பாலியல் புகார் கூறிய பெண்ணுக்கு ரூ.120 கோடி இழப்பீடு வழங்கும் இளவரசர்: எந்த நாட்டில் தெரியுமா..?

லண்டன்,  இங்கிலாந்து ராணி 2-ம் எலிசபெத், இளவரசர் பிலிப் தம்பதியரின் இளைய மகன், இளவரசர் ஆண்ட்ரூ (வயது 61). இவர் கடந்த 2001-ம் ஆண்டு வர்ஜீனியா கியூப்ரே என்ற 17 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தார் என்று குற்றச்சாட்டு எழுந்தது.  இது தொடர்பாக அந்தப் பெண் தரப்பில் நியூயார்க் நகர கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்து வரும் ஆண்ட்ரூ, தன் மீதான பாலியல் புகாரை தள்ளுபடி செய்ய வேண்டும் என … Read more

போர் பதற்றம்: உக்ரைனில் இருந்து இந்தியர்களை அழைத்து வர அதிக விமானங்கள்

புதுடெல்லி,  உக்ரைன் மீது படையெடுக்க திட்டமிட்டு படைகளை குவித்து வரும் ரஷியாவால் உக்ரைன் எல்லையில் பதற்றம் நிலவி வருகிறது. இந்த விவகாரத்தில் உக்ரைனுக்கு ஆதரவாக நேட்டோ நாடுகளும் களமிறங்க திட்டமிட்டு உள்ளதால் மிகப்பெரிய போர் வெடிக்கும் அபாயம் உள்ளது. இந்த பதற்றமான சூழலில், உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை பாதுகாக்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது. அதன்படி, உக்ரைனில் வசித்து வரும் இந்தியர்கள் வெளியேறுமாறும், மற்றவர்கள் உக்ரைனுக்கு பயணம் செய்வதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தி உள்ளது. இதைத்தொடர்ந்து, கல்வி மற்றும் … Read more

குளிர்கால ஒலிம்பிக்; பனிச்சறுக்கு போட்டியில் இந்திய வீரர் ஆரிப்கான் ஏமாற்றம்!

பீஜிங்,  24-வது குளிர்கால ஒலிம்பிக் போட்டி சீன தலைநகர் பீஜிங்கில் நடந்து வருகிறது. இந்த ஒலிம்பிக்குக்கு இந்தியாவில் இருந்து தகுதி பெற்ற ஒரே இந்தியரான ஜம்மு-காஷ்மீரை சேர்ந்த பனிச்சறுக்கு வீரர் முகமது ஆரிப்கான், ஜெயன்ட் ஸ்லாலோம் பிரிவில் 45-வது இடத்தை பிடித்தார். இந்த நிலையில் அவர் நேற்று மற்றொரு பந்தயமான ஸ்லாலோம் பிரிவில் பங்கேற்றார். பனிப்பாதையில் உயரமான இடத்தில் இருந்து வழியில் நட்டப்பட்டுள்ள குச்சிகளை தட்டியபடி வேகமாக சறுக்கி செல்லும் இந்த போட்டியில்  31 வயதான ஆரிப்கான் … Read more

உலகளவில் கொரோனா பாதிப்பு 19 சதவீதம் சரிவு..!! உலக சுகாதார அமைப்பு தகவல்

ஜெனீவா,  உலகளவில் கடந்த செவ்வாய்க்கிழமையுடன் முடிந்த ஒரு வார காலத்துக்கான கொரோனா நிலவர அறிக்கையை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. அதில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள் வருமாறு:- * கடந்த வாரத்தில் உலகமெங்கும் 1 கோடியே 60 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டது. 75 ஆயிரம் பேர் தொற்றுக்கு பலியாகி உள்னனர். * உலகளவில் ஒரு வார கால தொற்று பாதிப்பு 19 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இறப்புகள் நிலையாக உள்ளன. * … Read more

கர்நாடகத்தில் ஒரு வாரத்திற்கு பிறகு கல்லூரிகள் இன்று திறப்பு

பெங்களூரு,  ஹிஜாப் விவகாரத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டதை அடுத்து பள்ளி-கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து உயர்நிலை பள்ளிகள் நேற்று முன்தினம் திறக்கப்பட்டன.  இந்த நிலையில் ஒரு வார விடுமுறைக்கு பிறகு பி.யூ.சி. உள்பட டிகிரி கல்லூரிகள் இன்று(புதன்கிழமை) திறக்கப்படுகின்றன. இதையடுத்து மாவட்ட கலெக்டர்கள் உள்ளூர் மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆகியோருடன் அமைதி-நல்லிணக்க கூட்டத்தை நடத்தியுள்ளனர்.  அதில் கலெக்டர்கள், கல்லூரிகளில் அமைதியை நிலைநாட்ட அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். மேலும் … Read more

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ்: முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் இன்று நடக்கிறது.

