வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒருநாள் போட்டி; 16 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு!

ஆமதாபாத், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் ஆட்டங்களில் விளையாட உள்ளது.  இரு அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி ஆமதாபாத்தில் நாளை நடக்கிறது. இந்த போட்டி இந்திய அணியின் ஆயிரமாவது போட்டியாக அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இந்திய அணியில் ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஷ் அய்யர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. மேலும் வலை பந்துவீச்சாளர் நவ்தீப் சைனி … Read more

குளிர்கால ஒலிம்பிக் போட்டி: உக்ரைன் அணியின் தொடக்க விழாவில் தூங்கிய புதின்…!

பிஜீங், சீனாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் கோலாகலமாக தொடங்கின. வரும் 24-ம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டிகளில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஜப்பான், இந்தியா உள்பட 91 நாடுகளை சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.  குளிர் கால ஒலிம்பிக் போட்டிகள் தொடக்கவிழாவை யொட்டி சீன தலைநகர் பெய்ஜிங்கில் வண்ணமிகு வாண வேடிக்கைகடன் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. அதை மிக உயரமான 5 நட்சத்திர ஓட்டலில் தங்கியிருந்த பலர் ஆர்வமுடன் கண்டு களித்தனர்.  இந்தநிலையில், பெய்ஜிங் … Read more

பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவில்லை எனில் தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை – ஆசிரியர்கள் போராட்டம்

பர்னாலா, கொரோனா மூன்றாம் அலை பரவி வருவதை ஒட்டி பஞ்சாப்பில் இம்மாதம் 8ந்தேதி வரை பள்ளிகள் செயல்பட அனுமதி இல்லை என அம்மாநில அரசு தெரிவித்திருந்தது. இந்த நிலையில், பள்ளிகளை மீண்டும் வழக்கம்போல திறக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பஞ்சாப் மாநிலம் முழுவதும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என அனைவரும் போராட்டத்தில் இறங்கினர்.  பள்ளிகள் மீண்டும் திறக்கப்படவில்லையெனில் அவர்கள் வரும் சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்கப் போவதில்லை என்று கூறியுள்ளனர். பர்னாலா மாவட்டத்தில் மட்டும் சுமார் 100 … Read more

ஐ.எஸ்.எல் கால்பந்து: ஜாம்ஷெட்பூரை வீழ்த்தி பெங்களூரு வெற்றி

கோவா, 8-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டி (ஐ.எஸ்.எல்.) கோவாவில் நடந்து வருகிறது. கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி  கோவாவில் உள்ள 3 மைதானங்களில் ரசிகர்கள் இன்றி நடைபெறுகிறது. இந்த நிலையில், இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்களூரு அணியும், ஜாம்ஷெட்பூர் அணியும் மோதின. ஆட்டத்தின் முதல் நிமிடத்திலேயே ஜாம்ஷெட்பூர் அணியின் டேனியேல் சீமா ஒரு கோல் அடித்தார். இதையடுத்து பெங்களூரு அணியில் சுனில் சேத்ரி 54-ஆவது நிமிடத்தில் ஒரு கோலும், … Read more

நியூயார்க்கில் மகாத்மா காந்தியின் சிலை சேதப்படுத்தப்பட்டதால் பரபரப்பு

நியூயார்க், அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் உள்ள மன்ஹட்டன்  ஒற்றுமை சதுக்கத்தில் மகாத்மா காந்தியின் 8 அடி  உயர முழு வெண்க சிலை உள்ளது. கடந்த 1986- ஆம் ஆண்டு காந்தியின் 117-வது பிறந்த தினத்தை முன்னிட்டு காந்தி நினைவு சர்வதேச அறக்கட்டளையால் இந்த சிலை வழங்கபட்டது.  மகாத்மா காந்தியின் இந்த சிலையை மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இந்த சம்பவத்துக்கு அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும், அமெரிக்க அதிகாரிகள் கவனத்துக்கும் இந்த விவாகரத்தை … Read more

