ஐ.எஸ்.எல் கால்பந்து : கேரளா -மோகன் பகான் அணிகள் மோதிய ஆட்டம் 'டிரா'

கோவா 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி  கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறும் இந்த போட்டிகள் மார்ச் மாதம் வரை நடைபெற உள்ளது. இன்று நடைபெற்ற ஆட்டத்தில் கேரளா   -மோகன் பகான் அணிகள் மோதின  இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் கேரளா அணியின் அட்ரியன் லூனா 7 வது மற்றும் 64  வது நிமிடத்தில் கோல் அடித்தார் . மோகன் பகான் அணியின் … Read more

26 நாடுகள் பங்கேற்கும் ‘ஆளில்லா விமான கண்காட்சி-கருத்தரங்கு’ – அபுதாபியில் நாளை தொடங்குகிறது

அபுதாபி, அபுதாபி தேசிய கண்காட்சி மையத்தில் ஆளில்லா விமானம் மற்றும் அதனை இயக்குவது தொடர்பான பயிற்சி கண்காட்சி மற்றும் கருத்தரங்கு நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. 5-வது ஆண்டாக இந்த கண்காட்சி நடைபெறுகிறது. இந்த கண்காட்சியில் 26 நாடுகளைச் சேர்ந்த 134-க்கும் மேற்பட்ட வர்த்தக நிறுவனங்கள் பங்கேற்கின்றன. இதில் முதல் முறையாக இஸ்ரேல், செர்பியா, ஆஸ்திரியா, பல்கேரியா, மால்டா, துருக்கி மற்றும் பக்ரைன் உள்ளிட்ட நாடுகள் பங்கேற்கின்றன. ஆளில்லா விமானம் தொடர்பான பல்வேறு தொழில்நுட்பங்கள், நவீன உத்திகள், பாதுகாப்பு … Read more

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் மீது வயது மோசடி புகார்!

மும்பை, 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பையை வென்ற இந்திய ஜூனியா் அணியில் இடம் பெற்றிருந்தவர் ஆல்-ரவுண்டர் ராஜ்வா்தன் ஹேங்கர்கேகர். இந்நிலையில், மும்பையை சேர்ந்த ராஜ்வா்தன் ஹேங்கர்கேகர் வயது மோசடியில் ஈடுபட்டதாக மராட்டிய மாநில விளையாட்டு மற்றும் இளைஞர்துறை ஆணையர் ஓம்பிரகாஷ் பகோரியா குற்றம் சாட்டியுள்ளார்.  ஹேங்கர்கேகர் 8-ம் வகுப்பில் மீண்டும் சேர்ந்த போது பிறந்த தேதியை ஜனவரி 10, 2001-க்கு பதிலாக நவம்பர் 10, 2002 என்று மாற்றியுள்ளார். இந்த வயது குறைப்பால் தான் அவரால் ஜூனியர் … Read more

உக்ரைனில் திடீர் வெடிவிபத்தால் பதற்றம் அதிகரிப்பு! ரஷியாவின் தாக்குதலா..?

மாஸ்கோ, உக்ரைனில் போர் பதற்றம் அதிகமாக காணப்படும் முக்கிய பகுதியான லுஹான்ஸ்க் மக்கள் குடியரசு பகுதியில் நேற்றிரவு பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. அங்கு எரிவாயு கொண்டு செல்லும் குழாய்களில் இந்த வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.  பிரிவினைவாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கிழக்கு உக்ரைன் லுஹான்ஸ்க் பகுதியில் இன்னொரு வெடிவிபத்தும் ஏற்பட்டது என அங்குள்ள  செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன. எரிவாயு குழாய் வெடிவிபத்தினை தொடர்ந்து 40 நிமிடங்கள் கழித்து அடுத்த வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்துக்களில் காயமடைந்தோர் நிலவரம் மற்றும் உயிரிழப்புகள் ஏற்பட்டனவா என்பன … Read more

ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரெயிலில் திடீர் தீ..!

