உக்ரைன் சண்டையை நிறுத்தினால் பேச்சுவார்த்தைக்கு தயார்: ரஷியா அறிவிப்பு

மாஸ்கோ, உக்ரைன் மீது ரஷிய படைகள் உக்கிரமான தாக்குதலை 2-வது நாளாக நடத்தி வருகிறது. வான்வழி, கடல்வழி மற்றும் தரைவழி என மும்முனை தாக்குதலை நடத்துவதால் பெரும் உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் நாட்டின் ஏராளமான ராணுவ இலக்குகளை ரஷிய படைகள் தாக்கி அழித்துள்ளன.  அதேபோல் உக்ரைன் தங்களை தற்காத்துக் கொள்ள, ரஷிய படைகளுக்கு பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் தொடர்ந்து பதற்றமான சூழல் உள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ்- நகரையும் நெருங்கியுள்ள ரஷிய படிகள் சுற்றி வளைத்து … Read more

ரஷியா போர் :பிரதமர் மோடி சொன்னா புதின் கேட்பார்! – உக்ரைன் தூதர் பேட்டி!

புதுடெல்லி, முன்னாள் சோவியத் ஒன்றிய நாடான உக்ரைன் ‘நேட்டோ’ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ரஷியா, உக்ரைன் நாட்டின் எல்லையில் சுமார் 1½ லட்சம் படை வீரர்களை குவித்துள்ளது. இதனால் ரஷியா எந்த நேரத்திலும் உக்ரைனுக்குள் ஊடுருவி அந்த நாட்டை ஆக்கிரமிக்கலாம் என அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் தொடர்ந்து எச்சரித்து வந்தன. இந்த நிலையில், போரை தவிர்க்க ரஷியாவிடம் ஐ.நா. அமைப்பு வைத்த வேண்டுகோள் ஒருபுறம் இருக்க, உக்ரைனின் ராணுவ நடவடிக்கையை கைவிட அந்நாட்டுக்குள் ரஷ்ய வீரர்கள் … Read more

கொரோனா பரவல் காரணமாக மும்பை ,புனேயில் ஐ.பி.எல் போட்டிகளை நடத்த திட்டம்..?

15-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி  வருகிற மார்ச் மாதம் கடைசி அல்லது ஏப்ரல் முதல் வாரத்தில் தொடங்கி நடைபெற உள்ளது . இந்த சீசனில் புதிதாக லக்னோ, சூப்பர் ஜெயின்ட்ஸ் குஜராத் டைட்டன்ஸ் ஆகிய 2 புதிய அணிகள் பங்கேற்கின்றன. இதற்கான வீரர்கள் ஏலம் சமீபத்தில் இரண்டு நாட்களாக  நடைபெற்றது .இதில் முக்கிய வீர்ரகள் ஏலத்தில் எடுக்கப்படாமல் ,சில வீரர்கள் அதிக விலைக்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டனர்  இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக இந்த ஆண்டு … Read more

'நான் இப்போது அதிபராக இருந்திருந்தால்…..’ – ரஷிய தாக்குதல் குறித்து டொனால்டு டிரம்ப் கருத்து

வாஷிங்டன், உக்ரைன் மீது ரஷியா இன்று போர் தொடுத்துள்ளது. தரைவழி, வான்வெளி மூலம் உக்ரைன் தலைநகர் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் ரஷிய பாதுகாப்பு படையினர் குண்டுமழை பொழிந்து வருகின்றனர்.  ரஷிய தாக்குதலுக்கு உக்ரைன் பாதுகாப்பு படையினரும் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த தாக்குதலால் இருதரப்பிலும் பாதுகாப்பு படையினர், பொதுமக்கள் என 150-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், உக்ரைன் மீது ரஷிய தாக்குதல் குறித்து அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் கருத்து தெரிவித்துள்ளார்.  … Read more

ரஷியா-உக்ரைன் போர் எதிரொலி: மும்பை பங்குச்சந்தை கடும் சரிவு

மும்பை, உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள ரஷிய படைகளுக்கு விளாடிமிர் புதின் உத்தரவிட்டுள்ளார். இதன்படி ரஷிய படைகளில் உக்ரைனின் பல்வேறு நகரங்களில் ஏவுகணை மழை பொழிந்துவருகின்றன. உக்ரைனில் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களை கைப்பற்றும் முனைப்பில் ரஷியா தீவிரம் காட்டி வருகிறது. இந்த நடவடிக்கைக்கு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. அதே சமயம் உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்திருப்பது வர்த்தக சந்தையில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. அதன் எதிரொலியாக மும்பை பங்கு சந்தையான … Read more

