கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ கணவனை போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிக்கவைத்த பெண் கவுன்சிலர்..!

திருவனந்தபுரம், கேரள மாநிலம், இடுக்கி மாவட்டம், வண்டன் மேடு பகுதியை சேர்ந்தவர் சுனில் வர்கீஸ்(38). இவரது மனைவி சவுமியா (33). இவர் வண்டன்மேடு பஞ்சாயத்து கவுன்சிலராக உள்ளார். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த வெளிநாட்டில் வேலை செய்து வரும் வினோத் (43) என்பவருடன் சவும்யாவுக்கு நெருக்கம் ஏற்பட்டது. இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரித்தது. இதனால் வினோத் துபாயிலிருந்து அடிக்கடி ஊருக்கு வந்து சவுமியாவை சந்தித்து வந்தார்.  இந்நிலையில் இருவரும் திருமணம் செய்து கொள்ள தீர்மானித்தனர். இதற்கு சுனில் … Read more

உக்ரைன் மீது போர் : ரஷியாவுக்கு எதிராக கால்பந்து போட்டியில் விளையாட போலந்து மறுப்பு

உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷிய படைகளுக்கு விளாடிமிர் புதின் உத்தரவிட்டார்.  இதனை தொடர்ந்து, உக்ரைனை பலமுனைகளில் இருந்து ரஷிய படைகள் தாக்க தொடங்கின.  தொடர்ந்து இன்று 3-வது நாளாக போர் நீடிக்கிறது. உக்ரைன் மீது ரஷியா தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் நிலையில் , உலக கோப்பை கால்பந்து போட்டியில் ரஷியாவுடன் விளையாட போலந்து மறுப்பு தெரிவித்துள்ளது.  போட்டியில் பங்கேற்பதற்காக வருகிற மார்ச் 24ம் தேதி போலந்து அணி ரஷியா செல்லவிருந்த நிலையில் , … Read more

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு ரஷியா வரவேற்பு!

புதுடெல்லி, உக்ரைன் மீதான ரஷியாவின் போர் மூன்றாவது நாளாக தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில், ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் ரஷியாவுக்கு எதிரான தீர்மானத்தில் நடுநிலையாக இருந்த இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு ரஷியா வரவேற்பு தெரிவித்துள்ளது. அமெரிக்கா மற்றும் அல்பேனியா நாடுகள் இணைந்து ரஷியாவுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் அவையில் தீர்மானத்தை கொண்டு வந்தன. இதனை தொடர்ந்து, ரஷியாவுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட தீர்மானத்தின் மீது இன்று அதிகாலை 15 நாடுகள் கொண்ட ஐ.நா.சபையின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் வாக்கெடுப்பு … Read more

அகிலேஷ் யாதவை வீட்டிலேயே உட்காரச் செய்தால் தான் உ.பி.யில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் – ஜே பி நட்டா

லக்னோ, உத்தரபிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தலுக்கான 5-ம் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜே பி நட்டா தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். குஷிநகரில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் அவர் பேசியதாவது,  “சமாஜ்வாதி கட்சியின் ஆட்சியின் போது குற்றவாளிகள் கை ஓங்கியிருந்தது. மாபியாக்கள் மற்றும் பயங்கரவாதத்துக்கு முடிவு கட்ட வேண்டுமென்றால் அகிலேஷ் யாதவை வீட்டிலேயே உட்காரச் செய்யுங்கள். யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, ஆசாம் கான் … Read more

புரோ ஆக்கி லீக்; பலம் பொருந்திய ஸ்பெயின் அணியை எதிர்கொள்கிறது இந்திய மகளிர் அணி!

