உத்தர பிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்தின் சொத்து மதிப்பு எவ்வளவு?

லக்னோ, உத்தரப்பிரதேசத்தின் துறவி முதல் மந்திரியான  யோகி ஆதித்யநாத்திடம் இரண்டு துப்பாக்கிகளுடன் ரூ.1.54 கோடி மதிப்பிலான சொத்தும் இருப்பது தெரிந்துள்ளது. இந்த தகவல், அவர் போட்டியிடும் கோரக்பூரில் தாக்கல் செய்த மனுவில் வெளியாகி உள்ளது. மேலும், யோகி ஆதித்யநாத்திடம்  தங்கநகைகளும் உள்ளன. இவர் தனது மனுத்தாக்கலில் குறிப்பிட்டபடி, ரூ.49,000 மதிப்பிலான தங்கசெயின் உள்ளது. இதர தங்கநகைகளின் மதிப்பு ரூ.26,000 என குறிப்பிட்டுள்ளார்.  தற்போதைய கையிருப்பாக ஒரு லட்சம் ரூபாய் ரொக்கமாக உள்ளது.  டெல்லியில் நாடாளுமன்ற வளாகத்தின் எஸ்பிஐ … Read more

ஜூனியர் உலக கோப்பை இறுதிப்போட்டி; டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்!

ஆன்டிகுவா, 14-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) வெஸ்ட்இண்டீசில் நடந்து வருகிறது. இதில் ஆன்டிகுவாவில் இன்று நடைபெறும் மகுடம் யாருக்கு? என்பதை நிர்ணயிக்கும் இறுதிப்போட்டியில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.  யாஷ் துல் தலைமையிலான இந்திய அணி லீக் சுற்றில் தென்ஆப்பிரிக்கா, அயர்லாந்து, உகாண்டாவையும், கால்இறுதியில் வங்காளதேசத்தையும், அரைஇறுதியில் ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தி கம்பீரமாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. டாம் பிரிஸ்ட் தலைமையிலான இங்கிலாந்து அணி லீக் சுற்றில் வங்காளதேசம், ஐக்கிய அரபு அமீரகம், கனடாவையும், … Read more

பேஸ்புக் மதிப்பு பல ஆயிரம் கோடி ரூபாய் சரிவு

சான் பிரான்சிஸ்கோ, சமூக ஊடக நிறுவனமான பேஸ்புக், அடுத்தகட்டமாக மெய்நிகர் ஆன்லைன் உலகமான ‘மெட்டாவெர்ஸ்’ நோக்கி தன்னுடைய கவனத்தை செலுத்தி வருவதால், அதனை பிரதிபலிக்கும் வகையில், நிறுவனத்தின் பெயரை மெட்டா என சில மாதங்களுக்கௌ முன்பு மாற்றம் செய்தது. இந்நிலையில் வியாழன் காலை மெட்டாவின் பங்குகள் 26 சதவிகிதம் சரிந்தன, இது இந்த நிறுவனம் இதுவரை கண்டிராத மிகப்பெரியது வீழ்ச்சியாகும். நிறுவனத்தின் வரலாற்றில் முதன்முறையாக கடந்த காலாண்டில் மெட்டாவின் பயனர் எண்ணிக்கை குறைந்ததைத் தொடர்ந்து, இந்த திடீர் … Read more

ஆஷஸ் தோல்வி எதிரொலி: இங்கிலாந்து தலைமைப்பயற்சியாளர் விலகல்

லண்டன், இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாடியது. இதில் இங்கிலாந்து அணி தொடரை 4-0 என்ற கணக்கில் தொடரை இழந்தது. ஒரு போட்டியை போராடி டிரா செய்தது. ஆஷஸ் தொடரில் படுதோல்வி அடைந்ததால் இங்கிலாந்து அணியின் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தன. கேப்டன் ஜோ ரூட் மற்றும் அணி நிர்வாகம் மீது முன்னாள் வீரர்கள் பலர் பல்வேறு விமர்சனங்களை வெளிப்படுத்தி வந்தனர். இதையடுத்து, இங்கிலாந்து கிரிக்கெட்டின் … Read more

பாகிஸ்தானில் வழிபாட்டு தலங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட ஐ.எஸ் பயங்கரவாதிகள் இருவர் கைது

லாகூர்,  பாகிஸ்தானில் வழிபாட்டு தலங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட  ஐ.எஸ் பயங்கரவாதிகள் இருவரை அந்நாட்டு பாதுகாப்பு படையினர் கைது செய்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.  லாகூரில் இருந்து  300 கி.மீட்டர் தொலைவில் உள்ள மியான் சன்னு, கனேவல் பகுதியில் , வழிபாட்டு தலங்களில் தாக்குதல் நடத்தும் திட்டத்துடன் பயங்கரவாதிகள் சிலர் நடமாடுவது தெரியவந்தது.  இதையடுத்து, பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தில் உள்ளூர் போலீசாருடன் இணைந்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. இதில் இரண்டு பயங்கரவாதிகள் பிடிபட்டனர். பிடிபட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து இரண்டு … Read more