பீஜிங் ஒலிம்பிக்; பயோ-பபிள் தனிமைப்படுத்தலில் தங்கியிருக்கும் வீரர்களுக்கு பணிவிடை செய்யும் ரோபோக்கள்

பீஜிங், குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் சீன தலைநகர் பீஜிங்கில் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கொரோனா பரவாமல் ஒலிம்பிக் போட்டிகள் பாதுகாப்பாக நடைபெற சீன அரசு பீஜிங் நகருக்குள் இன்னொரு நகரத்தை கட்டமைத்து உள்ளது. பிரத்யேகமாக கட்டமைக்கப்பட்டுள்ள அந்த நகரத்தில், ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் ஒலிம்பிக் விளையாட்டு நிர்வாக ஊழியர்கள் பயிற்சியாளர்கள் என அதனை சார்ந்தவர்கள் மட்டுமே இருப்பார்கள்.வெளி உலகிலிருந்து, அதாவது பீஜிங் நகரவாசிகளிடமிருந்து கொரோனா தொற்று ஒலிம்பிக்கில் பங்கேற்பவர்களுக்கு பரவி விடக்கூடாது என்பதற்காக இந்த அமைப்பை … Read more

சறுக்கலில் முடிந்த சாகசம்: உறைந்த ஏரியில் நூலிழையில் உயிர் தப்பிய தடகள வீரர் …!

பிராடிஸ்லாவா, 31 வயதான தடகள வீரர் போரிஸ் ஓரவேவ் பால் ஹாக்கியில் நான்கு முறை உலக சாம்பியன், ரெட் புல் ஐஸ் கிராஸ் தடகள வீரர் மற்றும் கிராஸ்-ஃபிட் விளையாட்டு வீரர். இவர் தனது டிக்டோக் மற்றும் இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார், அதில் அவர் தனது குளிர்ந்த நீர் நீச்சல் திறமையைக் காட்ட முயற்சித்தது பார்வையாளர்களை பதற்றமடைய செய்துள்ளது. போரிஸ் ஓரவேவ் உறைந்த ஏரியின் அடியில் நீச்சல் சாகசம் நிகழ்த்தும் போது வழி திரும்பி திசை … Read more

தமிழகம்- கர்நாடகா இடையே உடன்பாடு ஏற்பட்டால் மட்டுமே மேகதாது அணைக்கு அனுமதி: மத்திய அரசு

புதுடெல்லி காவிரியின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் கர்நாடகா அரசு புதிதாக அணையைக் கட்ட முயல்கிறது. இந்த அணை மட்டும் கட்டப்பட்டால் தமிழக விவசாயிகள் பலரும் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள் என்பதால் இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.  இந்த நிலையில், நாடாளுமன்றத்தில் இன்று கர்நாடக மாநில எம்.பி  மேகாதாது அணைக்கு அனுமதி எப்போது என வழங்கப்படும் என்று  என எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பினார். இக்கேள்விக்கு பதிலளித்த மத்திய சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்ற  இணை … Read more

பீஜிங் ஒலிம்பிக்;மாஸ்க் அணிந்து கொண்டு வியர்க்க விறுவிறுக்க ஐஸ்-ஆக்கி விளையாடிய வீராங்கனைகள்!

பீஜிங், குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளில் இன்று நடைபெற்ற பெண்கள் ஐஸ்-ஆக்கி போட்டியில் ரஷியா-கனடா அணிகள் பலப்பரிட்சை நடத்தின. இந்த போட்டியில் 6-1 என்ற கோல் கணக்கில் கனடா வெற்றி பெற்றது. இந்நிலையில், போட்டி தொடங்கும் முன் கொரோனா பரிசோதனை முடிவுகள் வெளிவர சிறிது கால தாமதமானதால் போட்டி தாமதமாக தொடங்கியது. இதில் ஆச்சரியம் என்னவென்றால், இந்த போட்டியில் விளையாடிய இருநாட்டு வீராங்கனைகளும் கொரோனா பரவாமல் இருக்க ‘கே என்.95’ ரக மாஸ்க் அணிந்து கொண்டு போட்டியில் … Read more

கட்டாய தடுப்பூசிக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் – கனடாவில் அவசர நிலை பிரகடனம்..!

ஒட்டாவா, கனடாவில் எல்லை தாண்டி செல்லும் லாரி டிரைவா்கள் கட்டாயம் கொரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்ற விதிமுறையை எதிா்த்து, தலைநகா் ஒட்டாவாவில் ‘சுதந்திர வாகன அணிவகுப்பு’ என்ற பெயரில் லாரி டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்த போராட்டம் கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது.  அந்த போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்ததால், அது அரசின் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான போராட்டமாக உருவெடுத்தது. இதனால் தலைநகரில் நிலைமை மோசமானதை தொடர்ந்து பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, குடும்பத்துடன் … Read more

பிப்., 14ஆம் தேதிமுதல் சுப்ரீம்கோர்ட்டில் மீண்டும் நேரடி விசாரணை தொடக்கம்..!