புவனேஷ்வர்,  புரோ ஆக்கி லீக் போட்டியில் இந்திய மகளிர் அணி ஸ்பெயின் அணியை எதிர்கொள்கிறது. ஒடிசா மாநிலம் கலிங்கா மைதானத்தில் நடைபெறும் இந்த போட்டியில் 2 ஆண்டுகளுக்கு பின்னர் இந்திய மகளிர் அணியினர் மீண்டும் கலிங்கா மைதானத்தில் சனிக்கிழமையன்று விளையாடுகின்றனர். கடந்த முறை இங்கு விளையாடிய போட்டியில் இந்திய மகளிர் அணி அமெரிக்காவை வீழ்த்தியது. அதன்மூலம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. உலக ஆக்கி தரவரிசையில் ஒன்பதாவது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ள இந்திய மகளிர் … Read more

போரால் ஏற்பட்ட உயிரிழப்புகள் கவலையளிக்கிறது – உக்ரைன் அதிபரிடம் வருத்தம் தெரிவித்த இந்திய பிரதமர்

புதுடெல்லி, உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 3-வது நாளாக நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன.  அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. உக்ரைன் தலைநகர் கிவ் -ஐ ரஷிய படைகள் நெருங்கி வருவதால் போர் … Read more

கர்நாடகத்தில் புதிதாக 628 பேருக்கு கொரோனா

பெங்களூரு,  கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- கர்நாடகத்தில் இன்று 67 ஆயிரத்து 583 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 628 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் பெங்களூருவில் 346 பேர் உள்ளனர். ஒரே நாளில் 1,349 பேர் குணம் அடைந்தனர். வைரஸ் தொற்றுக்கு மேலும் 15 பேர் உயிரிழந்தனர்.  இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 39 ஆயிரத்து 900 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு விகிதம் ஒரு சதவீதத்திற்கு கீழ் உள்ளது. உயிரிழப்பு விகிதம் … Read more

இந்தியாவுக்கு எதிரான 20 ஓவர் தொடர்: ஹசரங்கா, மெண்டிஸ் விலகல்

லக்னோ, மூன்று 20 ஓவர் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வந்துள்ளது. இதன்படி இந்தியா- இலங்கை அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் நேற்று நடைபெற்றது.இந்த போட்டியில் இந்திய அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது . இரு அணிகளுக்கும் இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி நாளை நடைபெறுகிறது. இந்த நிலையில் 20 ஓவர் தொடரில் இருந்து … Read more

'உக்ரைன் மண்ணில் உங்களுக்கு என்ன வேலை..?' – ரஷிய போர் வீரரிடம் வாதிட்ட பெண்..!

லண்டன், முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன் ‘நேட்டோ’ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா, உக்ரைன் நாட்டின் எல்லையில் சுமார் 1½ லட்சம் படை வீரர்களை குவித்தது. இதனால் ரஷியா எந்த நேரத்திலும் உக்ரைனுக்குள் ஊடுருவி அந்த நாட்டை ஆக்கிரமிக்கலாம் என அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் தொடர்ந்து எச்சரித்து வந்தன. இந்த நிலையில், போரை தவிர்க்க ரஷியாவிடம் ஐ.நா. அமைப்பு வைத்த வேண்டுகோள் ஒருபுறம் இருக்க, உக்ரைனின் ராணுவ நடவடிக்கையை கைவிட அந்நாட்டுக்குள் ரஷிய வீரர்கள் … Read more

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.267 கோடி நிதி – மத்திய அரசு விடுவிப்பு

புதுடெல்லி, தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நேற்றைய தினம் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமனை சந்தித்து, தமிழகத்திற்கு நிலுவையில் உள்ள உள்ளாட்சிகளுக்கான நிதி, நிவாரண நிதிகள், மத்திய அரசு வசூலிக்கும் வரிகளில் தமிழகத்தின் பங்கு உள்ளிட்டவற்றை இந்த நிதியாண்டிற்குள் மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என வலுயுறுத்தினார். இந்த நிலையில் இன்று தமிழக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய நிதி அமைச்சகம் 267 கோடி ரூபாய் நிதியை விடுவித்துள்ளது. தமிழகம் தவிர ஒரிசா, ஜார்க்கண்ட், கர்நாடகா, … Read more