டிடங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். முன்னதாக இன்று அங்கு நடைபெற்ற தாக்குதலில் இந்திய மாணவர் ஒருவர் … Read more

மராட்டியத்தில் இன்று புதிதாக 675 பேருக்கு கொரோனா

மும்பை, மராட்டியத்தில் இன்று புதிதாக 675 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் 78 லட்சத்து 66 ஆயிரத்து 380 ஆக உயர்ந்து உள்ளது. இதில் 77 லட்சத்து 12 ஆயிரத்து 568 பேர் குணமாகி உள்ளனர்.  தற்போது 6 ஆயிரத்து 106 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநிலத்தில் மேலும் 5 பேர் ஆட்கொல்லி நோய்க்கு பலியானார்கள். இதுவரை 1 லட்சத்து 43 ஆயிரத்து 706 பேர் உயிரிழந்து உள்ளனர்.  இதேபோல மாநிலத்தில் புதிதாக … Read more

2021 ஆம் ஆண்டிற்கான சாம்பியன்ஸ் ஆப் சேஞ்ச் விருதை வென்றார் பி.வி.சிந்து

தெலுங்கானா,   உலக பாட்மிண்டன் தரவரிசையில் 7-வது இடத்தில் இருப்பவர் இந்தியாவின் பி.வி.சிந்து. இவர் தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர். 2016 ஆம் ஆண்டு நடந்த ரியோ ஒலிம்பிக் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்ற இவர் கடந்த ஆண்டு நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்று இருந்தார். இந்த நிலையில் பாட்மிண்டன் துறையில் இவரது சாதனைகளை கவுரவிக்கும் விதமாக தெலுங்கானா அரசு சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்படும்  சாம்பியன்ஸ் ஆப் சேஞ்ச்  விருது இந்த ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டுள்ளது. … Read more

உக்ரைன் கீவில் உள்ள டிவி கோபுரத்தின் மீது ரஷிய ஏவுகணை தாக்குதல்

கீவ், ரஷிய ராணுவ படைகள் தொடர்ந்து 6ஆவது நாளாக உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ரஷிய ராணுவம் குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றது. குறிப்பாக, அரசு கட்டிடங்கள், ராணுவ நிலையங்கள், உளவுத்துறை அலுவலகங்கள் மீது ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்த தாக்குதலில் உக்ரைனின் தலைநகர் கீவ், இரண்டாவது பெரிய நகரமான கார்கிவ் சிதலமடைந்து வருகிறது. அந்த வகையில், கார்கிவ்வின் மத்திய சதுக்கத்தின் மீது இன்று ரஷ்ய படைகள் குண்டு … Read more

கேரளாவில் இன்று 2 ஆயிரத்து 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

திருவனந்தபுரம், கேரளாவில் இன்றைய கொரோனா பாதிப்பு விவரத்தை மாநில சுகாதாரத்துறை வெளியிட்டது. அதன்படி, கேரளாவில் இன்று 2 ஆயிரத்து 10 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.  கொரோனா பாதிப்பில் இருந்து இன்று 5 ஆயிரத்து 283 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், கேரளாவில் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 64 லட்சத்து 6 ஆயிரத்து 519 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 26 ஆயிரத்து 560 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனாலும், வைரஸ் … Read more

ஐ.எஸ்.எல் கால்பந்து: ஈஸ்ட் பெங்கால் – நார்த் ஈஸ்ட் யுனைடெட் ஆட்டம் 'டிரா'

கோவா, 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி  கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டிகள் மார்ச் மாதம் வரை நடைபெற உள்ளது. இன்று நடைபெற்ற ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் மற்றும் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதின. இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது. இந்த ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் அணி சார்பில் ஆண்டனியோ ஆட்டத்தின் 55 வது நிமிடத்தில் … Read more

போதும்..! போரால் உயிரிழப்பது பொதுமக்கள் தான் – ஐ.நா.பொதுச்செயலாளர் ரஷியாவிற்கு கண்டனம்

ஜெனீவா, உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 5-வது நாளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், ரஷியாவின் போர் நடவடிக்கைக்கு முட்டுக்கட்டை போடுவது தொடர்பாக விவாதிக்க ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் சிறப்பு அவசர 11-வது கூட்டம் இன்று இரவு 8.30 மணியளவில் தொடங்கி நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக கூட்டம் தொடங்குவதற்கு முன்னர் 1 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.  அதன்பின்னர் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் ரஷியாவின் தாக்குதல்களை கண்டித்து பேசினார். அவர் பேசியதாவது,  “போதும் – … Read more

மும்பையில் அடுக்குமாடி குடியிருப்பில் தீடீர் தீ விபத்து..!

மும்பை, மும்பையின் காஞ்சூர்மார்க்கில் உள்ள என்.ஜி ராயல் பார்க் பகுதியில் 11 தளங்கள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. முன்னதாக 11 மாடி அடுக்குமாடி குடியிருப்பின் 10-வது தளத்தில் இன்று மதியம் திடீரென பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு … Read more

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு புதிய கேப்டனாக மயங்க் அகர்வால் நியமனம்!

புதுடெல்லி, 10 அணிகள் கொண்ட 15-வது இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகள் மும்பையில் நடைபெற உள்ளது. இந்த போட்டிகள் மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி மே 29 ஆம் தேதி முடிவடைகிறது.  ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பஞ்சாப் கிங்சின் கேப்டனாக இருந்த லோகேஷ் ராகுல் இந்த முறை லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு ஒப்பந்தமாகி அந்த அணியின் கேப்டனாகவும் நியமிக்கப்பட்டார்.  இதனால் பஞ்சாப் அணியின் கேப்டன் யார்? என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் பஞ்சாப் … Read more