ஐ.எஸ்.எல் கால்பந்து : ஒடிசா -மோகன் பகான் அணிகள் இன்று மோதல்

கோவா, 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி  கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டிகள் மார்ச் மாதம் வரை நடைபெற உள்ளது. இந்நிலையில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் ஒடிசா – ஏடிகே மோகன் பகான் அணிகள் மோதுகின்றன  ஒடிசா அணி விளையாடிய 18 போட்டிகளில் 6,வெற்றி ,4 டிரா ,8 தோல்வி என   புள்ளி பட்டியலில்  7 வது இடத்தில் உள்ளது.மோகன் … Read more

விடாமல் குண்டு மழை பொழியும் ரஷியா ; மெட்ரோ சுரங்கப்பாதையில் உக்ரைன் மக்கள் தஞ்சம்

லண்டன் உக்ரைனின் கிழக்கு மற்றும் வடக்கு எல்லை பகுதிகளில் ரஷிய கூட்டமைப்பு ஏவுகணைகளை பொழிந்து வருகின்றன.  இதனால், லுஹான்ஸ்க், சுமி, கார்கிவ், செர்னிஹிவ் மற்றும் ஜைட்டோமைர் பகுதிகளில் தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இந்த தாக்குதல்கள் எல்லை பிரிவுகள், எல்லையில் ரோந்து பகுதிகள் மற்றும் சோதனை சாவடி பகுதிகளில் நடத்தப்படுகின்றன.  இதற்காக ரஷியா, சிறிய வகை பீரங்கிகள், கனரக மற்றும் சிறிய ஆயுதங்களை கொண்டு தாக்குதலில் ஈடுபட்டு உள்ளது.  ரஷியாவின் கிரீமியா சுயாட்சி பகுதியில் இருந்தும் தாக்குதல் நடத்தப்படுகிறது … Read more

உக்ரைன் மீது ரஷியா போர்: பிரதமர் மோடி அவசர ஆலோசனை

புதுடெல்லி, உக்ரைனில் உள்ள ராணுவ தளங்கள், விமான தளங்கள் மீது ரஷிய படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. உக்ரைன் மீதான போரை ரஷிய நிறுத்த உலக நாடுகள் உதவ வேண்டும் என உக்ரைன் அரசு கோரிக்கை விடுத்துள்ளது.  உக்ரைன் மீதான ராணுவ நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும் என  ரஷியாவுக்கு ஜெர்மனி வேண்டுகோள் விடுத்துள்ளது.  இதனிடையே உக்ரைன் மீது குண்டுமழை பொழிந்த ரஷிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது எனவும்  ரஷியாவின் 5 ஜெட் விமானங்கள், ஒரு ஹெலிகாப்டர் … Read more

யுவராஜ் சிங் அனுப்பிய உருக்கமான கடிதத்துக்கு , விராட் கோலி நன்றி..!

மொகாலி, இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேன் யுவராஜ் சிங். இவர் இந்திய அணிக்காக பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். தற்போது இந்திய அணியில் கேப்டன் பொறுப்பை துறந்து, புது உத்வேகத்துடன் விளையாடிவரும் ,விராட் கோலிக்கு யுவராஜ் சிங் உருக்கமான கடிதம் ஒன்றையும், பரிசு ஒன்றையும் அனுப்பினார் “விராட், ஒரு கிரிக்கெட் வீரராகவும், ஒரு நபராகவும், உன்னுடைய வளர்ச்சியை அருகில் இருந்து நான் பார்த்துள்ளேன். ஒரு இளைஞனாக வலை பயிற்சியில் இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான்களுடன் தோளோடு தோள் நின்று, … Read more

ரஷிய தாக்குதலில் 40 வீரர்கள், பொதுமக்கள் 10 பேர் பலி – உக்ரைன் அரசு அறிவிப்பு

கீவ், உக்ரைனின் கிழக்கு மற்றும் வடக்கு எல்லை பகுதிகளில் ரஷிய கூட்டமைப்பு ஏவுகணைகளை பொழிந்து வருகின்றன.  இதனால், லுஹான்ஸ்க், சுமி, கார்கிவ், செர்னிஹிவ் மற்றும் ஜைட்டோமைர் பகுதிகளில் தாக்குதல்கள் நடந்து வருகின்றன. ரஷ்ய வீரர்களின் தாக்குதலில் உக்ரைன் நாட்டு வீரர்கள் 100 பேர் பலியாகி உள்ளதாக ரஷ்ய ராணுவம் தெரிவித்திருந்தது.   உக்ரைன் நாட்டு ராணுவ வீரர்கள் ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சரணடைந்து வருகின்றனர் எனவும் தரை வழி மற்றும் வான்வழி தாக்குதலை தொடர்ந்து உக்ரைன் வீரர்கள் … Read more