புதுடெல்லி,  கடந்த 2020-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் கொரோனா நோய்த்தொற்று பரவத் தொடங்கியபோது சுப்ரீம்கோர்ட்டு நேரடி விசாரணை முறையை கைவிட்டு வழக்குகளை காணொலி வழியாக விசாரிக்கத் தொடங்கியது.  கடந்த ஆண்டு நவம்பா் 9-ஆம் தேதி முதல் செவ்வாய், புதன், வியாழன் என வாரத்தில் 3 நாள்கள் மீண்டும் நேரடி விசாரணை நடைபெற்று வந்தது. ஒமைக்ரான் பரவலைத் தொடா்ந்து மீண்டும் வழக்குகள் முழுமையாக காணொலி வழியில் விசாரிக்கப்பட்டு வருகிறது. இந்தசூழலில் கொரோனா பாதிப்பு தற்போது குறைந்து வருவதால் பிப்ரவரி … Read more

விரைவில் பெண்கள் ஐ.பி.எல்..! பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தகவல்

புது டெல்லி, பெண்கள் ஐ.பி.எல்  கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு தொடக்கத்தில்  முதன்முறையாக தொடங்க உள்ளதாக பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா  தெரிவித்தார். அதற்கான  முயற்சிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மேலும்,  இதனை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள் என்று கூறினார். அவர் தெரிவித்ததாவது, இந்த ஆண்டு ஐ.பி.எல் போட்டிகளின் போது, 3 அணிகள் மட்டும் பங்கேற்கும் பெண்களுக்கான டி20 போட்டிகள் நடைபெற உள்ளது. இம்முறை  ஐ.பி.எல்  தொடரில் 10 அணிகள் விளையாட உள்ளன. கொரோனா தொற்று … Read more

தமிழக மீனவர்களின் 105 விசைப்படகுகள் ஏலம் – இலங்கை கடற்படை

கொழும்பு, எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை ஏலம் விடும் பணியை இலங்கை அரசு தொடங்கியது. கடந்த 2015 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை அரசால் தமிழக மீனவா்கள் கைது செய்யப்பட்டும் அவா்களின் படகுகள் பறிமுதல் செய்யப்பட்டும் உள்ளன. இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டுள்ள 105 படகுகள் நீதிமன்ற உத்தரவின்படி ஏலம் விடப்படும் என இலங்கை அரசு அறிவித்தது. இதற்கு தமிழக மீனவர்கள் மற்றும் … Read more

மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு அதிரடியாக சரிந்தது

மும்பை, மராட்டியத்தில் ஜனவரி மாத தொடக்கத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்தது. 2-வது வாரத்தில் மாநிலத்தில் தொற்று பாதிப்பு 40 ஆயிரத்தை தாண்டியது. இந்தநிலையில் கடந்த மாத இறுதியில் இருந்து தொற்று பாதிப்பு குறையத்தொடங்கியது.  இதில் இன்று  பாதிப்பு அதிரடியாக சரிந்தது. மாநிலத்தில் புதிதாக 6 ஆயிரத்து 436 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதுவரை மாநிலத்தில் 78 லட்சத்து 10 ஆயிரத்து 136 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 75 லட்சத்து 57 ஆயிரத்து 34 … Read more

ஜூனியர் உலகக்கோப்பையில் சவால்களை கடந்து வெற்றி: வி.வி.எஸ் லட்சுமண்

ஆண்டிகுவா, தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவரும், ஜூனியர் அணிக்கு நிறைய ஆலோசனைகளை வழங்கி வழிகாட்டியுமாக செயல்பட்ட முன்னாள் வீரர் வி.வி.எஸ்.லட்சுமண் கூறுகையில், ‘முதலில் ஜூனியர் அணியின் தேர்வு கமிட்டிக்கு பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். இது புதிய தேர்வு கமிட்டி. உறுப்பினர்களுக்கு சரியான வீரர்களை அடையாளம் கண்டு தேர்வு செய்வது சவாலாக இருந்திருக்கும். அதன் பிறகு தலைமை பயிற்சியாளர் ரிஷிகேஷ் கனித்கர் மற்றும் உதவியாளர்கள் இந்த அணியை சீரிய முறையில் ஒருங்கிணைத்தனர். அதைத் தொடர்ந்து இந்திய இளம் வீரர்கள் … Read more