ஆஸ்திரேலியாவில் வரும் 21-ம் தேதி முதல் சர்வதேச சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

மெல்போர்ன், கொரோனா பரவல் காரணமாக ஆஸ்திரேலியாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக சுற்றுலாப்பயணிகள் அந்நாட்டிற்குள் நுழைய அனுமதி அளிக்கப்படவில்லை. இந்த நிலையில், தற்போது தொற்று பரவலாக குறைந்து வருவதால், வரும் 21-ம் தேதி முதல் முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்ட சுற்றுலாப்பயணிகள் ஆஸ்திரேலியாவிற்குள் நுழைய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அந்நாட்டின் பிரதமர் ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளார். மேலும், வருகிற  வரும் 21-ம் தேதி முதல் சுற்றுலாத்தலங்கள் அனைத்தும் திறக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

ஒரே டோஸ் 'ஸ்புட்னிக் லைட்' தடுப்பூசிக்கு இந்தியாவில் அனுமதி!!

புதுடெல்லி, ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் ஸ்புட்னிக்-லைட் கொரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு செலுத்த இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு  ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய சுகாதார துறை மந்திரி  மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார். இது இந்தியாவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள 9வது கொரோனா தடுப்பூசி ஆகும். முன்னதாக கோவிஷீல்டு, கோவாக்சின், ஸ்புட்னிக் உள்ளிட்ட தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ள நிலையில் புதிதாக ஸ்புட்னிக்-லைட் தடுப்பூசியை மத்திய அரசு பயன்பாட்டிற்கு கொண்டு வர அனுமதி அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  இதன் … Read more

1000ஆவது ஒருநாள் போட்டியில் இந்தியா அபார வெற்றி!

ஆமதாபாத், இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று  நடைபெற்றது. இந்த போட்டி இந்தியாவின் 1,000-வது ஒருநாள் போட்டி என்பதால் கூடுதல் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த நிலையில், இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தார். அதன்படி பொல்லார்டு தலைமையிலான வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள … Read more

லதா மங்கேஷ்கரின் இனிய பாடல்கள் என்றும் நிலைத்திருக்கும்; ஹமீத் கர்சாய்

காபூல், பழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் இன்று காலமானார்.  இந்தியாவின் இன்னிசைக்குயில் என்று போற்றப்பட்ட அவருக்கு வயது 92.  அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து கடந்த மாதம் 8-ந்தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பாரத ரத்னா லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவக்கும் விதமாக 2 நாள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், 2 நாட்களுக்கு தேசிய … Read more

மத்திய அரசு அலுவலகங்களில் 100 சதவிகித பணியாளர்கள் பணிக்கு வர வேண்டும்

புதுடெல்லி, கொரோனா 3வது அலை காரணமாக மத்திய அரசு அலுவலகங்களில் பணியாற்றும் ஊழியர்களில் 50 சதவிகிதம் பேர் மட்டும் அலுவலகங்களுக்கு வந்து பணியாற்றினால் போதும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இப்போது கொரோனா தொற்று குறைய தொடங்கி உள்ளதால் மீண்டும் அனைத்து பணியாளர்களும் அலுவலகங்களுக்கு வந்து  பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாளை முதல் இந்த முறை செயல்படுத்தப்பட உள்ளது. இந்த தகவலை மத்திய மந்திரி டாக்டர் ஜித்தேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

முதல் ஒருநாள் போட்டி : ஆலோசனை கூறிய கோலி! ரிவ்யூ எடுத்த ரோகித்..

இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விராட் கோலி கழற்றி விடப்பட்டார். இதையடுத்து, ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது ஒரு வீரராக அணியில் தொடரும் விராட் கோலியின் செயல்பாடு எப்படி இருக்கும் என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தீவிர ஆலோசனை நடத்தினர்.  இதற்கு பதில் கிடைக்கும் விதமாக வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஒரு நிகழ்வு நடைபெற்றுள்ளது. முதலில் வெஸ்ட் இண்டீஸ் பேட் செய்தது. அப்போது 22 ஓவரில் … Read more

லதா மங்கேஷ்கர் மறைவு: சிறந்த பாடகர்களில் ஒருவரை துணைக்கண்டம் இழந்துவிட்டது – இம்ரான்கான் இரங்கல்

இஸ்லாமாபாத், பழம்பெரும் பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் இன்று காலமானார்.  இந்தியாவின் இன்னிச்சைக்குயில்  என்று போற்றப்பட்ட அவருக்கு வயது 92. அவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து கடந்த மாதம் 8-ந்தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  பாரத ரத்னா லதா மங்கேஷ்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவக்கும் விதமாக இரண்டு நாள் தேசிய துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில், இரண்டு நாட்களுக்கு தேசியக் … Read more

ஆந்திராவில் சாலை விபத்து: கார் மீது லாரி மோதியதில் 8 பேர் பலி

ஐதராபாத், ஆந்திர மாநிலத்தின் அனந்தபுரம் மாவட்டம் உருவகொண்டா அருகே வேகமாக வந்த இன்னோவா கார் மீது லாரி மோதியதில் பயங்கர விபத்து ஏற்பட்டது. அதில் காரில் வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த 2 குழந்தைகள் உட்பட 9 பேர் சம்பவ இடத்திலுயே உயிரிழந்தனர்.  ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. விபத்து பற்றி தகவல் கிடைத்ததும் உருவகொண்டா போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

மராட்டிய ஓபன் டென்னிஸ்; இந்தியாவின் போபண்ணா, ராம்குமார் மகுடம் சூடினர்

புனே, மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டிகள் பலேவாடி ஸ்டேடியத்தில் இன்று நடந்தது.  இதில், ஆடவர் இரட்டையர் இறுதிப்போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா மற்றும் ராம்குமார் ராமநாதன் ஆகியோர் ஆஸ்திரேலிய நாட்டின் லூக் சாவில்லே மற்றும் ஜான் பேட்ரிக் ஸ்மித் ஆகியோரை எதிர்த்து விளையாடினர். இந்த இறுதி போட்டி ஒரு மணிநேரம் மற்றும் 45 நிமிடங்கள் நீடித்தது.  இதில், 7-6, 3-6, 6-10 என்ற செட் கணக்கில் இந்திய வீரர்கள் வெற்றி பெற்று பட்டத்தை கைப்பற்றினர். இதன்மூலம், போபண்ணா … Read more

சிகரெட் துண்டுகளை எடுத்து குப்பையில் போடும் காகங்களுக்கு நிலக்கடலை பரிசு …!

ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் 2 பில்லியன் டன்களுக்கும் அதிகமான கழிவுகள் “உற்பத்தி” செய்யப்படுகின்றன. இப்படியாக நாளுக்கு நாள் பெருகி கொண்டே போகும் கழிவுகளில் ஒரு சிறிய பங்களிப்பு தான் – சிகரெட் துண்டுகள்.  இந்நிலைபாட்டில் “இதே சிகரெட் கழிவுகள்” சமாச்சாரத்தின் கீழ், ஒரு ஸ்வீடிஷ் நிறுவனத்தின் செயல் இணையத்தில் மிகவும் ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது; வைரல் ஆகி வருகிறது. சிகெரெட் துண்டுகளை குறிப்பிட்ட இடத்தில் உள்ள மெஷினில் காகங்கள் எடுத்து வந்து போடும். ஒவ்வொரு சிகரெட் துண்டுக்கும், சில … Read more