கர்நாடக அரசு அமேசான் நிறுவனத்துடன் ஒப்பந்தம்

பெங்களூரு, கர்நாடகத்தில் மகளிர் சுயஉதவி குழுக்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை விற்பனை செய்வது தொடர்பாக கர்நாடக அரசின் திறன் மேம்பாடு, தொழில்முனைவோர் துறை மற்றும் கர்நாடக மாநில கிராம வாழ்வாதார மேம்பாட்டுத்துறை மற்றும் அமேசான் நிறுவனம் இடையே ஒப்பந்தம் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை முன்னிலையில்  கையெழுத்தானது. இதில் முதல் மந்திரி பசவராஜ் பொம்மை பேசியதாவது:- தற்போதைய சூழலில் ஏழ்மை நமக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது, கிராமப்புற மக்களை மேம்படுத்துவது மட்டுமல்லாது வறுமையையும் ஒழிக்க வேண்டும். ஏழை மக்களுக்கு … Read more

புரோ கபடி லீக்: யு மும்பாவிடம் வீழ்ந்தது தமிழ் தலைவாஸ்

பெங்களூரு,  8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற முதல் லீக் ஆட்டத்தில் யு மும்பா அணியும், தமிழ் தலைவாஸ்  அணியும் மோதின. இந்த போட்டியானது இரவு 7.30 மணிக்கு தொடங்கியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி 35-33 என்ற புள்ளிகள் கணக்கில் யு மும்பாவிடம் தோல்வியடைந்தது. தற்போது தமிழ் தலைவாஸ் அணி 15 போட்டிகளில் விளையாடி 5 வெற்றியுடன் புள்ளிகள் பட்டியலில் ஆறாம் இடத்தில் உள்ளது.

அமெரிக்காவில் திருவள்ளுவர் பெயரில் சாலை…

வாஷிங்டன், உலக பொதுமறையான திருக்குறளை எழுதிய திருவள்ளுவரை சிறப்பிக்கும் வகையில், இந்தியாவின் தென்கோடி முனையான கன்னியாகுமரியில், தமிழக அரசு சார்பில் 133 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் பல்வேறு பள்ளிகள், கல்லூரிகள், சாலைகளுக்கு திருவள்ளுவரின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. இருப்பினும் திருவள்ளுவரின் சிறப்பு என்பது தேசங்களை கடந்து பரவி இருக்கிறது என்பதற்கு சான்றாக, தற்போது  அமெரிக்காவில் முதல் முறையாக ஒரு சாலைக்கு திருவள்ளுவரின் பெயர் சூட்டப்பட இருக்கிறது. அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தில் உள்ள பேர்பேக்ஸ் … Read more

உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு?

லக்னோ, உத்தரப்பிரதேசத்தின் துறவி முதல் மந்திரியான  யோகி ஆதித்யநாத்திடம் இரண்டு துப்பாக்கிகளுடன் ரூ.1.54 கோடி மதிப்பிலான சொத்தும் இருப்பது தெரிந்துள்ளது. இந்த தகவல், அவர் போட்டியிடும் கோரக்பூரில் தாக்கல் செய்த மனுவில் வெளியாகி உள்ளது. மேலும், யோகி ஆதித்யநாத்திடம்  தங்கநகைகளும் உள்ளன. இவர் தனது மனுத்தாக்கலில் குறிப்பிட்டபடி, ரூ.49,000 மதிப்பிலான தங்கசெயின் உள்ளது. இதர தங்கநகைகளின் மதிப்பு ரூ.26,000 என குறிப்பிட்டுள்ளார்.  தற்போதைய கையிருப்பாக ஒரு லட்சம் ரூபாய் ரொக்கமாக உள்ளது.  டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தின் எஸ்பிஐ … Read more

ஜூனியர் உலக கோப்பை இறுதிப்போட்டி; டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்!

ஆன்டிகுவா, 14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) வெஸ்ட்இண்டீசில் நடந்து வருகிறது. இதில் ஆன்டிகுவாவில் இன்று நடைபெறும் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.  யாஷ் துல் தலைமையிலான இந்திய அணி லீக் சுற்றில் தென்ஆப்பிரிக்கா, அயர்லாந்து, உகாண்டாவையும், கால்இறுதியில் வங்காளதேசத்தையும், அரைஇறுதியில் ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தி கம்பீரமாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. டாம் பிரிஸ்ட் தலைமையிலான இங்கிலாந்து அணி லீக் சுற்றில் வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், கனடாவையும், … Read more