20 ஓவர் கிரிக்கெட் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஒரு நாள் தொடரை 0-3 என்ற கணக்கில் பறிகொடுத்தது. அடுத்து 3 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி கொல்கத்தாவில் இன்றிரவு நடக்கிறது. ஒரு நாள் தொடரை முழுமையாக வசப்படுத்திய இந்திய அணி 20 ஓவர் தொடரிலும் ஆதிக்கம் செலுத்தும் உத்வேகத்துடன் வியூகங்களை தீட்டுகிறது. இன்னும் … Read more

கனடா: மீனவர்களின் விசைப்படகு மூழ்கி விபத்து; 7 பேர் பலி, 14 பேர் மாயம்

மாட்ரிட், நேற்று (செவ்வாய்க்கிழமை) கிழக்கு கனடாவின் கடலில் சென்று கொண்டிருந்த ஸ்பானிஷ் மீனவர்களின் விசைப்படகு மூழ்கியதில் 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  முன்னதாக, நேற்று அதிகாலை காலை 5:24 மணியளவில் கலீசியா துறைமுகத்தைச் சேர்ந்த 50 மீட்டர் நீளம் கொண்ட மீன்பிடிக் கப்பலில் இருந்து மாட்ரிட்டிற்கு பேரிடர் அழைப்பு வந்துள்ளது. 5 மணி நேரம் கழித்து அந்த கடல்பகுதியில் அருகில் இருந்த மற்றொரு ஸ்பானிஷ் விசைப்படகு, இரண்டு உயிர்காக்கும் படகுகளைக் கண்டுபிடித்தது. அதில் … Read more

ஜி-20 அமைப்புக்கு தலைமை ஏற்க தயாராகும் இந்தியா…!!

புதுடெல்லி,  சர்வதேச பொருளாதாரம் தொடர்பான முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காண 20 நாடுகள் அடங்கிய ஜி-20 அமைப்பு செயல்படுகிறது. இதில், இந்தியாவும் இடம்பெற்றுள்ளது. இந்த அமைப்பின் தலைவராக ஒவ்வொரு நாடும் சுழற்சி முறையில் பதவி வகித்து வருகின்றன. வருகிற டிசம்பர் 1-ந் தேதி முதல் அடுத்த ஆண்டு நவம்பர் 30-ந் தேதிவரை இந்தியா தலைமை பொறுப்பு வகிக்கிறது. இந்தநிலையில், தலைமை பொறுப்பை ஏற்பதற்கான ஏற்பாடுகளை இந்தியா தொடங்கி உள்ளது. பிரதமர் மோடி தலைமையில் நேற்று மத்திய மந்திரிசபை … Read more

இலங்கை வீரர் ஹசரங்காவுக்கு கொரோனா பாதிப்பு

கான்பெர்ரா,  இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னணி சுழற்பந்து வீச்சாளர் ஹசரங்கா கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது 20 ஓவர் போட்டிக்கு முன்பாக நடத்தப்பட்ட பரிசோதனையில் அவருக்கு தொற்று ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.  இதையடுத்து அவர் உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான எஞ்சிய போட்டிகளில் அவரால் விளையாட முடியாது. நடப்பு தொடரில் கொரோனாவில் சிக்கிய 3-வது இலங்கை வீரர் ஆவார். ஏற்கனவே குசல் மென்டிஸ், பினுரா பெர்னாண்டோ கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 24 வயதான ஹசரங்காவை சில தினங்களுக்கு … Read more

கனடாவில் அவசர நிலை பிரகடனத்திற்கு வலுக்கும் எதிர்ப்பு..!!

ஒட்டாவா, கனடாவில் கட்டாய கொரோனா தடுப்பூசிக்கு எதிராக தீவிரமடைந்துள்ள போராட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில், பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ முன்னெப்போதும் இல்லாத வகையில் நாட்டில் அவசரநிலையை பிரகடனப்படுத்தியுள்ளார். கனடாவில் எல்லையை கடந்து அமெரிக்கா செல்லும் லாரி டிரைவர்களும், அமெரிக்காவிலிருந்து கனடா திரும்பும் லாரி டிரைவர்களும் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான அரசு புதிய உத்தரவை பிறப்பித்தது. அரசின் இந்த உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து லாரி டிரைவர்கள் கடந்த மாதம் 29-ந்தேதி … Read more