மதுபானி, பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தில் உள்ள மதுபானி ரெயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஸ்வதந்தரதா சேனானி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயிலில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.  ரெயிலின் 5 பெட்டிகளில் தீ கொளுந்துவிட்டு எரியும் வீடியோ பார்ப்பவர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ரெயிலில் ஆட்கள் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டுள்ளது. இதுகுறித்து கிழக்கு மத்திய ரெயில்வேயின் சிபிஆர்ஓ கூறியதாவது:-   காலி ரெயிலில் ஏற்பட்ட தீ காலை 9.50 மணியளவில் அணைக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் உயிர் … Read more

இந்தியா – நியூசிலாந்து கிரிக்கெட் போட்டியில் இந்திய பெண்கள் அணி தோல்வி

இந்தியா – நியூசிலாந்து பெண்கள் அணிகள் இடையிலான 3-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி குயின்ஸ்டவுனில் நேற்று நடந்தது. இதில் முதலில் ‘பேட்’ செய்த இந்திய அணி 49.3 ஓவர்களில் 279 ரன் எடுத்து ஆல்-அவுட் ஆனது. மேகனா (61 ரன்), ஷபாலி வர்மா (51 ரன்), தீப்தி ஷர்மா (69 ரன்) ஆகிேயாா் அரைசதம் அடித்தனர். கேப்டன் மிதாலிராஜ் (23 ரன்), ஹர்மன்பிரீத் கவுர் (19 ரன்) பெரிய அளவில் சோபிக்கவில்லை. பின்னர் ஆடிய நியூசிலாந்து அணி … Read more

ஒமைக்ரான் பிஏ.2 உருமாற்றம் டெல்டா வைரசை விட ஆபத்தானதா.. அதிர்ச்சியளிக்கும் ஆய்வு!

டோக்கியோ, ஒமைக்ரான் வைரசின் பிஏ.2 உருமாற்றம் அதன் முந்தைய மரபணு மாற்றமான பிஏ.1ஐ விட அதி வேகமாக பரவும், தீவிர நோய் தாக்கத்தை ஏற்படுத்த கூடியது என்று ஜப்பான் ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். உலகளவில் மிகப் பெரிய நோய் தாக்கத்தை ஏற்டுத்திய கொரோனா, டெல்டா வகை வைரசின் தொடர்ச்சியாக, ஒமைக்ரான் வைரஸ் பரவத் தொடங்கி உள்ளது. இது தீவிர பாதிப்பை ஏற்படுத்தவில்லை.  இந்த ஒமைக்ரான் வைரசின் உருமாற்றமான பிஏ.2, கடந்த பிப்ரவரியில் டென்மார்க், இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டது.  ஒமைக்ரானில் இதுவரை … Read more

உ.வே.சா, சத்ரபதி சிவாஜி பிறந்தநாள்: பிரதமர் மோடி டுவிட்டர் பதிவு..!

புதுடெல்லி, தமிழ் தாத்தா என்று அழைக்கப்படும் உ.வே.சாமிநாத அய்யரின் பிறந்த தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அவரது பிறந்த தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தமிழில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.  அந்த பதிவில் அவர், ‘தமிழ் தாத்தா உ. வே. சாமிநாத அய்யரின் பிறந்தநாளை முன்னிட்டு அவரை நினைவு கூர்கிறேன். தமிழ் கலாச்சாரம் மற்றும் மொழிக்காக அவர் ஆற்றிய அரும்பணிக்காக போற்றப்படுபவர், சங்க கால இலக்கியங்களை மக்களிடம் கொண்டு சேர்த்ததுடன் … Read more

ஐ.எஸ்.எல் கால்பந்து : பெங்களூரு அணி அதிர்ச்சி தோல்வி

பனாஜி, கோவாவில் நடந்து வரும் 8-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடரில் நேற்றிரவு அரங்கேறிய 94-வது லீக் ஆட்டத்தில், நார்த் ஈஸ்ட் யுனைடெட்(கவுகாத்தி) – பெங்களூரு எப்.சி. அணிகள் பலப்பரிட்சை நடத்தின.  இந்த போட்டியில், நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி முன்னாள் சாம்பியன் பெங்களூரு எப்.சி.க்கு அதிா்ச்சி தோல்வி அளித்தது.நார்த் ஈஸ்ட் யுனைடெட்(கவுகாத்தி) அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன்மூலம் பெங்களூரு அணி புள்ளிப்பட்டியலில் 6வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் … Read more

கனடாவில் தொடரும் அட்டூழியம்! எரிவாயு குழாய்களை சேதப்படுத்திய போராட்டக்காரர்கள்!

ஒட்டாவா, கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் லாரி டிரைவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் மற்றும் அமெரிக்காவில் இருந்து கனடா திரும்பும் லாரி டிரைவர்களும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என கனடா அரசு அறிவித்தது. இதனிடையே, தடுப்பூசி கட்டாயம் என்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து கனடாவில் லாரி டிரைவர்கள் கடந்த சில நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  போராட்டம் தீவிரமடைந்ததால் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு போராட்டம் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.இதனால் அந்த பகுதியிலிருந்து போராட்டக்காரர்கள் வெளியேறி … Read more